இது வாட்ச் இல்ல! அதுக்கும் மேல Samsung Galaxy Watch 7, Watch Ultra

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 30 ஜூலை 2024 16:39 IST
ஹைலைட்ஸ்
  • Galaxy Watch7ல் மூச்சுத்திணறல் கண்டறிதல் வசதி இருக்கிறது
  • இதய துடிப்பு கண்காணிப்பு, ஒழுங்கற்ற இதய துடிப்பு அறிவிப்பு செய்யும்
  • AI ஆல் இயக்கப்படும், இந்த சாதனம் பயனர் ஒரு உகந்த தீவிரத்தில் வேலை செய்ய உ

Samsung நிறுவனம் சமீபத்தில் கேலக்ஸி அன்பேக்ட் நிகழ்வை நடத்தியது. இதில் போல்டபில் போன்கள், ஆடியோ டிவைஸ்களை அறிமுகப்படுத்தியது. இதில் Galaxy Watch Ultra மற்றும் Galaxy Watch7 ஆகியவை அடங்கும். 

Galaxy Watch 7 அம்சங்கள் 

Galaxy Watch7 உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகிறது. இது 100க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி ஆப்களை கொண்டுள்ளது. வொர்க்அவுட் செய்ய தனி வசதிகள் இருக்கிறது. FDA மூலம் அங்கீகரிக்கப்பட்ட மூச்சுத்திணறல் கண்டறிதல், நிகழ்நேர இதய துடிப்பு கண்காணிப்பு, ஒழுங்கற்ற இதய துடிப்பு அறிவிப்பு (IHRN), எலக்ட்ரோ கார்டியோகிராம் (ECG) மற்றும் இரத்த அழுத்த கண்காணிப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது.  மேம்படுத்தப்பட்ட பயோஆக்டிவ் சென்சார் கொண்டுள்ளது. வளர்சிதை மாற்றத்தை கண்டறிய மேம்பட்ட கிளைகேஷன் எண்ட் வசதி உள்ளது. 

Galaxy Watch7 மூன்று மடங்கு வேகமான CPU வேகத்தையும் 30% மேம்படுத்தப்பட்ட சக்தி செயல்திறனையும் வழங்குகிறது. 

Galaxy Watch Ultra அம்சங்கள் 

Galaxy Watch Ultra மேம்பட்ட உடல்நிலை கண்காணிப்பை தருகிறது. டைட்டானியம் கிரேடு 4 சட்டகம் இருப்பதால் 10ATM நீர் எதிர்ப்பைக் கொண்டுள்ளது. இது கடினமான சூழல்களுக்கு ஏற்றது. Galaxy Watch7ல் உள்ள அதே உடல்நிலை கண்காணிப்பு வசதிகளை கொண்டுள்ளது. கூடவே அவசர காலங்களில் எச்சரிக்கை செய்தி அனுப்பும் வசதியும் உள்ளது.  Galaxy Watch Ultra மிக நீண்ட பேட்டரி ஆயுளைக் கொண்டுள்ளது. 100 மணிநேரம் மற்றும் உடற்பயிற்சி பயன்பாட்டில்  48 மணிநேரம் இயங்ககூடியது. வெயிலின் போதும் தெளிவாக தெரியும் டிஸ்பிளே உள்ளது. Galaxy Watch7 மற்றும் Galaxy Watch Ultra இரண்டும் Wear OS 5 இல் இயங்குகின்றன. Galaxy Watch உடன் Galaxy Ring இணைப்பது பேட்டரி ஆயுளை 30% வரை நீட்டிக்கும்.

கேலக்ஸி வாட்ச்7 மற்றும் வாட்ச் அல்ட்ராவின் விலை 

வாட்ச்7 40 மிமீ பிடி - ரூ. 29,999
வாட்ச்7 40 மிமீ எல்டிஇ - ரூ. 33,999
வாட்ச்7 44 மிமீ பிடி - ரூ. 32,999
வாட்ச்7 44 மிமீ எல்டிஇ - ரூ. 36,999
அல்ட்ரா 47மீ  - ரூ. 59,999

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Samsung Galaxy 7, Samsung Galaxy Watch Ultra
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்10 தொடர் விவரங்கள் கசிந்தன; புரோ மேக்ஸ் மாடலில் டைமன்சிட்டி 9600 புரோ சிப்செட் இடம்பெறலாம்!
  2. டெக்னோ கேமன் 50 அல்ட்ரா 5G டைமன்சிட்டி 7400 அல்டிமேட் SoC உடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  3. 150W சவுண்ட் மற்றும் 4 EQ மோட்களுடன் போர்ட்ரானிக்ஸ் பியூர் சவுண்ட் புரோ X2 ஹோம் தியேட்டர் இந்தியாவில் அறிமுகம்
  4. ஷியோமி பவர் பேங்க் 5i 20000mAh இந்திய அறிமுக தேதி உறுதி; முக்கிய அம்சங்கள், விவரங்கள் வெளியீடு!
  5. 9-ஸ்பீக்கர் JBL ஆடியோ சிஸ்டத்துடன் மோட்டோ பேட் 70 குரூவ் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!
  6. சாம்சங் 'பேக் டூ ஸ்கூல்' விற்பனை: கேலக்ஸி S26, டேப் S11 அல்ட்ரா உள்ளிட்ட சாதனங்களுக்கு தள்ளுபடி!
  7. கூகுளின் ஃபிட்பிட் ஏர் (Fitbit Air) அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக அமேசான் இந்தியாவில் கண்டறியப்பட்டது
  8. ரெட்மி நோட் 17 இந்திய அறிமுக தேதி கசிந்தது; முக்கிய அம்சங்களை டிப்ஸ்டர் உறுதிப்படுத்தியுள்ளார்!
  9. பெரிய பேட்டரியுடன் விரைவில் ஷியோமி பேட் 9 அறிமுகமாகலாம்; கசிந்த முக்கிய அம்சங்கள்!
  10. சாம்சங் கேலக்ஸி A55, A35 மாடல்களில் ஆண்ட்ராய்டு 17 சார்ந்த ஒன் UI 9 சோதனை பதிப்புகள் கண்டறியப்பட்டன!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.