ஜிபிஎஸ், ஹார்ட்-ரேட் சென்சாருடன் கூடிய இந்த ஸ்மார்ட்வாட்சின் விலை வெறும் ரூ.3,999தான்!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 3 ஆகஸ்ட் 2020 12:32 IST
ஹைலைட்ஸ்
  • Noise Colorfit Nav launched for Rs. 3,999 in India
  • The smartwatch will be available in green and black colours
  • Noise Colorfit Nav comes with built-in GPS

நாய்ஸ் கலர்ஃபிட் நேவ் ஸ்மார்ட்வாட்ச்சில் பத்து விதமான ஸ்போர்ட் மோட்ஸ் உள்ளன

ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய  நாய்ஸ் கலர்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச் வரும் 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் விலை மற்றும் பிற சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.

நாய்ஸ் கலர்ஃபிட் நிறுவனம் முதன்முதலாக ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்வாட்சை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த வாட்ச் பல மாதங்களாக சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிறது. 

இதில் ஹை ரெசொல்யூசன் டிஸ்பிளே, கஸ்டம் வாட்ச் ஃபேஸ், 10 ஸ்போர்ட்ஸ் மோட்ஸ், இதயத்துடிப்பு கணிப்பு, உறக்க நிலை கணிப்பு, சமூக வலைதளங்களின் நோட்டிபிகேஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளன. மேலும், மியூசிக் கன்ட்ரோல் வசதியும் உள்ளது. 

கலர்ஃபிட் நேவ் ஸ்மார்ட்வாட்ச் தண்ணீரில் இருந்து பாதுகாப்பு, தூசுக்களில் இருந்து பாதுகாப்பு போன்றவற்றில் நல்ல மதிப்பு பெற்றுள்ளது. குறிப்பாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது இந்த வாட்சைப் பயன்படுத்தலாம்.

இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் அமேசான் இணையதளத்திலும், gonoise.com என்ற கம்பெனியின் இணையதளத்திலும் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். இதன் விலை 3,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அமேசான் நிறுவனம் ஏற்கனவே தனது இணையதளத்தில் கலர்ஃபிட் நேவ் ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்காக பிரத்யேக பக்கத்தை உருவாக்கியுள்ளது. அதன்படி, இந்த வாட்ச்சில் 1.4 இன்ச் எல்சிடி தொடுதிரை உள்ளது. இதன் பிக்சல் 320x320 ஆகும். இதில் இன்பில்டு ஜிபிஎஸ் இருப்பதால், நடைபயற்சி செய்யும் போது எவ்வளவு தூரம் சென்றுள்ளோம் என்பதும் தெரியும். நமது உடலின் கலோரி இருப்புநிலையையும் அறிந்து கொள்ள முடியும்.

Advertisement

ஏற்கனவே கூறியபடி இதில் 10 விதமான ஸ்போர்ட்ஸ் மோட் உள்ளன. அதாவது வாக்கிங், சைக்ளிங், டான்சிங், பேட்மிண்டன், யோகா, ரன்னிங், ஸ்ட்ரென்த் டிரெயினங் உள்ளிட்ட மோட்கள் உள்ளன. இது அந்தந்த மோட்டுக்கு ஏற்றவாறு தகவல்களை வழங்கும்.


How are we staying sane during this Coronavirus lockdown? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ரியல்மி 16T 5G அறிமுக தேதி அறிவிப்பு; முக்கிய அம்சங்கள் மற்றும் நிறங்கள் வெளிப்படுத்தப்பட்டன
  2. கூகுள் போட்டோஸ்: என்ன அணியலாம் என முடிவு செய்ய உதவும் புதிய ஏஐ வார்ட்ரோப் அம்சம் அறிமுகம்
  3. கடந்த காலாண்டில் 20 மில்லியன் பயனர்களை இழந்த மெட்டா; இன்ஸ்டாகிராம் அல்காரிதத்தை மாற்றும் நிறுவனம்
  4. கூகுளின் ஜெமினி ஏஐ ஆப் விரைவில் விளம்பரங்களைக் காட்டத் தொடங்கலாம்: வருவாய் கூட்டத்தில் நிறுவன அதிகாரி சூசகம்
  5. ரேம் தட்டுப்பாட்டால் ஒன்பிளஸ், நத்திங் நிறுவனங்கள் மிட்-ரேஞ்ச், பிளாக்ஷிப் போன் விலையை உயர்த்தியதாக தகவல்
  6. அனைத்து பயனர்களுக்கும் பிக்சர்-இன்-பிக்சர் (அம்சத்தை உலகளவில் யூடியூப் விரிவுபடுத்துகிறது
  7. கூகுள் டிவியில் யூடியூப் ஷார்ட்ஸ், நேனோ பனானா மற்றும் ஜெமினி ஏஐ-யின் வீயோ அம்சங்கள் புதிய அப்டேட்டில் உள்ளன
  8. கூகுள் சேவைகளில் 350 மில்லியன் கட்டண சந்தாதாரர்கள்; தேடல் வினவல்கள் ‘சர்வகால உச்சத்தில்’ உள்ளன: சுந்தர் பிச்சை
  9. அமேசான் கிரேட் சம்மர் சேல்:சாம்சங்,சோனி உள்ளிட்ட 50-இன்ச் ஸ்மார்ட் டிவிகளில் அதிரடித் தள்ளுபடி மற்றும் டீல்கள்
  10. சிஎம்எஃப் வாட்ச் 3 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்: AMOLED திரை மற்றும் 13 நாட்கள் பேட்டரி ஆயுள் உறுதி!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.