விரைவில் இந்தியாவுக்கு வரும் Honor Magic Watch 2...!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 7 ஜனவரி 2020 17:31 IST
ஹைலைட்ஸ்
  • Honor Magic Watch 2 விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
  • இந்த வாட்ச் Kirin A1 SoC-யால் இயக்கப்படுகிறது
  • இதன் 46mm வேரியண்ட் இரண்டு வார பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறுகிறது

Honor Magic Watch 2 தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கும் திறன் கொண்டது

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Honor, இந்த மாதம் Honor 9X-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. கூடவே, Honor Watch Magic 2 இந்தியாவுக்கு வருவதாக ஹானர் இந்தியா சமீபத்தில் ட்வீட் செய்தது. அறிமுகம் செய்வதற்கான காலக்கெடுவை நிறுவனம் குறிப்பிடவில்லை என்றாலும், வெளியீடு விரைவில் நடக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளது. 

Honor Watch Magic 2 கடந்த ஆண்டு நவம்பரில் சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்வாட்சின் 44mm வேரியண்ட் CNY 1,099 (இந்திய மதிப்பில் ரூ. 11,300) மற்றும் 46mm வேரியண்ட் CNY 1,199 (இந்திய மதிப்பில் ரூ. 12,300) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிறுவனம், Flax Brown பதிப்பையும் CNT 1,399 (இந்திய மதிப்பில் ரூ. 14,300) விலையில் அறிமுகப்படுத்தியது.

Honor Magic Watch 2, stainless steel உருவாக்கத்தைக் கொண்டிருக்கும். 42mm வாட்சில் 1.2-inch circular AMOLED டிஸ்ப்ளே உள்ளது. அதன் 46mm யூனிட் பெரிய 1.39-inch டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த பெரிய வேரியண்ட், ஒரு பெரிய பேட்டரியில் 14 நாட்கள் பேட்டரி ஆயுளைக் கோருகிறது. அதே சமயம் 42mm வேரியண்ட் ஏழு நாள் பேட்டரி ஆயுளை வழங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் HiSilicon Kirin A1 SoC-யால் இயக்கப்படுகிறது மற்றும் ஜிபிஎஸ் ஆதரவு, அதே போன்று உடற்பயிற்சி கண்காணிப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இது தூக்கம் மற்றும் மன அழுத்தத்தைக் கண்காணிக்கும் திறன் கொண்டது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஒரு மைக் மற்றும் ஒரு உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கரைக் கொண்டுள்ளது. இது ஸ்மார்ட்போனுடன் ஜோடியாக இருக்கும்போது, பயனர்களின் தொலைபேசி அழைப்புகளை நேரடியாக வாட்சில் எடுக்க அனுமதிக்கிறது. இந்த வாட்சில் 4GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது. இது சாதனத்தில் பாடல்களை ஸ்டோர் செய்ய பயன்படுகிறது.

Honor Magic Watch 2-க்கான வெளியீட்டு தேதியை ஹானர் இதுவரை வெளியிடவில்லை. ஆனால், இது​ Honor 9X உடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கிறோம். .

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Honor Magic Watch 2, Honor Watch Magic 2
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஒப்போ ரெனோ 16 இந்திய அறிமுகம்; புதிய ஹெட்செட், பப்பிள் அசிஸரியுடன் வரக்கூடும்
  2. இந்தியாவில் ரூ. 15,000-க்கு கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள்: மோட்டோ G37 பவர் முதல் போகோ C85 மற்றும் பல
  3. சென்ஹைசர் HD 480 ப்ரோ பிளஸ் விமர்சனம்: அமைதியாகக் கவரும் திறமை
  4. வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய புதிய ஐஓஎஸ் (iOS) மற்றும் ஆண்ட்ராய்டு அம்சங்கள்
  5. ஜியோ AI கால் ஏஜென்ட் விளக்கம்: இது என்ன, எப்படி வேலை செய்கிறது, இதன் அம்சங்கள் மற்றும் பல
  6. டால்பி அட்மாஸ், 50W ஸ்பீக்கர்களுடன் ஹேயர் HQLED P7 புரோ ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் அறிமுகம்
  7. சாம்சங் கேலக்ஸி M47 5G இந்திய அறிமுகம் டீஸ் செய்யப்பட்டது, அமேசானில் உள்ள மைக்ரோசைட் வடிவமைப்பை உணர்த்துகிறது
  8. 50MP கேமராவுடன் ரெட்மி டர்போ 5 இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை சலுகைகள்
  9. ஒப்போ ரெனோ 16 உடன் ரெனோ 16c மாடலும் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பு: விவரக்குறிப்புகள் கசிந்தன
  10. 6,500mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 SoC உடன் விவோ Y6e 5G அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.