Boat Smart Ring இந்த சின்ன மோதிரத்துல இவ்வளவு நன்மையா?

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 31 ஜூலை 2024 16:37 IST
ஹைலைட்ஸ்
  • துருப்பிடிக்காத எஃகு பாடியை கொண்டுள்ளது Boat Smart Ring
  • இதயத் துடிப்பு, இரத்த ஆக்ஸிஜன் (SpO2), தூக்கம் மற்றும் மன அழுத்த அளவை கண்
  • போட் ஸ்மார்ட் ரிங் ஆக்டிவ் ஐந்து அளவுகளில் கிடைக்கும்

Photo Credit: Gadgets 360

boAt நிறுவனம் தனது புதிய boAt Smart Ring Active மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் Health Monitors கொடுக்கப்பட்டுள்ளன. Heart Rate Monitor, Sleep Monitor, Body Temperature Monitor, Blood Oxygen Levels Monitor போன்றவை இடம்பெற்றுள்ளது. துருப்பிடிக்காத எஃகு பாடியை கொண்டுள்ளது. போட் ஸ்மார்ட் ரிங் ஆக்டிவ் மூன்று வண்ண விருப்பங்கள் மற்றும் ஐந்து அளவுகளில் வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது ஒரு போர்ட்டபிள் காந்த சார்ஜிங் கேஸுடன்  இருக்கும். 

5ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ரேட்டிங்குடன் வருகிறது. தண்ணீரில் மூழ்கினாலும் பாதிப்படையாது. ஆபத்து காலங்களில் SOS அழைப்புகளைமேற்கொள்ளும் வசதியும் இருக்கிறது. இதில் உள்ள Smart Toch Control மூலம் வீடியோ ஆப் நேவிகேஷன், மியூசிக் பிளேபேக் மற்றும் கேமரா கட்டுப்பாடுகளை செய்ய முடியும். இதன் மூலம் ரிங் இணைக்கப்பட்டுள்ள செல்போனை கட்டுப்படுத்தலாம். இது எடை குறைவாக இருப்பதால், அணிவதற்கு மிகவும் சௌகரியமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். Smart Activity Tracking வசதியும் இருக்கிறது. வாக்கிங், ரன்னிங், ரைடிங் போன்ற ஆக்டிவிட்டிகளை டிராக்கிங் செய்து கொள்ள முடியும். 

ஒருமுறை சார்ஜ் செய்தால் 7 நாள் வரை பேட்டரி பேக்கப் வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்போது சிறப்பு சலுகை விலையில் ரூ. 2999க்கு விற்கப்படுகிறது. அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் போட் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: boAt, Boat Smart Ring, Smart Ring

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. லேசர் பிரிண்டர் சந்தை சரிந்து இங்க் டேங்க் பிரிண்டராக மாறும்: எப்சன் சிவக்குமார்
  2. சாம்சோனைட் வேபாயிண்ட் லக்கேஜ் டிராக்கர் சூட்கேஸ் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  3. சிப் டவுன்கிரேடு மற்றும் இரண்டு பின்புற கேமராக்களுடன் ஐபோன் ஏர் 2 வரக்கூடும் என டிப்ஸ்டர் தகவல்
  4. இந்தியாவில் ஜூலை-செப்டம்பரில் புதிய நடுத்தர ரக 4ஜி போன்கள் அறிமுகமாக வாய்ப்பு; பல மாடல்கள் எதிர்பார்ப்பு
  5. யார் இந்த குணால் ஷா? வில் கேத்கார்ட் விலகியதைத் தொடர்ந்து வாட்ஸ்அப்பின் புதிய தலைவராக கிரெட் நிறுவனர் நியமனம்
  6. மெட்டா அதிரடி: வாட்ஸ்அப் உலகளாவிய தலைவராக கிரெட் நிறுவன குணால் ஷா நியமனம்; வில் கேத்கார்ட் விலகுகிறார்
  7. ஒப்போ ரெனோ 16 இந்திய அறிமுகம்; புதிய ஹெட்செட், பப்பிள் அசிஸரியுடன் வரக்கூடும்
  8. இந்தியாவில் ரூ. 15,000-க்கு கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள்: மோட்டோ G37 பவர் முதல் போகோ C85 மற்றும் பல
  9. சென்ஹைசர் HD 480 ப்ரோ பிளஸ் விமர்சனம்: அமைதியாகக் கவரும் திறமை
  10. வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய புதிய ஐஓஎஸ் (iOS) மற்றும் ஆண்ட்ராய்டு அம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.