வோடபோன் ஐடியாவின் டபுள் டேட்டா ஆஃபர் மீண்டும் ஆரம்பம்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 7 மே 2020 14:06 IST
ஹைலைட்ஸ்
  • ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ரூ.299, ரூ.499 & ரூ.699-ல் டபுள் டேட்டா கிடைக்கும
  • இந்த ஆஃபர் வோடபோன் ஐடியாவின் அனைத்து வட்டங்களிலும் கிடைக்கும்
  • ரூ.399 மற்றும் ரூ.599 ரீசார்ஜ் பளான் சில இடங்களில் கிடைக்கிறது

வோடபோன் ஐடியா முதலில் அதன் டபுள் டேட்டா ஆஃபரை அதன் அனைத்து தொலைத் தொடர்பு வட்டங்களிலும் மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தியது

வோடபோன் ஐடியா மீண்டும் டபுள் டேட்டா ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறை நாடு முழுவதும் கொண்டுவந்துள்ளது. மார்ச் மாதத்தில் தொடங்கிய இந்த ஆஃபர், தொலைதொடர்பு ஆபரேட்டர்களின் அனைத்து வட்டங்களிலும் கிடைத்தது. சமீபத்தில் சில புதுப்பிப்புகள்  வந்த பிறகு, இந்த ஆஃபர் 9 தொலைத் தொடர்பு வட்டங்களாகக் குறைக்கப்பட்டது.

Vodafone India வலைத்தளத்தின் பட்டியலின்படி, ரூ.299, ரூ.449 மற்றும் ரூ.699 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானுடன் டபுள் டேட்டா ஆஃபர் இப்போது இந்தியா முழுவதும் கிடைக்கிறது. ஐடியா தனது Idea Cellular வலைத்தளத்திலும் இதே போன்ற அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னதாக, ரூ.299, ரூ.449 மற்றும் ரூ.699 என்ற இந்த டபுள் டேட்டா ஆஃபர் டெல்லி, மத்தியப் பிரதேசம், மும்பை, கொல்கத்தா, மேற்கு வங்கம், ஒடிசா, அசாம், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய 9 தொலைத் தொடர்பு வட்டங்களில் மட்டுமே கிடைத்தது.


ஆஃபரின் விவரங்கள்:

Vodafone Idea-வின் இணையதளத்தில் உள்ள பட்டியலின்படி, டபுள் டேட்டா ஆஃபரில், வாடிக்கையாளருக்கு 2 ஜிபி கூடுதல் அதிவேக டேட்டா கிடைக்கும். இந்த வசதி, ரூ.299, ரூ 449 மற்றும் ரூ .699 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானில் கிடைக்கும். 

ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ரூ.299-ன் கீழ், பயனருக்கு 28 நாட்கள் வரை செல்லுபடியாகும்.
ரூ.449 ரீசார்ஜ் ப்ளான் 56 நாட்கள் செல்லுபடியாகும்.
ரூ.699 ரீசார்ஜ் ப்ளான் 84 நாட்கள் செல்லுபடியாகும். 

இந்த மூன்று ப்ளான்களில் அன்லிமிடெட் குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வசதி கிடைக்கிறது. 

இது தவிர, வோடபோன் வாடிக்கையாளர்கள் இந்த ப்ளானுடன் இலவச வோடபோன் ப்ளே மற்றும் ஜீ 5 சந்தாவைப் பெறுகிறார்கள். மேலும், ஐடியா வாடிக்கையாளர்கள், ஐடியா மூவிஸ் மற்றும் டிவி செயலியை அணுகலாம், அதுவும் முற்றிலும் இலவசம்.


In 2020, will WhatsApp get the killer feature that every Indian is waiting for? Samsung Galaxy S20 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vodafone Idea, Vodafone, Idea Cellular, Vodafone India, double data offer
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியால 10 கோடி பேர் ChatGPT யூஸ் பண்றாங்களா? வாராந்திர பயனர்களில் இந்தியா 2-வது இடம்! மாணவர்கள் தான் டாப்
  2. Vivo X300 FE லான்ச் ரெடி! 90W சார்ஜிங் கூடவே 6500mAh பேட்டரியா? விவோ-வின் இந்த பட்ஜெட் பிளாக்ஷிப் போன் பத்தி தெரிஞ்சிக்கோங்க
  3. சாம்சங் ஃபோல்டபிள் போன்ல இனிமே அந்த பிரச்சனை இருக்காது! புதிய "Wide" டிசைன் ரெடியாகுது! இதோ லீக் ஆன தகவல்கள்
  4. Apple-ல இருந்து மலிவு விலையில ஒரு MacBook-ஆ? அதுவும் செம்ம கலர்ஸ்ல வருதா? ஆப்பிள் பிரியர்களுக்கு இதோ ஒரு செம்ம குட் நியூஸ்
  5. AI உலகமே டெல்லிக்கு வருது! இந்தியாவின் முதல் AI Impact Summit 2026 - எப்படி Register செய்வது? Full Schedule இதோ
  6. பட்ஜெட் விலையில ஒரு தரமான சம்பவம்! Lava Yuva Star 3 லான்ச் ஆகிடுச்சு! 5000mAh பேட்டரியோட ஒரு 'ஸ்டார்' போன்
  7. மியூசிக் லவ்வர்ஸ்க்கு ஒரு குட் நியூஸ்! Sony WF-1000XM6 லான்ச் ஆகிடுச்சு! நாய்ஸ் கேன்சலேஷன்ல இதுதான் இப்போ ராஜா
  8. சும்மா சில்லுன்னு ஒரு நியூஸ்! Panasonic 2026 AC Range இப்போ இந்தியாவில லான்ச் ஆகிடுச்சு! தூசி படியாது, கரண்ட் மிச்சம்
  9. பட்ஜெட் விலையில ஒரு ஃபிளாக்ஷிப் கில்லர்! Infinix Note 60 Ultra கீக்பெஞ்ச்ல லீக் ஆகிடுச்சு! 200MP கேமரா, சாட்டிலைட் கனெக்டிவிட்டினு மிரட்டுது
  10. இனி பெரிய அடாப்டர் தேவையில்லை! சியோமியோட குட்டி 'மினி GaN' சார்ஜர் லான்ச் ஆகிடுச்சு! கேபிளும் உள்ளயே இருக்கு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.