மூன்று ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான்களில் டபுள் டேட்டாவை வழங்குகிறது வோடபோன் ஐடியா!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 27 ஏப்ரல் 2020 13:33 IST
ஹைலைட்ஸ்
  • வோடபோன் இந்தியா & ஐடியா செல்லுலார் தளங்கள் மாற்றத்தைக் காட்டுகின்றன
  • இந்த சலுகை முதலில் மூன்று ரீசார்ஜ் ப்ளான்களுக்காக தொடங்கப்பட்டது
  • வோடபோன் ஐடியா சமீபத்தில் அதன் பலன்களை இரண்டு ப்ளான்களாக குறைத்தது

வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் டபுள் டேட்டா ஆஃர் மூலம் 4 ஜிபி அதிவேக டேட்டாவைப் பெறலாம்

வோடபோன் ஐடியா தனது வாடிக்கையாளர்களுக்காக டபுள் டேட்டா ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது. ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ரூ.299, ரூ.449 மற்றும் ரூ.699-க்கு இந்த ஆஃபர் பொருந்தும். இந்த புதிய டபுள் டேட்டா ஆஃபர், வோடபோன் ஐடியாவின் 9 டெலிகாம் வட்டத்தில் கிடைக்கும். இந்த ஆஃபர் அனைத்து வோடபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்களுக்கும் இல்லை என்பதாகும்.

டபுள் டேட்டாவை தவிர, வாடிக்கையாளர்கள் இந்த ஆஃபரில், வோடபோன் ப்ளே, ஜீ 5 மற்றும் ஐடியா மூவிஸுக்கு இலவச அணுகலைப் பெறுவார்கள். இதனுடன், வோடபோன் மற்றும் ஐடியா செயலிகள் மூலமாகவும் டிவி உள்ளடக்கம் காணப்படும்.


டபுள் டேட்டா ஆஃபரின் புதிய பலன்கள்:

அதிகாரப்பூர்வ பட்டியலின்படி, இந்த டபுள் டேட்டா சலுகையில், பயனர்கள் ரூ.299, ரூ.449 மற்றும் ரூ.699 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான்களில் 2 ஜிபி அதிவேக டேட்டாவைப் பெறுவார்கள்.  

ரூ.299 ப்ரீபெய்ட் ரீசார்ஜின் கீழ், பயனருக்கு தினமும் 4 ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கிறது. அதிவேக தரவைத் தவிர, இந்த ப்ளான் அன்லிமிடெட் குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குகிறது.

அதே நேரத்தில், ரூ.499 ரீசார்ஜ் ப்ளானில், பயனருக்கு 4 ஜிபி அதிவேக டேட்டாவுடன், அன்லிமிடெட் குரல் அழைப்புகள் மற்றும் 56 நாட்களுக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கிறது. 

Advertisement

இறுதியாக, ரூ.699 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானில், அன்லிமிடெட் குரல் அழைப்புகளுடன் 4 ஜிபி அதிவேக டேட்டாவையும், 84 நாட்கள் வரை 100 எஸ்எம்எஸ்ஸையும் பெறுவீர்கள்.

வோடபோன் ஐடியாவின் இந்த டபுள் டேட்டா ஆஃபர் டெல்லி, மத்தியப் பிரதேசம், மும்பை, கொல்கத்தா, மேற்கு வங்கம், ஒடிசா, அசாம், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு-காஷ்மீர் வட்டங்களில் கிடைக்கிறது. இந்த புதிய ஆஃபரை, Vodafone India மற்றும் Idea Cellular அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம். 


Is iPhone SE the ultimate 'affordable' iPhone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vodafone Idea, Vodafone, Idea, double data offer
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.