Vodafone Idea முழுமையாக இணைந்தது.. புதிதாக ‘Vi’ லோகோ அறிமுகம்

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 7 செப்டம்பர் 2020 16:37 IST
ஹைலைட்ஸ்
  • Vodafone Idea is now ‘Vi’
  • The company revealed the new logo and branding through a livestream
  • Vi marks the completion of Vodafone Idea merger

வோடஃபோன் ஐடியா அறிமுகம் செய்துள்ள புதிய Vi லோகோ


இந்தியாவில் ஜியோ வருகைகக்கு பின்னர் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எல்லாம் பெருத்த நஷ்டத்தைச் சந்தித்தன. சில நிறுவனங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டன. சில நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக கவர்ச்சிகரமான பல திட்டங்கள், டேட்டா வாய்ஸ்கால் ஆஃபர்களை அறிவித்தன.

அந்த வகையில், ஜியோவை எதிர்கொள்ளும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வோடஃபோன் நிறுவனமும் ஐடியா நிறுவனமும் ஒன்றாக கை கோர்த்தன. அதன்பிறகு, வோடஃபோன் ஐடியா என்றே பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தொலைத்தொடர்பு சேவைகள் வழங்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், தற்போது வோடஃபோன்-ஐடியா இரு நிறுவனங்களும் முழுமையாக இணைந்துள்ளது. அதற்கு அடையாளமாய் ஒரு புதிய லோகோவையும் அறிமுகம் செய்துள்ளது.

'Vi' என்பது தான் வோடஃபோன் ஐடியாவின் புதிய லோகோவாகும். இதில் V என்பது வோடஃபோனையும், i என்பது ஐடியாவையும் குறிக்கும். இனி சிம்கார்டுகள், வெப்சைட், பில் பேப்பர் உள்ளிட்ட அனைத்திலும் 'Vi' லோகோ இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் சிஇஓவும் நிர்வாக இயக்குநருமான ரவிந்தர் தக்கர் கூறுகையில், 'வோடஃபோன் ஐடியா இணைந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளன. அன்று முதல் இரு பெரும் நெட்வொர்க்குகளையும், வாடிக்கையாளர்களையும் ஒருங்கிணைத்து சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வந்தோம்.

அது தற்போது முழுமையாகியுள்ளது. Vi ஐ அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். 4ஜி நெட்வொர்க்கில் உலக தரத்திலான டிஜிட்டல் அனுபவங்களை 1 பில்லியன் இந்தியர்களுக்கு வழங்கி வருகிறோம். 5ஜி நெட்வொர்க் கட்டுமானத்திற்கும் டிஜிட்டல் நெட்வொர்க்குகளுக்கும் இந்த பிராண்ட் உறுதுணையாக இருக்கும்.'இவ்வாறு தெரிவித்தார்


Is Android One holding back Nokia smartphones in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vodafone, IDEA, Vodafone Idea, Vi, Vi Anand
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஒப்போ ரெனோ 15A 5G 7,000mAh பேட்டரி, 50-மெகாபிக்சல் மெயின் கேமராவுடன் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  2. அமேசான் பிரைம் டே 2026 விற்பனை தேதிகள் அறிவிப்பு, பிரைம் மெம்பர்ஷிப் விலை ரூ. 999 ஆகக் குறைந்தது
  3. அடுத்த பிளாக்ஷிப் போன்களுக்காக எக்ஸினோஸ் 2700 உருவாக்கத்தை சாம்சங் நிர்வாகி உறுதிப்படுத்தியதாக தகவல்
  4. மெமரி சிப் பற்றாக்குறைக்கு மத்தியில் ஐபோன், மேக் விலைகளை ஆப்பிள் உயர்த்தக்கூடும், டிம் குக் கூறுகிறார்
  5. ஒன்பிளஸ் Nord CE 6 போன்ற அதே பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகமாகிறது ஒன்பிளஸ் N6
  6. ஆண்ட்ராய்டு ஹோம் ஸ்கிரீன் மூலம் விரைவாக அணுக வாட்ஸ்அப் வாய்ஸ் நோட் விட்ஜெட்டில் வேலை செய்கிறது
  7. கூகுளின் ஆண்ட்ராய்டு 17 அப்டேட் இந்த பிக்சல் சாதனங்களுடன் இணக்கமானது: முழுமையான பட்டியலைப் பார்க்கவும்
  8. ஜெமினி, கிளாட் வளர்ச்சியால் சாட்ஜிபிடி சந்தைப்பங்கு முதல்முறையாக 50% கீழ் சரிந்தது
  9. கேலக்ஸி போன்களுக்கு AI செல்லப்பிராணி சுகாதார கருவியை விவாடெக் 2026 இல் அறிமுகம் செய்தது சாம்சங்
  10. மோட்டோரோலா ரேஸர் ஃபோல்டு மதிப்பாய்வு:இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகச்சிறந்த முதல் தலைமுறை மடிக்கக்கூடிய போனா?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.