வோடாபோனின் புதிய ரூ.999 ரீசார்ஜ்; 1 ஆண்டு வேலிடிட்டி, அன்லிமிடெட் அழைப்புகள் இன்னும் பல!

விளம்பரம்
Tasneem Akolawala, மேம்படுத்தப்பட்டது: 20 ஏப்ரல் 2019 16:48 IST
ஹைலைட்ஸ்
  • பஞ்சாப் வட்டத்துக்கு மட்டும் இந்த ரீசார்ஜ் பேக் அறிமுகமாகியுள்ளது
  • 1 ஆண்டு வேலிடிட்டி, அன்லிமிடெட் அழைப்புகளை இதன் மூலம் பெற முடியும்
  • ஏர்டெல் நிறுவனத்துக்குப் போட்டியாக இந்த பேக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

12 ஜிபி டேட்டா போதாது என்று நினைக்கும் வோடாபோன் வாடிக்கையாளர்கள், 1699 ரூபாய் பேக்-ஐ தேர்ந்தெடுக்கலாம்

வோடாபோன் நிறுவனம் புதிய ரீசார்ஜ் பேக்-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சப்ஸ்கிரைபர்ஸுக்கு ஓராண்டு வரை வேலிடிட்டி கிடைக்கும். 999 ரூபாய்க்கு இந்த புதிய பேக் மூலம் ரீசார்ஜ் செய்தால், தினமும் 100 குறுஞ்செய்திகள் அனுப்பிக் கொள்ளலாம். 365 நாட்களுக்கு வேலிடிட்டி பெறலாம். ஆனால், இந்த மொத்த வேலிடிட்டி காலத்துக்கும் 12 ஜிபி டேட்டாதான் கிடைக்கும். ஓராண்டு வேலிடிட்டி காலத்துக்கு இது மிகவும் குறைந்த டேட்டாவாகும். ஏர்டெல் நிறுவனம் 998 ரூபாய்க்கு இதைப் போன்ற ஒரு பேக்-ஐ அறிமுகம் செய்ததை அடுத்து, வோடாபோன் நிறுவனமும் புதிய பேக்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 

தற்போதைக்கு இந்த புதிய ரீசார்ஜை வோடாபோன் நிறுவனம், பஞ்சாப் வட்டத்துக்கு மட்டும் அறிமுகம் செய்துள்ளது. சீக்கிரமே மற்ற வட்டங்களுக்கும் இந்த சேவை கிடைக்கும். 
 

முன்னதாக ஏர்டெல் நிறுவனம் 998 ரூபாய்க்கு ஒரு ரீசார்ஜ் பேக்-ஐ அறிமுகப்படுத்தியது. அந்த பேக்கின் மூலம் ஒரு நாளைக்கு 100 குறுஞ்செய்திகள் அனுப்ப முடியும், 12 ஜிபி டேட்டாவைப் பெற முடியும். மேலும் ஏர்டெல் டிவி-க்கு இலவசமாக சப்ஸ்கிரைப் செய்து கொள்ள முடியும். அந்த பேக்கின் வேலிடிட்டி 336 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேக்கிற்கு போட்டியாகத்தான் வோடாபோன், 999 ரூபாய் பேக்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 

12 ஜிபி டேட்டா போதாது என்று நினைக்கும் வோடாபோன் வாடிக்கையாளர்கள், 1699 ரூபாய் பேக்-ஐ தேர்ந்தெடுக்கலாம். இதன் மூலம் அன்லிமிடெட் லோக்கல் அழைப்புகள், எஸ்.டி.டி அழைப்புகள் மற்றும் ரோமிங் அழைப்புகள் வசியைப் பெற முடியும். இதைத் தவிர்த்து ஒரு நாளைக்கு 1ஜிபி 4ஜி அல்லது 3ஜி டேட்டாவைப் பெற முடியும். 100 எஸ்.எம்.எஸ் மற்றும் வோடாபோன் ப்ளே ஆப்-க்கு சப்ஸ்கிரிப்ஷன் வசதிகளைப் பெற முடியும். இதன் வேலிடிட்டியும் 365 நாட்களாகும். ஹரியானா, கேரளா, மும்பை, பஞ்சாப் வோடாபோன் வட்டங்களில் இருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த பேக்-ஐ ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vodafone, Vodafone Prepaid
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  2. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  3. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  4. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
  5. ஸ்டார்லிங்க் இந்தியாவில் அறிமுகம்: அன்லிமிடெட் டேட்டா, விலை மற்றும் ஸ்பெஷல் ஆஃபர்ஸ்
  6. Vivo T4 Ultra: Dimensity 9300 சிப், பெரிஸ்கோப் கேமரா - ரிலீஸ் தேதி கசிந்தது
  7. AI லேப்டாப் தேடுறீங்களா? Acer Swift Neo - சிறப்பம்சங்கள், விலை, எங்க கிடைக்கும்னு முழு விவரம்!
  8. iQOO Neo 10: Snapdragon 8s Gen 4 & 7000mAh பேட்டரியுடன் இந்தியாவில் வெளியானது
  9. மடக்கும் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்! Motorola Razr 60 அடுத்த வாரமே இந்தியாவில்
  10. Vi-ன் அதிரடி: 'Nonstop Hero' திட்டம் டேட்டாவுக்கு இனி லிமிட் இல்லை
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.