3 மாதத்தில் 99 லட்சம் வாடிக்கையாளர்களைப் புதிதாக பெற்ற ஜியோ நிறுவனம்!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 1 ஆகஸ்ட் 2020 19:22 IST
ஹைலைட்ஸ்
  • Jio has released its quarterly data for Q1 FY 2020-21
  • Jio Platforms has added 99 lakh new users
  • It has reported a net profit growth of 182.8 percent YoY

தற்போது ஜியோவின் ஒட்டு மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 39.8 கோடியாக உயர்ந்துள்ளது

ஜியோ நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் சுமார் 1 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.

ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களைக் கவருவதற்காகவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகவும் பல புதிய திட்டங்களையும், ஆஃபர்களையும் அறிவித்து வருகிறது. இதன் பலனாக தற்போது முதல் காலாண்டில் 99 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.

2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டு விவரங்களை ஜியோ தரப்பில் வெளியானது. அதன்படி, ஜூலை 30 ஆம் தேதி வரையில் கிட்டத்தட்ட 99 லட்சம் வாடிக்கையாளர்கள் ஜியோவில் இணைந்துள்ளனர். தற்போது ஜியோவின் ஒட்டு மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 39.8 கோடியாக உயர்ந்துள்ளது. 

கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டோடு ஒப்பிடுகையில், இந்த நிதியாண்டில் 182.8 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளது ஜியோ நிறுவனம். குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பால் மற்ற நிறுவனங்கள் எல்லாம் முடங்கி இருக்க, ஜியோ மட்டும் உச்சத்துக்குச் சென்று விட்டது.

இதனிடையே வாடிக்கையார்களுக்காக ஜியோ பிஓஎஸ் லைட் என்ற ஆப் கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் மற்றவர்களுக்கு நாம் ரீசார்ஜ் செய்தால், 4.16 சதவீத கமிஷன் நமக்கு கிடைக்கிறது. மேலும், இன்கம்மிங் கால் வேலிடிட்டியும் அதிகரிக்கிறது. 
 

சராசரி வருவாயைப் பொறுத்தவரையில் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து, ஒரு மாதத்திற்கு 140.3 ரூபாய் ஜியோ நிறுவனம் வருவாய் ஈட்டியுள்ளது. கடந்தாண்டு 130.6 ரூபாய் வருவாய் ஈட்டிய நிலையில், இந்தாண்டு 7.4 சதவீதம் வருவாய் உயர்ந்துள்ளது. வயர்லெஸ் டேட்டாவைப் பொறுத்தவரையில் 30.2 சதவீதம் வளர்ச்சியயைக் கண்டுள்ளது. வாய்ஸ் டிராபிக் 13.2 சதவீதம் வளர்ச்சியைக் கண்டுள்ளது.


Why do Indians love Xiaomi TVs so much? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Jio, Reliance Jio, Jio 5G
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO 13: புதிய பச்சை நிறத்தில் ஜூலை 4-ல் லான்ச்! Snapdragon 8 Elite SoC, 120W சார்ஜிங்குடன் மாஸ்!
  2. AI+ Nova 5G, Pulse: ஜூலை 8-ல் மாஸ் லான்ச்! ₹5,000-க்கு 5G போன்? 50MP கேமராவுடன் வருகிறது!
  3. Vodafone Idea அதிரடி: இனி Family Plan-ல Netflix இலவசம்! டேட்டா, OTT பலன்கள் அள்ளி வழங்கும் Vi!
  4. அறிமுகமாகிறது Tecno Pova 7 Ultra 5G: Dimensity 8350, 144Hz AMOLED, 6000mAh பேட்டரியுடன் வருகிறது!
  5. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  6. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  7. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  8. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  9. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  10. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.