இனி ATM-லேயே ரீசார்ஜ்... ஜியோவின் அசத்தல் திட்டம்!!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 31 மார்ச் 2020 12:52 IST
ஹைலைட்ஸ்
  • ஜியோ வாடிக்கையாளர்கள் இப்போது ஏடிஎம்களில் ரீசார்ஜ் செய்யலாம்
  • நாடு முழுவதும் பல வங்கிகளுக்கு இந்த வசதி உள்ளது
  • ஃபீசர் போன் பயனர்களுக்கு ஜியோவின் புதிய முயற்சி மிகவும் உதவியாக இருக்கும்

ரீசார்ஜ் செய்வதற்கு OTP செயல்முறை எதுவும் இல்லை.

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸால், நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பால், காய்கனி மற்றும் மருந்து கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. ஜியோ வாடிக்கையாளர்கள், கடைகள் அல்லது விற்பனை நிலையங்களை நம்பியிருப்பவர்கள் ரீசார்ஜ் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

எனவே, ஏடிஎம் இயந்திரம் வழியாக மொபைலை ரீசார்ஜ் செய்யும் திட்டத்தை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. உங்கள் ஜியோ எண்ணை ரீசார்ஜ் செய்ய, ஏடிஎம் கார்டை கையில் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, ரீசார்ஜ் செய்வதற்கு OTP செயல்முறை எதுவும் இல்லை.

ஜியோ வாடிக்கையாளர்கள், தங்கள் பொபைல் எண்ணை, ஏயூஎஃப் வங்கி, ஆக்சிஸ் வங்கி, டிசிபி வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஐ.டி.பி.ஐ வங்கி, ஐ.டி.எஃப்.சி வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் ரீசார்ஜ் செய்யலாம். ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, மேற்கூறிய வங்கிகளுக்கு இடையில் 1,00,000-க்கும் மேற்பட்ட ஆன்-சைட் மற்றும் ஆஃப்-சைட் ஏடிஎம்கள் உள்ளன. 


ஏடிஎம்மில் மொபைல் எண்ணை ரீசார்ஜ் செய்யவது எப்படி?

  1. டெபிட் / கிரெடிட் கார்டை ஏடிஎம் இயந்திரத்தில் இன்சர்ட் செய்யவும்
  2. மெயின் மெனுவில் “ரீசார்ஜ்” ஆப்ஷனை டேப் செய்யவும்
  3. “ரீசார்ஜ்” மெனுவிற்கு வந்ததும், உங்கள் Jio மொபைல் எண்ணை உள்ளிடவும்
  4. மொபைல் எண்ணை உள்ளிட்ட பிறகு, ok / enter பொத்தானை அழுத்தி, பின்னர் உங்கள் PIN-ஐ enter செய்யவேண்டும்.
  5. இப்போது, ​​தேவையான ப்ளானில் ரீசார்ஜ் தொகையை enter செய்யவேண்டும்.
  6. ரீசார்ஜ் தொகையை உறுதிசெய்து enter அழுத்தவும்.
  7. ஏடிஎம் இயந்திரத்தின் திரை இப்போது ரீசார்ஜ் செய்தியைக் காண்பிக்கும். ரீசார்ட் தொகை உங்கள் கணக்கில் இருந்து டெபிட் செய்யப்பட்டு, உங்கள் ஜியோ மொபைல் எண்ணில் ரீசார்ஜ் உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவீர்கள்.

மொபைல் பேங்கின் கிடைக்காத ஃபீசர் போன் பயனர்களுக்கும், ஆன்லைனில் ரீசார்ஜ் செய்யும் ப்ளான்களுக்கு பணம் செலுத்துவதற்கும் இந்த அம்சம் மிகவும் உதவியாக இருக்கும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Jio, Reliance Jio, Coronavirus
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.