ஒரே மாதத்தில் 1 கோடி வாடிக்கையாளர்கள்; ஜியோ நிறுவனம் சாதனை!

விளம்பரம்
Written by Indo-Asian News Service மேம்படுத்தப்பட்டது: 21 மார்ச் 2019 17:38 IST
ஹைலைட்ஸ்
  • 93.24 லட்ச புதிய வாடிக்கையாளர்களை இணைத்து ஜியோ சாதணை!
  • ஜியோ நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 29 கோடியாக உயர்வு!
  • மொத்த வயர்லெஸ் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 118.19 கோடி!

பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தற்போது 11.53 கோடியாக உயர்ந்துள்ளது

இந்தியாவில் உள்ள மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களின் வாடிக்களையாளர் எண்ணிக்கையைப் பற்றி இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜியோ நிறுவனம் சுமார் 29 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு தொடர்ந்து முன்னிலைப் பெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம், 93.24 லட்ச வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் புதிதாக பெற்றுள்ளது. 

ட்ராய் வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் வயர்லெஸ் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, டிசம்பரிலிருந்து 59.74 லட்சம் அதிகரித்து 118.19 கோடியாக இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் 0.51 சதவிகிதம் வளர்ச்சியை வயர்லெஸ் வாடிக்கையாளர்கள் பிரிவில் இந்தியா பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தும் இருக்கும் 1,181.97 மில்லியன் வாடிக்கையாளர்களில் 1,022.58 மில்லியன் வயர்லெஸ் வாடிக்கையாளர்கள் கடந்த ஜனவரி மாதம் பயன்பாட்டில் இருந்ததாக ட்ராய் கூறுகிறது.

மத்திய அரசுக்குச் சொந்தமான பி.எஸ்.என்.எல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர் எண்ணிக்கையை ஜனவரி மாதம், 9.83 லட்சம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தற்போது 11.53 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் மற்றொரு முன்னணி மொபைல் நெட்வொர்க் நிறுவனமான பாரதி ஏர்டெல், இந்த ஆண்டு 1.03 லட்சம் வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்த்துத் தங்களது வாடிக்கையாளர் எண்ணிக்கையை 34.04 கோடியாக அதிகிரத்துள்ளது.

Advertisement

வோடஃபோன் ஐடியா நிறுவனம், ஜனவரி மாதம், 35.87 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 41.52 கோடியாக குறைந்துள்ளனர். 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Relaince Jio, TRAI
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.