491 ரூபாய்க்கு பி.எஸ்.என்.எல் பிராட்பேண்ட், தினசரி 20 ஜீபி டேட்டா

விளம்பரம்
Gadgets 360 Staff, மேம்படுத்தப்பட்டது: 5 ஜூலை 2018 17:37 IST
ஹைலைட்ஸ்
  • இந்த புதிய திட்டத்துக்கு 491 ரூபாய் மட்டுமே கட்டணம்
  • வாடிக்கையாளர் மையங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் கிடைக்கிறது
  • தனிநபர்களுக்கும், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கும் கிடைக்கும்

 

பாரத் சன்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் புதன்கிழமையன்று ரூ. 491 பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் சிக்கனமான பிராட்பேண்ட் திட்டம் என கூறப்படும் இந்த திட்டத்தில், தினசரி 20 ஜீபி டேட்டா வரை , 20 Mbps  வேகத்தில் கிடைக்கும். மேலும் இதில் அனைத்து நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதியும் அளிக்கிறது .

பிஎஸ்என்எல் இந்த திட்டத்தைப் பற்றிய அறிவிப்பை ட்விட்டர் பதிவில் வெளியிட்டது. பிஎஸ்என்எலின் உயர்மட்ட குழு உறுப்பினர் என்.கே மேத்தா, இந்த ரூ. 491 திட்டம் தனிநபர் மற்றும் சிறு தொழில்முனைவோர்க்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். இந்த புதிய திட்டம் வாடிக்கையாளர் மையங்கள், உரிமையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் கிடைக்கிறது.

சந்தையில் 4 ஜீ நெட்வொர்க்கான ஜியொவின் வருகைக்கு பிறகு ஏற்பட்ட போட்டியை தக்கவைக்க பிஎஸ்என்எல் தன்னுடைய மொபைல் மற்றும் பிராட்பேண்ட் திட்டங்களின் கட்டணங்களை மாற்றியமைத்து வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவையை அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்போது பிராட்பாண்ட் சேவையில் முன்னணியில் இருக்கும் பிஎஸ்என்எல் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக இந்த புதிய சேவை ஜியோ அறிமுகம் செய்கிறது.

பிஎஸ்என்எல் சமீபத்தில் அதனுடைய ஃபைபர் அல்லாத பிராட்பாண்ட் சேவைகளின் கட்டணத்தை மாதம் ரூ. 99 முதல் கிடைக்கும் வகையில் திருத்தம் செய்தது. கடந்த மாதம் இறுதியில் பிஎஸ்என்எல் புதிதாக லேப்டாப் மற்றும் கணிணி வாங்குபவர்களுக்கு இரண்டு மாதம் 20 எம்பீபிஎஸ் பிராட்பாண்ட் சேவையை இலவசமாக வழங்கியது. இந்த வாடிக்கையாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் ரூ. 99 மதிப்புள்ள பிஎஸ்என்எல் 45 ஜீபி திட்டத்திற்கு தகுதியுடையவர்கள் ஆகிறார்கள்.

ஜுன் மாதத்திலிருந்து பிஎஸ்என்எல் இரண்டு புதிய திட்டங்களை வழங்கி வருகிறது. இவை ஃபைப்ரோ காம்போ 777 திட்டத்தின் கீழ் 500 ஜீபி டேட்டா 50 எம்பீபிஎஸ் வேகத்திலும், ஃபைப்ரோ காம்போ 1277 திட்டத்தின் கீழ் 700 ஜீபி டேட்டா 100 எம்பீபிஎஸ் வேகத்திலும் கிடைக்கிறது.

 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: BSNL
The resident bot. If you email me, a human will respond. ...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  2. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  3. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  4. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
  5. ஸ்டார்லிங்க் இந்தியாவில் அறிமுகம்: அன்லிமிடெட் டேட்டா, விலை மற்றும் ஸ்பெஷல் ஆஃபர்ஸ்
  6. Vivo T4 Ultra: Dimensity 9300 சிப், பெரிஸ்கோப் கேமரா - ரிலீஸ் தேதி கசிந்தது
  7. AI லேப்டாப் தேடுறீங்களா? Acer Swift Neo - சிறப்பம்சங்கள், விலை, எங்க கிடைக்கும்னு முழு விவரம்!
  8. iQOO Neo 10: Snapdragon 8s Gen 4 & 7000mAh பேட்டரியுடன் இந்தியாவில் வெளியானது
  9. மடக்கும் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்! Motorola Razr 60 அடுத்த வாரமே இந்தியாவில்
  10. Vi-ன் அதிரடி: 'Nonstop Hero' திட்டம் டேட்டாவுக்கு இனி லிமிட் இல்லை
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.