BSNL-ன் 96, 236 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டங்கள், 10GB டெய்லி 4G டேட்டா!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 27 ஆகஸ்ட் 2019 15:39 IST
ஹைலைட்ஸ்
  • இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் 4G இடங்களில் மட்டுமே செயல்படுவுள்ளது
  • அழைப்பு அல்லது பிற சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை
  • BSNL குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இந்த சேவையை வழங்கும்

BSNL நிறுவனம் 4G வாடிக்கையாளர்களுக்காக இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது

பிஎஸ்என்எல் இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த திட்டங்கள் ஒரு நாளைக்கு 10GB 4G டாட்டாவை வழங்குகிறது. புதிய ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை ரூ. 96 மற்றும் ரூ. 236, மற்றும் முறையே 28 நாட்கள் மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. பிஎஸ்என்எல் இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அதன் 4G சேவைகளை வழங்கும் இடங்களில் மட்டுமே வழங்குகிறது. புதிய கவர்ச்சிகரமான திட்டங்கள் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் அவை டேட்டா சலுகைகளை மட்டுமே வழங்குகின்றன. முன்னதாக பிஎஸ்என்எல் சமீபத்தில் தனது 75 நாட்கள் செல்லுபடியாகும் 1,098 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுருந்தது.

இரண்டு புதிய பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்கள் - ரூ. 96 மற்றும் ரூ. 236 - ஒரு நாளைக்கு 10GB டேட்டா நன்மைகளை வழங்குகிறது. ரூ. 96 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் ரூ. 236 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும். மொத்தம் 280GB டேட்டா நன்மை பிஎஸ்என்எல் 96 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தால் வழங்கப்படுகிறது, மேலும் 840 ஜிபி டேட்டா நன்மை பிஎஸ்என்எல்  236 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தால் வழங்கப்படுகிறது.

டெலிகாம் டாக் (Telecom Talk) தகவலின்படி, பிஎஸ்என்எல் இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அதன் 4G டேட்டாவை சேவை உள்ள இடங்களில் மட்டுமே வழங்குகிறது. 4G நெட்வொர்க் கொண்ட பகுதிகள் என பிஎஸ்என்எல் செயலில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் மகாராஷ்டிரா உள்ளது, மேலும் அகோலா, பண்டாரா, பீட், ஜல்னா, ஒஸ்மானாபாத் மற்றும் அருகிலுள்ள பிற பகுதிகள் அதில் அடங்கும்.

இந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களுடன் அழைப்பு அல்லது பிற சலுகைகள் எதுவும் இலவசம் இல்லை, மேலும் புதிய சேவைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்று அறிக்கை கூறுகிறது. ஆனால் நிறுவனத்தின் இணையதளத்தில் இந்த தரவுத் திட்டங்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

முன்பு குறிப்பிட்டதுபோல, பி.எஸ்.என்.எல் சமீபத்தில் தனது 1,098 ரூபாய் அளவற்ற தொலைபேசி அழைப்பு (மும்பை மற்றும் டெல்லி வட்டங்கள் உட்பட), ஒரு நாளுக்கு 100 மேசேஜ், 75 நாட்கள் வெலிடிட்டியுடன் 375GB டேட்டாவை இந்த ப்ரீபெய்ட் திட்டம் வழங்குகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: BSNL
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. வாட்ஸ்அப் வெப்பில் குரூப் வீடியோ கால் வசதி அறிமுகம்; குவிக்HD, சத்தம் குறைப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன!
  2. விவோ T5x 5G ஃபியூஷன் ரெட் வண்ண மாடல் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  3. இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக ஒன்பிளஸ் N6x விற்பனை தேதி, முக்கிய அம்சங்கள் உறுதி
  4. மெட்டா ரே-பான் கிளாஸில் த்ரெட்ஸ், மெட்டா AI-ன் மியூஸ் ஸ்பார்க் போன்ற புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன!
  5. ஜியோ vs ஏர்டெல் ஜூன் 2026: எல்லோரையும் முந்திய நிறுவனம்! அதிக சிம் கார்டு விற்பனை செய்யும் டெலிகாம் எது?
  6. விவோ T5x 5G, ஒன்பிளஸ் நோர்ட் CE6 லைட் மற்றும் போக்கோ M8 5G: ₹30,000-க்கு கீழ் எது சிறந்தது?
  7. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 SoC, 7,200mAh பேட்டரியுடன் விவோ X300 E அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  8. விவோ T5e இந்தியாவில் 5,500mAh பேட்டரி, 8-மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  9. போக்கோ M8 பவர் இந்திய அறிமுக தேதி வெளியீடு: 3 நாட்கள் வரை பேட்டரி ஆயுள்!
  10. சியோமி 17T, ரெட்மி நோட் 15 & 15 சீரிஸ் போன்களின் விலை இந்தியாவில் உயர்வு: திருத்தப்பட்ட விலைகளைப் பார்க்கவும்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.