54 நாட்களுக்கு, 2GB டேட்டா, வெறும் 198 ரூபாயில், புதிய திட்டங்களை அறிவித்துள்ள பி.எஸ்.என்.எல்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 10 மே 2019 12:29 IST
ஹைலைட்ஸ்
  • பி.எஸ்.என்.எல்-ல் 198 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால் 2GB டேட்டா
  • 54 வேலிடிட்டி கொண்டது இந்த புதிய திட்டம்
  • 47 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால் 1GB டேட்டா

பி.எஸ்.என்.எல்-லின் புதிய திட்டங்கள் அதிக டேட்டாவை வழங்கவுள்ளன

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்று அழைக்கப்படும் பி.எஸ்.என்.எல் தன் வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவைகளை வழங்கவுள்ளது. இந்த புதிய அறிவிப்பில், முன்னதாக இருந்த திட்டங்களில், டேட்டா மற்றும் வேலிடிட்டி நாட்களைக் கூட்டியுள்ளது.

தொலைத்தொடர்பு சேவையில் ஜியோ, ஏர்டேல், ஐடியா போன்ற நிறுவனங்களுடன் உள்ள போட்டியில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள இந்த திட்டங்களை அறிவித்துள்ளது பி.எஸ்.என்.எல். ரூபாய் 47-க்கும் மற்றும் ரூபாய் 198-க்கும் இருந்த திட்டங்கள் தான், தற்போது மாற்றத்தை பெற்றிருக்கும் அந்த திட்டங்கள். மேலும் சில பம்பர் சலுகைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது இந்த நிறுவனம். அந்த புதிய திட்டங்கள், சலுகைகள் என்னென்ன?

மாற்றம் செய்யப்பட்ட திட்டங்களும், பம்பர் சலுகையும்!

முன்னதாக பி.எஸ்.என்.எல்-லில் 198 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால், ஒரு நாளைக்கு 1.5GB  டேட்டா கிடைக்கும். இந்த டேட்டா ப்ளான் 28 நாட்களுக்கு நீடிக்கும். ஆனால், தற்போது அறிவித்துள்ள திட்டத்தின்படி, நீங்கள் 198 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால், உங்களுக்கு ஒருநாளைக்கு 2GB என்ற அளவில், டேட்டா கிடைக்கும்.

மேலும் முன்னதாக 28 நாட்கள் என இருந்த இந்த ரீ-சார்ஜ்-ன் வேலிடிட்டியை, தற்போது 54 நாட்களாக உயர்த்தியுள்ளது இந்த நிறுவனம். இதன் மூலம், முதலில் மொத்த வேலிடிட்டி காலத்தில் 42GB டேட்டாவை வழங்கிக்கொண்டிருந்த இந்த திட்டம், இந்த புதிய அறிவிப்பால் தன் வேலிடிட்டி காலத்தில் மொத்தம் 108GB டேட்டாவை வழங்கவுள்ளது. வாடிக்கையாளர்கள் ,இந்த திட்டத்தின் வாயிலாக, முன்னதாக இருந்ததை விட இரட்டிப்பு டேட்டா அளவை பெறவுள்ளனர்.

தனது 47 ரூபாய்க்கு இருந்த திட்டத்திலும் சிறிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது இந்த நிறுவனம். இந்த திட்டத்தில் முன்னதாக 47 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால், உங்களுக்கு அளவற்ற தொலைபேசி அழைப்புகளை பேசிக்கொள்ளலாம் என்று அறிவித்திருந்த இந்த நிறுவனம், அந்த திட்டத்தின் வேலிடிட்டி அளவை 11 நாட்களாக வைத்திருந்தது. தற்போது, அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த புதிய அறிவிப்பில், அளவற்ற தொலைபேசி அழைப்புகளுடன், சேர்த்து 1GB டேட்டாவையும் வழங்கவுள்ளது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 9 நாட்கள் என அறிவித்துள்ளது இந்த நிறுவனம். 1GB டேட்டாவை கூடுதலாக வழங்கியிருந்தாலும், இந்த திட்டத்திற்கான கால அளவை குறைத்திருக்கிறது பி.எஸ்.என்.எல் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு பம்பர் சலுகையையும் வழங்கியுள்ளது இந்த பி.எஸ்.என்.எல் நிறுவனம். முன்னதாக ஏப்ரல் 30 வரை ரீ-சார்ஜ் செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 2.21GB கூடுதல் டேட்டாவை வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தது. தற்போது அந்த சலுகையை ஜூன் 30 வரை நீட்டித்து அளித்திருக்கிறது இந்த நிறுவனம். இதன்படி ஜூன் 30 வரை 186 ரூபாயிலிருந்து 1,699 ரூபாய் வரை நீங்கள் செய்யும் அனைத்து ரீ-சார்ஜ்களுக்கும் 2.21GB கூடுதல் டேட்டா கிடைக்கும்.

எனவே, பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களே, ரீ-சார்ஜ் செய்து, இந்த சலுகைகளை தவறாமல் பெற்றுக்கொள்ளுங்கள். 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: BSNL
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. போட் ஏர்டோப்ஸ் ப்ரோகிளிப் 52 மணிநேர பேட்டரியுடன் ரூ.1599 விலையில் இந்தியாவில் அறிமுகம்!
  2. லேசர் பிரிண்டர் சந்தை சரிந்து இங்க் டேங்க் பிரிண்டராக மாறும்: எப்சன் சிவக்குமார்
  3. சாம்சோனைட் வேபாயிண்ட் லக்கேஜ் டிராக்கர் சூட்கேஸ் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  4. சிப் டவுன்கிரேடு மற்றும் இரண்டு பின்புற கேமராக்களுடன் ஐபோன் ஏர் 2 வரக்கூடும் என டிப்ஸ்டர் தகவல்
  5. இந்தியாவில் ஜூலை-செப்டம்பரில் புதிய நடுத்தர ரக 4ஜி போன்கள் அறிமுகமாக வாய்ப்பு; பல மாடல்கள் எதிர்பார்ப்பு
  6. யார் இந்த குணால் ஷா? வில் கேத்கார்ட் விலகியதைத் தொடர்ந்து வாட்ஸ்அப்பின் புதிய தலைவராக கிரெட் நிறுவனர் நியமனம்
  7. மெட்டா அதிரடி: வாட்ஸ்அப் உலகளாவிய தலைவராக கிரெட் நிறுவன குணால் ஷா நியமனம்; வில் கேத்கார்ட் விலகுகிறார்
  8. ஒப்போ ரெனோ 16 இந்திய அறிமுகம்; புதிய ஹெட்செட், பப்பிள் அசிஸரியுடன் வரக்கூடும்
  9. இந்தியாவில் ரூ. 15,000-க்கு கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள்: மோட்டோ G37 பவர் முதல் போகோ C85 மற்றும் பல
  10. சென்ஹைசர் HD 480 ப்ரோ பிளஸ் விமர்சனம்: அமைதியாகக் கவரும் திறமை
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.