புதிய வாடிக்கையாளர்களுக்கு இலவச 'விங்ஸ் சேவை' வழங்கிய பி.எஸ்.என்.எல்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 5 பிப்ரவரி 2019 11:02 IST
ஹைலைட்ஸ்
  • புதிய வாடிக்கையாளர்களுக்கு 1 மாத கால இலவச சேவை
  • அதற்கு பின்னர் ரூ.1,099க்கு வருடாந்திர சந்தா
  • கூகுள் பிளேவில் அறிமுகம் ஆகியுள்ள புதிய செயலி

கூகுள் பிளேவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய செயலி

மாநிலத்திற்கு சொந்தமான பாரத் சான்சார் நிதம் நிறுவனம் (பி.எஸ்.என்.எல்) தனது விங்ஸ் இணைய வசதி பற்றிய அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டது. அதை தொடர்ந்து முன்னனி தனியார் துறையினர்க்கு சவால் விடும் வகையில் தனது செயலியை கூகுள் பிளேவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த விங்ஸ்  இணைய சேவையை இம்மாதம் இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து 1,099 ரூபாய்க்கு ஆரம்ப ஆஃபர்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.

மொபைல் எண்களை போல ஐபி முகவரி இருப்பதால், இணையத்தின் வழியாக கால்கள் செய்வது வாடிக்கையாளர்களுக்கு  எளிதாக இருக்கும் என நம்பப்படுகிறது.இச்சேவையை பயன்படுத்திக்கொள்ள, ஆன்லையினில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் அடையாள அட்டை, முகவரி ஆவணம் மற்றும் கனெக்சன்  பெரும் நபரின் புகைப்படம் தேவைப்படும். 10 டிஜிட் ஐபி முகவரி எண்களை தேர்வு செய்த பிறகு பின் எண்களை பதிவு செய்ய வேண்டும். அதை தொடர்ந்து கூகுள் பிளேவில் (பி.எஸ்.என்.எல்) செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.

மேலும் இலவச காலம் முடிவடைந்த பின்னர் ரூபாய்.1099 பணம் செலுத்தி இந்திய முழுவதும் கால்கள் செய்ய முடியும். மாணவர்கள், மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் பிஎஸ்யூ ஊழியர்களுக்கு கூடுதல் தள்ளுபடி அளிக்கப்படும்.

மொபைல் கவரேஜ் இல்லாத இடங்களில் இருக்கும் மக்களை கவர்வதே இந்த சேவையின் முக்கிய நோக்கமாகும். இந்த புதிய சேவை மூலம் ப்ராட்பாண்ட், வைஃவ்ய், 4ஜி/ 3ஜி இன்டர்நெட் ஆகியவற்றை பயன்படுத்தி போன் கால்கள் செய்ய முடியும். விங்ஸ் முதல் விங்ஸ் கஸ்டமர்களுக்கு வீடியோ காலிங் வசதி இடம்பெற்றிறுக்கும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: BSNL, BSNL WIngs App
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.