பி.எஸ்.என்.எல் (BSNL), 2.21ஜிபி கூடுதல் டேட்டா ‘பம்பர் ஆஃபர்’ ஜூன் 30 வரை நீட்டிப்பு

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 10 மே 2019 10:10 IST
ஹைலைட்ஸ்
  • குறிப்பிட்ட பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கே இந்த ஆஃபர்
  • கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இத்திடம் அறிமுகம் செய்யப்பட்டது
  • ஜனவரி 31 வரை முதன்முதலாக இத்திட்டம் நீட்டிக்கப்பட்டது

இந்த பம்பர் ஆஃபர் மூலம், ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666, ரூ.999 மற்றும் ரூ.1699 ஆகிய ப்ரீபெய்டு பேக்குகளை ரீசார்ஜ் செய்வோருக்கு 2.21ஜிபி கூடுதல் டேட்டா கொடுக்கப்படும். 

பி.எஸ்.என்.எல் நிறுவனம், தனது பம்பர் ஆஃபர் சேவையை ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த ஆஃபர் மூலம் குறிப்பிட்ட பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு கூடுதலாக 2.21ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. ஜனவரி மாதம், இந்த ஆஃபர், ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த ஆஃபர் ஜூன் 30 ஆம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் டேட்டா ஆஃபரை ரூ.186 முதல் ரூ.1699 வரையுள்ள ரீசார்ஜ்கள் மூலம் பெறலாம். 

இந்த பம்பர் ஆஃபர் மூலம், ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666, ரூ.999 மற்றும் ரூ.1699 ஆகிய ப்ரீபெய்டு பேக்குகளை ரீசார்ஜ் செய்வோருக்கு 2.21ஜிபி கூடுதல் டேட்டா கொடுக்கப்படும். 

இந்த திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதன்முதலாக அறிவிக்கப்பட்டது. ஜனவரி 31 ஆம் தேதியுடன் முடியவிருந்த இந்த தள்ளுபடியை, ஏப்ரல் 30 வரை முதலில் நீட்டித்தது பி.எஸ்.என்.எல். இப்போது ஜூன் 30 வரை இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இரண்டாவது முறையாக இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது மூலம், ரூ.186 மற்றும் ரூ.429 பேக்குகளை ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 3.21ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல ரூ.485 மற்றும் ரூ.666 பேக்குகளை ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 3.7ஜிபி டேட்டா கிடைக்கும். 

மேலும், ரூ.1699 பேக் மூலம் ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 4.21ஜிபி டேட்டா கிடைக்கும். தற்போதைக்கு இந்த ஆஃபர் சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டத்துக்கு மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement


 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: BSNL, BSNL recharge, BSNL Recharge Plan
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.