BSNL நெட்வொர்க்கில் 10 ஜிபி டேட்டாவுடன் ரூ.147 பிளான் அறிமுகம்!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 3 ஆகஸ்ட் 2020 10:38 IST
ஹைலைட்ஸ்
  • 147 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 10ஜிபி டேட்டா
  • ரூ.1,999 பிளானின் வேலிடிட்டி 439 நாட்களாக நீட்டிப்பு
  • ரூ.78, ரூ.551, ரூ.249 மற்றும் ரூ.447 திட்டங்கள் திரும்பப்பெறப்பட்டன

ரூ.78, ரூ.551, ரூ.249 மற்றும் ரூ.447 ஆகிய ப்ரீபெய்டு திட்டங்கள் திரும்பப் பெறப்படுகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி ரூ.147, ரூ.247 மற்றும் ரூ.1,999  திட்டங்களில் சிறப்பு ஆஃபர்கள் வழங்கப்படுகின்றன. 

ஜியோ, ஏர்டெல் ஆகியவற்றுக்கு அடுத்தப்படியாக பிஎஸ்என்எல் நெட்வொர்க்கும் பல விதமான ஆஃபர்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் சில சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, 147 ரூபாய்க்கு ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இதன் மூலம் 30 நாட்களுக்கு 10ஜிபி டேட்டா, அன்லிமிடேட் லோக்கல் கால், 250 நிமிடங்கள் எஸ்டிடி கால் பெற முடியும். இதன் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இதனை ஆக்டிவேட் செய்ய, வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போனில் இருந்து  STV COMBO147 என டைப் செய்து 123 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினால் போதும். மேலும், பிஎஸ்என்எல் இணையதளம், ரீசார்ஜ் கடைகள் மூலமாகவும் இந்த ஆஃபரைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதே போல், ரூ.247 மற்றும் ரூ.1,999 ரீசார்ஜ் பிளான்களின் வேலிடிட்டி, நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 247 ரூபாய் ரீசார்ஜின் வேலிடிட்டி 36 நாட்களும், 1,999 ரூபாய் வேலிடிட்டி 439  நாட்கள் வரையிலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. இந்தச் சலுகை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரையில் மட்டும் வழங்கப்படுகிறது. 

இதனிடையே ரூ.78, ரூ.551, ரூ.249 மற்றும் ரூ.447 ஆகிய ப்ரீபெய்டு திட்டங்கள் திரும்பப் பெறப்படுகின்றன. மேலும், ரூ.144, ரூ.792, ரூ.1,584 பதஞ்சலி ப்ரீபெய்டு திட்டங்களும் நிறுத்தப்படுகிறது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Is Nord the iPhone SE of the OnePlus world? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: BSNL Rs 147 prepaid recharge, BSNL, Bharat Sanchar Nigam
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. வீடே அதிரும் அளவுக்கு சவுண்ட்! அமேசான் சேலில் JBL Charge 6 மற்றும் Marshall Middleton அதிரடி விலையில்! டாப் டீல்கள் இதோ
  2. சினிமாட்டிக் சவுண்ட் இப்போ பட்ஜெட் விலையில! அமேசான் சேலில் Rs. 4,499 முதல் அதிரடி சவுண்ட்பார் டீல்கள்
  3. பழைய லேப்டாப்பை மாத்த இதுதான் சரியான நேரம்! அமேசான் சேலில் HP Omnibook 5 மற்றும் Lenovo Yoga Slim 7 அதிரடி விலையில்
  4. துணிஞ்சு நனைக்கலாம்.. எவ்வளவு வேணா பேசலாம்! 7000mAh பேட்டரி மற்றும் IP69 ரேட்டிங்குடன் மிரட்டலாக வந்த OPPO A6 5G
  5. பழைய நினைவுகளைப் புதுப்பிக்க ஒரு 'சினிமா' டச்! ஃபுஜிஃபிலிம் இன்ஸ்டாக்ஸ் மினி ஈவோ சினிமா லான்ச்! செம ஸ்டைலிஷ் லுக்
  6. பேக்கிங், கிரில்லிங், ரீ-ஹீட்டிங் - எல்லாம் ஒரே மெஷின்ல! அமேசான் சேலில் ₹4,990 முதல் பிராண்டட் மைக்ரோவேவ் ஓவன்கள்! டாப் டீல்கள் இதோ
  7. வெயில் காலம் வருது.. புது பிரிட்ஜ் ரெடியா? அமேசான் சேலில் LG, Samsung, Haier டபுள் டோர் மாடல்கள் அதிரடி விலையில்! டாப் டீல்கள் இதோ
  8. ஸ்பீடு தான் முக்கியம்! அமேசான் சேலில் ₹20,000-க்குள் மிரட்டலான லேசர் பிரிண்டர் டீல்கள்! ₹39,000 வரை தள்ளுபடி
  9. மோட்டோ ரசிகர்களுக்கு கொண்டாட்டம்! G67 மற்றும் G77 ஸ்மார்ட்போன்களின் டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் லீக்
  10. மக்களின் சாய்ஸ் மாறுதா? 2025-ல் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை நிலவரம் வெளியானது! Vivo கிங்.. Apple மிரட்டல் வளர்ச்சி
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.