ஏர்டெல் வாடிக்கையாளர்களே.. இனி 1ஜிபி டேட்டா 100 ரூபாய் ஆக உயரலாம்!!

ஏர்டெல் வாடிக்கையாளர்களே.. இனி 1ஜிபி டேட்டா 100 ரூபாய் ஆக உயரலாம்!!

இனி 1ஜிபி டேட்டா 100 ரூபாய் ஆக உயரலாம்!!

ஹைலைட்ஸ்
  • Airtel may increase tariff rates soon, chairman hints at revision
  • Airtel users may have to pay Rs. 100 per 1GB data
  • Airtel may look to increase the tariffs by more than 100 percent
விளம்பரம்

இந்தியாவில் ஜியோவின் வருகைக்குப் பின் ஏர்டெல் உள்ளிட்ட மற்ற நிறுவனங்கள் எல்லாம் கடும் நெருக்கடியைச் சந்தித்தன. ஜியோவுக்கு இணையாக மற்ற நிறுவனங்களும் வாய்ஸ்கால், டேட்டா பிளான்களின் விலையைக் குறைக்க வேண்டிய சூழலுக்கு உள்ளாகின. 

இந்த சூழலில் மொபைல் டேட்டாவைப் பொறுத்தவரையில், அதிகவிலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் சுனில் மிட்டல் கூறுகையில், 160 ரூபாய்க்கு 16ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விலைக்கு வெறும் 1.6ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றார். 

மேலும், அமெரிக்காவோ ஐரோப்பா நாடுகளைப் போன்றோ 50-60 டாலர் செலுத்த தேவையில்லை, அதே நேரத்தில் குறைந்தது, 2 டாலர் (இந்திய மதிப்பில் 160 ரூபாய்) என்பதும் நிலையானது இல்லை என்று தெரிவித்துள்ளார். அதாவது, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு 1ஜிபி டேட்டாவுக்கும் 100 ரூபாய் செலுத்த வேண்டும் என்று சுனில் மிட்டல் சூசகமாகக் கூறுகிறார்.

தற்போது ஏர்டெலில் தினமும் 1ஜிபி டேட்டா 24 நாட்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் 24 நாட்களுக்கு மொத்தமே 2.4ஜிபி டேட்டா மட்டும் தான் கிடைக்கக்கூடும்.

இதே போல், ARPU எனப்படும் உள்ளடக்க நுகர்வு மூலம் ஒரு பயனரிடமிருந்து பெறும் வருவாய் 300 ரூபாய் வரையில் உயர்த்தப்படலாம். மொபைல் தவிர்த்து மற்றபடி டிவி, திரைப்படங்கள், பொழுதுபோக்கு அம்சங்களுக்கு டேட்டா வேண்டுமென்றால், அதற்கு ஏற்றாற் போல் இணையசேவை வைத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.


Should the government explain why Chinese apps were banned? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Airtel, Bharti Airtel, Sunil Bharti Mittal
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »