வெளியானது ஆப்பிள் நிறுவன iOS 11.4 அப்டேட்!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 1 ஜூன் 2018 18:15 IST
ஹைலைட்ஸ்
  • iOS 11.4 அப்டேட்டை ஆக்கிள் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது
  • இந்த அப்டேட்டில் AirPlay 2 வசதி வந்துள்ளது
  • இன்னும் பல புதிய விஷயங்கள் இந்த அப்டேட்டில் இருக்கின்றது.

ஆப்பிள் நிறுவனத்தின் iOS 11.4 அப்டேட் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அப்டைட்டை ஐபேட், ஐபோன், ஐபாட் போன்ற டச் மாடல்களில் தரவிறக்கிக் கொள்ளலாம். இந்த அப்டேட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட AirPlay 2 வசதி கொடுக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த அப்டேட் குறித்து ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து வந்த நிலையில், தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 

இந்த அப்டேட் மூலம் ஒரே நேரத்தில் பல அறைகளில் இருக்கும் ஆடியோ சிஸ்டங்களை நிர்வகிக்க  முடியும். மேலும், இந்த அப்டேட் மூலம் iCloud-ல் செய்திகளை சேமித்து வைத்துக் கொள்ள முடியும். இது மட்டும் அல்லாமல், ஆப்பிள் நிறுவன சாதனங்களை இன்னும் மெறுகேற்றும் விதத்தில் பல விஷயங்கள் செய்யப்பட்டு உள்ளன. 

ஐபோன் 5s அல்லது அதற்கு மேல் வந்த மாடல் ஸ்மார்ட் போன்களில் iOS 11.4 அப்டேட் செய்து கொள்ளலாம். அதேபோல, iPad Air, iPad mini 2 ஆகியவற்றிலும் இந்த அப்டேட்டை தரவிறக்கம் செய்ய முடியும். 

இந்த புதிய அப்டேட்டின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது AirPlay 2 வசதி தான். இந்த வசதி மூலம் வீட்டில் இருக்கும் அனைத்து ஆப்பிள் நிறுவன ஆடியோ சிஸ்டங்களையும் ஒரு சொடக்கில் கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம், வீட்டின் அனைத்து இடங்களிலும் ஒரே பாடலை ப்ளே செய்ய முடியும். ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு பாடல்களை மாற்றவும் முடியும். 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: , Apple, AirPlay 2
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியாவில் PS5 ஸ்டாண்டர்ட் எடிஷன் விலையை சோனி ரூ. 15,000 உயர்த்தியுள்ளது
  2. ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவில் நத்திங் ஃபோன் (4a) விலை ரூ. 3,000 உயரும் என தகவல்
  3. ஆசஸ் பேட் இந்திய விலை, ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகைகள் அறிவிப்பு; ஆகஸ்ட் 6 முதல் விற்பனை தொடங்குகிறது
  4. சாம்சங்கின் 50MP கேமரா கொண்ட மடிக்கக்கூடிய ஃபோனுக்கு ₹19,000 தள்ளுபடி; சமீபத்திய சலுகையைப் பாருங்கள்
  5. AI உதவியுடன் இன்டர்வியூவில் வென்று ₹1.5 கோடி வேலை பெற்ற நபர்; தனது உத்தியைப் பகிர்ந்துள்ளார்!
  6. ஜியோ ஹோம் 2 மாத திட்டத்தில் 1 மாதம் இலவசம்: 100Mbps இன்டர்நெட், 12 OTT ஆப்ஸ்கள் இலவசம்!
  7. அறிமுகத்திற்கு முன் கசிந்தது விவோ S2 விலை, முழு விவரங்கள் மற்றும் வடிவமைப்பு!
  8. கூகிள் இந்தியாவில் 'ஆஸ்க் கூகிள் பே' என்ற ஜெமினி AI சாட்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது
  9. Paytm தனது செயலியில் பகிரப்பட்ட குழுச் செலவுகளுக்காக பில்களைப் பிரிக்கும் வசதியை அறிமுகப்படுத்துகிறது
  10. ஜெமினியால் இப்போது கூகிள் டாக்ஸில் உள்ள கருத்துகளைப் படிக்கவும்,சுருக்கவும்,பதில்களை வரைவு செய்யவும் முடியும்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.