'அட்வான்ஸ்டு சர்ச்' வசதியைப் பெறுமா வாட்ஸ் ஆப்? ஃபிளாஷ் ரிப்போர்ட்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 2 மார்ச் 2019 11:56 IST
ஹைலைட்ஸ்
  • வாட்ஸ் ஆஃப் நிறுவனம் தற்போது ஒரு புதிய ஆப்டேட்டில் ஈடுபட்டு வருகிறது!
  • இந்த அப்டேட் முதலில் ஐஓஎஸ் தளத்தில் வெளியாகுகிறது.
  • இதன் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள் என எல்லாவற்றையும் தேட முடிகிறது

ஐஓஎஸ் போன்களில் சோதனையில் இருக்கிறது இந்த அப்டேட்

வாட்ஸ் ஆப் செயலி தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு பல அப்டேட்களை கொண்டுவர முயற்சி செய்து வருகிறது. டார்க் மோட்( Dark Mode ), குரூப் இன்விடேஷன் (Group Invitation) ஆகிய அப்டேட்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது புதிதாக 'அட்வான்ஸ்டு சர்ச்' (Advanced Search) வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த வசதி, ஐஓஎஸ் தளத்தில் தற்போது சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் விரையில் அண்ட்ராய்டு போன்களுக்கும் கொண்டுவரப்படும் என எதிர்பார்கப்படுகிறது. இந்த புதிய அப்டேட், வாடிக்கையாளர்களை புகைப்படங்கள், ஆடியோக்கள், ஜிஃப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நம்மால் தேட முடியும்.

மேலும் இந்த அமைப்பின் மூலம் நமது சமீபத்திய தேடல்களையும் நம்மால் பார்க்க முடியும்.

வாட்ஸ் ஆப்பில் ஏற்கெனவே நமது 'சாட்களை' தேடும் வசதியுள்ள நிலையில், இந்த புதிய 'அட்வான்ஸ்டு சர்ச்' மூலம் பல சாட்கள் மற்றும் புகைப்படங்களை நம்மால் தேட முடியும். வலது புறத்தில் இருக்கும் இந்த டாப்-ஐ தேர்வு செய்த பின்னர் இதுவரை போனில் உள்ள மொத்த ஃபைல்களையும் தேடியெடுக்க முடியும்.

மேலும் இதில் அறிமுகமாகியுள்ள 'ப்ரிவியூ' வசதி மூலம் தேர்வு செய்த ஃபைலை யாருக்காவது அனுப்புவதற்கு முன்னர் சரியானதா எனப் பார்க்க முடியும். மேலே குறப்பிட்டுள்ளதுபோல கட்டமைப்பில் உள்ள  இந்த அப்டேட்டை பெற ஐஓஎஸ் பயனர்கள் 'டெஸ்ட் ஃபிளைட்' (Test Flight) செயலியை பயன்படுத்த வேண்டும்.

Advertisement

இந்த புதிய அப்டேட் வாட்ஸ் ஆப்பை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்கப்படுகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp, Advanced Search, iOS, iPhone
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.