கொரோனா வைரஸ் காரணமாக ரோபோக்களுக்கு பட்டமளிப்பு விழா - சமூக விலகலை கடைபிடிக்கும் ஜப்பான்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 8 ஏப்ரல் 2020 11:35 IST
ஹைலைட்ஸ்
  • ஜப்பானில் பட்டமளிப்பு விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன
  • இருப்பினும், ஒரு பள்ளியில் மாணவர்கள் வீட்டில் இருந்து கலந்து கொண்டனர்
  • ரோபோக்கள் "நியூமி" என்று அழைக்கப்படுகின்றன

பிபிடி தலைவர் கெனிச்சி ஓமே 'நியூமி' ரோபோக்களுடன் இணைக்கப்பட்ட ஐபாட்களுடன் போஸ் கொடுக்கிறார்

கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில், ஜப்பானில் பட்டமளிப்பு விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால், ஒரு பள்ளியில், மாணவர்கள் வீட்டில் இருந்தே ரோபோவை கட்டுபடுத்தி, சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் தொலைதூரத்தில் இருந்து கலந்து கொண்டனர். 

டோக்கியோவில் உள்ள பிசினஸ் பிரேக்ரட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில், "நியூமி" என்ற 4 ரோபோக்கள் மட்டுமே பட்டமளிப்பு தொப்பிகள் மற்றும் அங்கிகளை அணிந்திருந்தன. அந்த ரோபோக்களின் "முகங்களில்" டேப்லெட் வைத்து, அதன் மூலம் 4 பட்டதாரிகளும் இணைந்திருந்தனர். இதனால் ரோபோக்களும் தொற்றுநோயிலிருந்து சமூக தூரத்தை பயிற்சி செய்ய முடியும். 

Advertisement

ரோபோக்கள் டிப்ளோமோ பட்டம் பெறுவதற்காக மேடைக்கு செல்லும் போது, பள்ளி ஊழியர்கள் கைதட்டி, "வாழ்த்துக்கள்!" தெரிவித்தனர். பல்கலைக்கழகத் தலைவர் கெனிச்சி ஓமே (Kenichi Ohmae), சான்றிதழ்களை ரோபோவின் நடுப்பகுதியில் வைத்தார். இந்த ரோபோக்களை, மாணவர்கள் வீட்டில் இருந்து மடிக்கணினிகள் மூலம் கட்டுப்படுத்தினர்.

"ரோபோக்கள் மூலம் சான்றிதழ் பெறுவது உண்மையிலேயே ஒரு புதிய அனுபவம்" என்று கசுகி தமுரா (Kazuki Tamura) முதுகலை பட்டப்படிப்பு டிப்ளோமா பெறும் போது கணினி வழியாக கூறினார்.

வைரஸ் தொற்றால், கூட்டங்களைத் தவிர்க்க மற்ற பள்ளிகளும் இந்த அணுகுமுறையை பின்பற்றும் என்று பல்கலைக்கழகம் நம்புகிறது.

Advertisement

© Thomson Reuters 2020

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Newme, Coronavirus, Japan
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.