15 ஆண்டுகள் கழித்து பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்… எப்படி பார்ப்பது?

விளம்பரம்
Written by Ravi Sharma மேம்படுத்தப்பட்டது: 31 ஜூலை 2018 20:42 IST
ஹைலைட்ஸ்
  • 15 முதல் 17 ஆண்டுக்கு ஒருமுறைதான் இந்த நிகழ்வு நடக்கும்
  • உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் இந்த அதிசய நிகழ்வைப் பார்க்கலாம்
  • நாசா, அதன் யூ-டியூப் சேனலில் இந்த நிகழ்வை நேரலை செய்கிறது

ஏறக்குறைய 15 ஆண்டுகள் கழித்து பூமிக்கு மிக அருகில் இன்று இரவு செவ்வாய் கிரகம் இருக்கும். பூமிக்கு ஒரு பக்கத்தில் சூரியனும், மறு பக்கத்தில் செவ்வாய் கிரகமும் இருக்கும். இந்த மூன்றும் நேர் கோட்டில் இன்று நிலை கொள்ளும். இதைவிட்டால் வரும், 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தான், செவ்வாய் கிரகம் மீண்டும் உலகுக்கு அருகில் வரும். இதைப் போன்ற ஒரு சம்பவம் 15 முதல் 17 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடக்கும். கடந்த 27 ஆம் தேதி சந்திர கிரகணத்தைப் பார்த்தவர்கள், செவ்வாய் கிரகத்தையும் பார்த்திருக்க முடியும். அப்போது, செவ்வாய், நிலாவுக்குக் கீழேதான் இருந்தது.

வரும் செப்டம்பர் மாதம் வரை செவ்வாய் கிரகத்தை நாம் பார்க்க முடியும். ஆனால், இன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் அது உலகை விட்டு விலகிக் கொண்டே போகும். அதனால் தினமும் முன்பைப் பார்த்ததை விட சிறியதாகிக் கொண்டே போகும். 
 

 

இந்த அதிசயத்தை எங்கிருந்து கச்சிதமாக பார்க்கலாம்?

செவ்வாய் கிரகம் பூமிக்கு அருகில் வருவதை தெற்கு அரைக்கோளத்திலிருந்து பார்ப்பது தான் சிறந்தது. இதைவைத்துப் பார்த்தால், இந்தியா அதற்கு ஏற்ற இடம் இல்லைதான். ஆனால், செவ்வாய் கிரகத்தை இந்தியாவின் எந்த இடத்திலிருந்து வேண்டுமானால் பார்க்க முடியும். ஆனால், தென்னாப்பிரிக்காவிலிருந்தோ, ஆஸ்திரேலியாவிலிருந்தோ பார்ப்பது போல நம்மால் பார்க்க முடியாது. செவ்வாய் கிரகத்தைப் பார்ப்பதற்கு தொலைநோக்கி கருவி அவசியம். அப்படி இருந்தும் மேக மூட்டத்தால் பார்க்க முடியாமல் கூட போகலாம். 

 

 

அதே நேரத்தில் இந்த அதிசய நிகழ்வை நாசா, தனது யூ-டியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தைப் பார்க்க கீழே இருக்கும் வீடியோவை சொடக்குங்கள். காலை சூரியன் உதிக்கும் வரை செவ்வாய் கிரகத்தைப் பார்க்க முடியும். 

Advertisement

 

 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஜேபிஎல் லைவ் 780என்சி விமர்சனம்: ஒரு முழுமையான தொகுப்பா?
  2. ஆகஸ்ட் 11 வெளியீட்டிற்கு முன்னதாக ரெட்மி K100 ப்ரோ மேக்ஸின் முக்கிய விவரக்குறிப்புகள், அம்சங்கள் கசிந்துள்ளன
  3. ஃபிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல்: நத்திங் ஃபோன் 4a சீரிஸ், ரெனோ 15 சீரிஸ், மேலும் பல தள்ளுபடியில் வழங்கப்படும்
  4. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல்: சியோமி பேட் 7, ஒன்பிளஸ் பேட் 2, ரெட்மி பேட் 2 மற்றும் பலவற்றில் சிறந்த சலுகைகள்
  5. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ரூ. 40,000-க்கு கீழ் சிறந்த ஸ்மார்ட்போன் சலுகைகள் அறிவிப்பு
  6. சோனி WH-1000XM6 இப்போது இந்தியாவில் ஆலிவ் கிரே வண்ணத்தில் கிடைக்கிறது: விலை, கிடைக்கும் இடம், அம்சங்கள்
  7. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல்: நீங்கள் தவறவிடக்கூடாத ஒன்பிளஸ் 15 சலுகை இது
  8. அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல் 2026: ரூ. 20,000-க்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் சலுகைகள்!
  9. ரியல்மி 16x 5G பற்றிய தொகுப்பு: வெளியீட்டுத் தேதி, இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  10. Poco M8 Power vs OnePlus Nord CE 6 Lite vs Moto G77 Power: இந்தியாவில் விலை, சிறப்பம்சங்கள் ஒப்பீடு!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.