'உலக மொபைல் காங்கிரஸ் 2019' சோனி எக்ஸ்பிரியா1 அறிமுகம்; விலை என்ன தெரியுமா?

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 26 பிப்ரவரி 2019 12:08 IST
ஹைலைட்ஸ்
  • வரும் மார்ச் முதல் வெளியாகும் சோனி எக்ஸ்பிரியா 1!
  • இன்னும் இந்த போனின் விலை அறியபடவில்லை!
  • குவால்கம் 855 SoC பிராசஸ்சரால் இயங்குகிறது.

போனின் விலை பற்றிய தகவல்கள் இன்னும் கசியவில்லை

ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் நடந்து கொண்டிருக்கும் 'உலக மெபைல் காங்கிரஸ் 2019' நிகழ்ச்சியில் பல முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. உலகமெங்கும் இருக்கும் தொழிநுட்பப் பிரியர்களிடையே இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

நேற்று முதல் போன்கள் மற்றும் சமீபத்திய தொழிநுட்பக் கருவிகள் வெளியானதை அடுத்து, சோனி போன்கள்  குறித்த தகவல்கள் பரபரப்பை கிளப்பியுள்ளன.

மேலும் இந்த நிகழ்ச்சியில் உலகின் பல சிறந்த பிராண்டுகள் தங்களது மொபைல் வகைகளை அறிமுகம் செய்ய உள்ளன. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் சார்பாக இதுவரை சோனி எக்ஸ்பிரியா 1, சோனி எக்ஸ்பிரியா 10 மற்றும் சோனி எக்ஸ்பிரியா 10 பிளஸ் ஆகிய போன்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சோனி எக்ஸ்பிரியா 1 விலை:

சோனி எக்ஸ்பிரியா 1 இந்தியாவில் ரூபாய் 74,200-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்கப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள செய்திபடி அமெரிக்காவில் கறுப்பு மற்றும் ஊதா நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

சோனி எக்ஸ்பிரியா 1 சிறப்பம்சங்கள்:

சோனி எக்ஸ்பிரியா 1 அல்ட்ரா - டால் சினிமா டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. கேமிங் வசதிகளுக்கு ஏற்றவாறு இந்தத் திரை வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மொபைலில் புகைப்படங்களை எடுக்க விரும்புபவர்களுக்கு சோனி எக்ஸ்பிரியா டூயல் போட்டோ டையோட் டெக்னாலஜி என்ற புதிய தொழிநுட்பம் மூலம் குறைந்த வெளிச்சம் இருக்கும் இடத்திலும் ஆட்டோ ஃபோக்கஸ் செய்ய உதவுகிறது.

மேலும் இந்த போனில் கானொளி காட்சியை பதிவு செய்யும் போது ஏற்படும் சப்தங்களை (video noise) முழுவதுமாக தடுக்க முடிகிறது. அதுபோல் புகைப்படங்களில் ஏற்படும் 'ஷேக்'யை தவிர்க்க 'ஆப்டிகல் ஸ்டெடி ஷாட் டெக்னாலஜி' என்னும் தொழிநுட்பத்தை பொருத்தியுள்ளது சோனி.
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Sony Xperia 1 specifications, Sony Xperia 1, Sony, MWC 2019, MWC
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ரெட்மி நோட் 17 விரைவில் இந்தியாவில் அறிமுகமாகலாம்; கசிந்தது இதன் விலை!
  2. ₹17,000-க்கும் மேல் மலிவான விலையில் கிடைக்கும் 50 மெகாபிக்சல் கேமரா கொண்ட சாம்சங்கின் அசத்தல் போன்!
  3. ரியல்மி நார்சோ 100x, மோட்டோ G77 பவர், நத்திங் போன் 3a லைட்: எது சிறந்தது?
  4. இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் N6x போனின் டிசைன், கலர் விவரங்கள் டீஸ் செய்யப்பட்டுள்ளன!
  5. கூகுள் ஜெமினி 3.6 ஃபிளாஷ் & 3.5 ஃபிளாஷ்-லைட் அறிமுகம்; ஜெமினி 4 பயிற்சி நடப்பதாக தகவல்!
  6. சாம்சங் அன்ப்பேக்டு இன்று: கேலக்ஸி இசட் ஃபோல்ட் 8, ஃபிளிப் 8 நேரலையை பார்ப்பது எப்படி?
  7. போட் ஏர்டோப்ஸ் புரோகிளிப் மதிப்புரை: அன்றாட பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது
  8. NFC ஆதரவுடன் ஆஃப்லைன் யுபிஐ கட்டண வசதி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகலாம்
  9. விவோ S2 விரைவில் இந்தியாவில் அறிமுகமாகலாம்: விளம்பர போஸ்டர் கசிந்தது
  10. டெல் ஏலியன்வேர் 16X அரோரா, 16 & 18 ஏரியா-51 இந்தியாவில் அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.