1,199 ரூபாயில் சியோமியின் 'Mi டிரக் பில்டர்', இந்தியாவில் அறிமுகம்!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 3 ஜூலை 2019 13:53 IST
ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் 'Mi டிரக் பில்டர்' என ஒரு புதிய பொம்மை
  • இந்த போம்மையின் ஏற்றுமதி ஜூலை 25-ல் துவங்கும்
  • 1,199 ரூபாய் என்ற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜூலை 25-ல் இருந்து இந்த போம்மையின் ஏற்றுமதி நடைபெரும்

கடந்த வாரம், தனது ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பல தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்தது. அதன்படி, சியோமி நிறுவனம் இந்தியாவில் 'Mi டிரக் பில்டர்' என ஒரு புதிய பொம்மையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பொம்மையை 1,199 ரூபாய் என்ற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பொம்மை இந்தியாவில் விரைவில் விற்பனையாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பொம்மை குழந்தைகளின் மூளை செயல்பாட்டை அதிகரிக்கும் வண்ணம் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. 

குழந்தைகளுக்கு கற்றலை எளிதாக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது இந்த 'Mi டிரக் பில்டர்' பொம்மை. மொத்தம் 530 ப்ளாக்களை கொண்ட இந்த  'Mi டிரக் பில்டர்' 2-இன்-1 மாடலாக குழந்தைகள் விளையாடும் வகையில் அறிமுகமாகவுள்ளது. இந்த 2-இன்-1 'Mi டிரக் பில்டர்' பொம்மையில் உள்ள ப்ளாக்களை ஒருங்கினைத்து, குழந்தைகள் ட்ரக்கையும் உருவாக்கலாம், அதேநேரம் புல்டோசரையும் உருவாக்கிக் கொள்ளலாம். 

மேலும், இந்த பொம்மைக்கென ஒரு பக்கத்தை உருவாக்கி அதற்கான மக்கள் ஆதரவையும் வேண்டியுள்ளது. 1500 என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை 2277 பேர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், இந்த போம்மையின் ஏற்றுமதி ஜூலை 25-ல் துவங்கும் எனவும் அந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, சியோமியின் ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், பல புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக பிரத்யேகமாக ஒரு பக்கத்தை உருவாக்கியுள்ள சியோமி நிறுவனம், அந்த பக்கத்தில் Mi டிரிம்மர், Mi LED பல்ப், வயர்லெஸ் ஹெட்போன்கள், பாஸ்ட் சார்ஜர்கள் என பல தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi, Mi India, Mi Truck Builder, Toy, Crowdfunding
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Galaxy M17e 5G: 50MP கேமரா, 6,000mAh பேட்டரியுடன் மார்ச் 17ல் இந்தியாவில் அறிமுகம்
  2. OnePlus 15T வடிவமைப்பு மற்றும் நிறங்கள் சீனா வெளியீட்டுக்கு முன் அதிகாரப்பூர்வமாக வெளியீடு
  3. Oppo Find N6 அதிகாரப்பூர்வ அறிவிப்பு: மார்ச் 17 அன்று சீனாவில் அறிமுகம்; கான்பிகரேஷன் மற்றும் நிறங்கள் உறுதி
  4. MacBook Neo vs MacBook Air (2026) ஒப்பீடு: இந்திய விலை, அம்சங்கள் மற்றும் பல
  5. DoT-இன் SIM Binding விதி என்ன? – மெசேஜிங் ஆப்ஸ் மற்றும் பயனர்களுக்கு இதன் தாக்கம்
  6. Poco C85x 5G இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு.. பல சுவாரஷ்ய அம்சங்களுடன்
  7. Samsung Galaxy A37 5G மற்றும் Galaxy A57 5G விவரங்கள் வெளியீட்டுக்கு முன்பே வெளியான தகவல்
  8. Nothing Phone 4a இந்தியாவில் அறிமுகம் – Glyph Bar Interface உடன்; Nothing Phone 4a Proவும் வெளியீடு
  9. Local Times OTT வெளியீடு: தமிழ் காமெடி டிராமா தொடரை எப்போது, எங்கே பார்க்கலாம்?
  10. OnePlus 15T – 1.5K 165Hz டிஸ்ப்ளே வரலாம்; முக்கிய அம்சங்களை நிறுவனம் உறுதி செய்தது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.