Flipkart Big Billion Day பற்றி லீக்கான தகவல்

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 12 செப்டம்பர் 2024 08:55 IST
ஹைலைட்ஸ்
  • Flipkart Big Billion Day விற்பனை தேதி வெளியானது
  • 85 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும்
  • செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்குகிறது

2024 Flipkart Big Billion Days sale date

Photo Credit: Flipkart

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Flipkart Big Billion Days Sale 2024 பற்றி தான்.


Flipkart Big Billion Days Sale 2024 குறித்த தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. பிளஸ் மெம்பர்களுக்கு செப்டம்பர் 29 மற்றும் அனைவருக்கும் செப்டம்பர் 30 முதல் இந்த விற்பனை தொடங்கும் என கூறப்படுகிறது. Flipkart Plus பயனர்களுக்கு முன்கூட்டியே Big Billion Day தொடங்கும். Flipkart Big Billion Days விற்பனை தேதியை முன்கூட்டியே அணுக Flipkart Plus மெம்பர்ஷிப்பை எப்படிப் பெறுவது என்பதையும் இப்போது பார்க்கலாம்.

Flipkart Plus உறுப்பினர்களுக்கு செப்டம்பர் 26 முதல் Flipkart Big Billion Days Sale தொடங்குகிறது. வழக்கமான பயனர்களுக்கு, பிளிப்கார்ட் விற்பனை செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்கும். 2023 Flipkart BBD விற்பனை அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்கியது. அதனால், இந்த முறை கொஞ்சம் சீக்கிரம் தொடங்குகிறது. நீங்கள் முன்கூட்டியே அணுக விரும்பினால், நீங்கள் செய்ய வேண்டியது பற்றி அடுத்து பார்க்கலாம்.


Flipkart Plus மெம்பர்ஷிப் பெறுவது எப்படி?


Flipkart Plus வசதியை பொறுத்தவரை பயனர் கடந்த 365 நாட்களில் 4 முறை வெற்றிகரமான பரிவர்த்தனைகளைச் செய்திருக்க வேண்டும்
Flipkart Plus பிரீமியத்திற்கு, கடந்த 365 நாட்களில் 8 வெற்றிகரமான பரிவர்த்தனைகளைச் செய்திருக்க வேண்டும்.

விற்பனை நிகழ்வுகளுக்கான ஆரம்ப அணுகல் தவிர, பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்கள் ஒவ்வொரு வாங்குதலிலும் சிறப்புச் சலுகைகளிலும் 2x சூப்பர் காயின்களைப் பெறுவார்கள்.


Flipkart Plus எதிர்பார்க்கப்படும் சலுகைகள்


எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்புடைய துணை பொருட்களுக்கு 50-80 சதவீதம் தள்ளுபடி இருக்கலாம். டிவி மற்றும் பிற சாதனங்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கலாம். 4K டிவிகள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். இது மட்டுமின்றி, மெத்தைகள், வீட்டு அலுவலக உபகரணங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய மரச்சாமான்கள் மற்றும் வீட்டு உபகரணங்களுக்கு 85 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.

மற்ற வரம்பில் உள்ள தயாரிப்புகளுக்கு சிறிதளவு தள்ளுபடியை எதிர்பார்க்கலாம். பரிமாற்றச் சலுகைகள், கட்டணமில்லா EMI, வங்கிச் சலுகைகள், கேஷ்பேக், கூப்பன்கள் வசதியும் இருக்கிறது. Flipkart Axis பேங்க் கிரெடிட் கார்டு மூலம் கேஷ்பேக் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

Big Billion Days Flipkart தளத்தில் மிகப்பெரிய விற்பனையில் ஒன்றாகும். பல்வேறு தயாரிப்புகளுக்கு பெரிய அளவில் தள்ளுபடியை வழங்குகிறது. விற்பனை பற்றிய கூடுதல் விவரங்கள் கிடைத்தவுடன் நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம். எனவே காத்திருங்கள்!

Advertisement

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Flipkart, Flipkart Big Billion Days, Flipkart sale

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சப்நாட்டிகா 2 எர்லி ஆக்சஸ் தொடங்கப்பட்ட 12 மணி நேரத்திற்குள் 2 மில்லியன் பிரதிகள் விற்பனை
  2. ஐஓஎஸ்-இல் வாட்ஸ்அப் ஒருமுறை மட்டும் பார்க்கும் மறையும் செய்திகள் அம்சத்தை சோதனை செய்வதாகத் தகவல்
  3. UIDAI பயனர்களை புதிய ஆதார் செயலியை பதிவிறக்கம் செய்ய வலியுறுத்துகிறது; mAadhaar செயலி விரைவில் 'ஓய்வுபெறுகிறது'
  4. மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ விமர்சனம்: மெலிதானது, இலகுவானது மற்றும் பிரகாசமானது!
  5. பிளிப்கார்ட் விற்பனை 2026: சாம்சங், ஆசஸ், டெல் மற்றும் ஹெச்பி மடிக்கணினிகளுக்கான சிறந்த சலுகைகள்
  6. அமேசான் கிரேட் சம்மர் சேல் 2026: விற்பனைக்கு முன்னதாக வீட்டு உபயோகப் பொருட்களுக்கான சிறந்த சலுகைகள் அறிவிப்பு
  7. 2026 Q1: உலகின் அதிகம் விற்ற போன் ஐபோன் 17; சிறந்த ஆண்ட்ராய்டு போன் சாம்சங் கேலக்ஸி A07 4G
  8. பிளிப்கார்ட் சம்மர் சேல்: மோட்டோரோலா, ரியல்மி, ஓப்போ ஆண்ட்ராய்டு போன்களுக்கு அதிரடி சலுகைகள்
  9. ஒன்பிளஸ் சம்மர் சேல்: ஒன்பிளஸ் 15, 13 மற்றும் பேட் 4 மாடல்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு
  10. CMF Watch 3 Pro இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு: எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள், அம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.