பட்ஜெட் போன்களுக்கு தள்ளுபடியா....? - Mi Super Sale-ன் ஆட்டம் ஆரம்பம்!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 26 நவம்பர் 2019 16:32 IST
ஹைலைட்ஸ்
  • Mi Super Sale, Redmi K20 Pro-வில் 3,000 ரூபாய் வரை குறைத்துள்ளது
  • Redmi K20-யும் ரூ. 3,000 வரை தள்ளுபடியைப் பெறுகிறது
  • Redmi 7A, Redmi Note 7 Pro-வில் விலைக் குறைப்புகளை ஜியோமி வழங்கி வருகிறது

ஜியோமி தனது portfolio-வில் உள்ள அனைத்து போன்களுக்கும் தள்ளுபடியை வழங்குகிறது

Mi Super Sale-ன் மற்றொரு பதிப்போடு Xiaomi மீண்டும் வந்துள்ளது. Mi Super Sale-ன் சமீபத்திய பதிப்பு இப்போது நேரலையில் உள்ளதோடு, நவம்பர் 28 வரை நடைபெறும். விற்பனை விழாவின் ஒரு பகுதியாக, ஜியோமி அனைத்து விலை அடைப்புகளிலும் ஒரு குறிப்பிட்ட நேர விலைக் குறைப்புடன் ஏராளமான ஸ்மார்ட்போன்களை வழங்குகிறது. Redmi Note 7 Pro-வுக்கு ரூ. 4,000 வரை தள்ளுபடியும் மற்றும் Redmi K20 மற்றும் Redmi K20 Pro-வுக்கு ரூ. 3,000 வரை தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது. கூடுதலாக, Redmi 7A மற்றும் Redmi Go போன்ற குறைந்த விலை போன்களுக்கும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

Redmi K20 Pro-வில் தொடங்கி, Mi Super Sale-ன் ஒரு பகுதியாக flagship போன்களில் ரூ. 3,000 வரை தள்ளுபடியை வழங்குகிறது ஜியோமி. Redmi K20 Pro-வின் 6GB+128GB வேரியண்ட் ரூ. 25,999-க்கு தற்போது கிடைக்கிறது.  அதே சமயம் போனின் 8GB+256GB வேரியண்டை அதிகாரப்பூர்வ Mi.com store-ல் இருந்து ரூ. 28,999-க்கு வாங்கலாம். Redmi K20-யிலும் ரூ.3,000 தள்ளுபடியை வழங்குகிறது ஜியோமி. இதன் தற்போதைய ஆரம்ப விலை ரூ. 19,999-யாக உள்ளது.

Redmi Note 7 Pro அதன் அசல் விலையில் இருந்து ரூ. 4,000 தள்ளுபடியை வழங்குகிறது. Redmi Note 7 Pro-வின் 4GB+64GB வேரியண்ட் ரூ. 11,999-க்கு கிடைக்கிறது. அதே சமயம் 6GB+64GB பதிப்பு ரூ. 13,999-க்கு கிடைக்கிறது. Redmi Note 7 Pro-வின் highest-end 6GB+128GB மாடலை ரூ. 14,999-க்கு வாங்கலாம். Mi Super Sale-ல் Poco F1-ம் கிடைக்கிறது. அதன் ஆரம்ப விலையான ரூ. 14,999-ல் இருந்து தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 12,000-க்கு கிடைக்கிறது.

பட்ஜெட் பிரிவில் வரும்போது, Redmi 7A-வுக்கு ரூ. 1,200 தள்ளுபடியை வழங்குகிறது ஜியோமி. Mi Super Sale-ன் ஒரு பகுதியாக, Redmi 7A-வின் 2GB+16GB வேரியண்ட் ரூ. 5,499-க்கு கிடைக்கிறது. அதே போல் 2GB+32GB பதிப்பை iரூ. 5,799-க்கு வாங்கலாம். Redmi Go-வின் ஆரம்ப விலை ரூ. 4,499-யாக பட்டியலிடப்படுள்ளது. Mi Super Sale-ன் ஒரு பகுதியாக குறைக்கப்பட்ட விலை புள்ளியில் எடுக்கக்கூடிய பிற போன்களில் Redmi Y3, Redmi Note 7S மற்றும் Redmi 7 ஆகியவை அடங்கும். மேலே குறிப்பிட்டுள்ளபடி, Redmi Super Sale இப்போது நேரலையில் உள்ளது மற்றும் Mi.com-ன் அதிகாரப்பூர்வ Mi online store வழியாக நவம்பர் 28 வரை நடைபெறும். Redmi 7, Redmi 7A மற்றும் Redmi Y3 ஆகியவை Amazon India வழியாக ஒரே விலையில் கிடைக்கின்றன.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent performance
  • Very good battery life
  • Versatile cameras
  • Great value for money
  • Bad
  • 4K video quality could be better
  • Slow front camera pop-up mechanism
 
KEY SPECS
Display 6.39-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 4000mAh
OS Android 9
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Smooth, lag-free performance
  • Appealing design
  • Great battery life
  • Bad
  • Underwhelming low-light camera performance
  • Quite slippery
  • No expandable storage
  • Slow front camera pop-up mechanism
 
KEY SPECS
Display 6.39-inch
Processor Qualcomm Snapdragon 730
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 13-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  2. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  3. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  4. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  5. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  6. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  7. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  8. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
  9. அறிமுகமானது Redmi Pad 2: Google AI அம்சங்களுடன் வந்த இந்தியாவின் முதல் டேப்லெட் - மிஸ் பண்ணாதீங்க
  10. அறிமுகமானது iQOO Z10 Lite 5G: பட்ஜெட் 5G-யின் புதிய ராஜா! சிறப்பம்சங்கள் வெளியானது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.