இணையத்தில் வெளியான 'Mi CC9 மற்றும் Mi CC9e' ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 24 ஜூன் 2019 16:35 IST
ஹைலைட்ஸ்
  • Mi CC9 ஸ்மார்ட்போனின் துவக்க விலை 2,599 யுவான்கள் (26,200 ரூபாய்)
  • Mi CC9e ஸ்மார்ட்போனின் துவக்க விலை 1,599 யுவான்கள் (16,100 ரூபாய்)
  • Mi CC9 ஸ்மார்ட்போனில் ஸ்னெப்ட்ராகன் 730 ப்ராசஸர் பொருத்தப்பட்டிருக்கலாம்

இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் முதலில் அறிமுகமாகவுள்ளது

Photo Credit: Weibo

முன்னதாக சியோமி நிறுவனம், இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தப்போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. இளைஞர்களை மையப்படுத்தி அறிமுகமாகும் என கூறப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், 'Mi CC9 மற்றும் Mi CC9e' என்ற பெயர்களை கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியிருந்தன. இன்னிலையில் இந்த ஸ்மார்ட்போன்கள் குறித்த தகவல்கள் இனையதளத்தில் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களுடன் Mi CC9 ஸ்மார்ட்போனின் புகைப்படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தின்படி, இந்த ஸ்மார்ட்போனின் முன்புறம் முழுவதும் திரையாக அமைந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்லே ஃபிங்கர் பிரின்ட் சென்சாரை கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. 

தனது ட்விட்டர் கணக்கில் தொழில்நுட்ப வல்லுனரான முகில் சர்மா (Mukul Sharma) இந்த ஸ்மார்ட்போனின் வகைகள் குறித்தும் அதன் விலை குறித்தும் தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ள இந்த ஸ்மார்ட்போன்களின் வகை மற்றும் அதன் விலை இதோ!

Mi CC9 ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படும் விலை!

இவர் கூறியுள்ள தகவலின்படி இந்த ஸ்மார்ட்போன் மூன்று வகைகளில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில் 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு கொண்ட Mi CC9 ஸ்மார்ட்போனின் விலை 2,599 யுவான்கள் (26,200 ரூபாய்). 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM மற்றும் 256GB சேமிப்பு அளவு கொண்ட மற்ற இரு வகைகளும் 2,799 யுவான்கள் (28,200 ரூபாய்) மற்றும் 3,099 யுவான்கள் (31,300 ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mi CC9e ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படும் விலை!

இதனுடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் மற்றொரு ஸ்மார்ட்போனான Mi CC9e-யும் மூன்று வகைகளிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு,  6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு மற்றும்  8GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு என்ற இந்த மூன்று வகைகள் 1,599 யுவான்கள் (16,100 ரூபாய்), 1,899  யுவான்கள் (19,200 ரூபாய்) மற்றும் 2,199 யுவான்கள் (22,200 ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mi CC9 ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்!

இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து இவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த Mi CC9 ஸ்மார்ட்போன் 6.39 இன்ச் FHD+ திரையை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன், ஸ்னெப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு வெளியாகலாம். மூன்று பின்புற கேமராக்களுடன், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 16 மெகாபிக்சல் மற்றும் 12 மெகாபிக்சல் என்ற அளவில் மற்ற இரண்டு கேமராக்களை கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 32 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டிருக்கும். இன்-டிஸ்ப்லே ஃபிங்கர் பிரின்ட் சென்சார், டை-C சார்ஜிங் போர்டுடன் 4000mAh பேட்டரி, 27W சார்ஜர் பொன்றவற்றை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் என அவர் தகவல் வெளியிட்டிருந்தார். 

Advertisement

Mi CC9e ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்!

இந்த Mi CC9e ஸ்மார்ட்போன் 5.97 இன்ச் FHD+ திரையை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன், ஸ்னெப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு வெளியாகலாம். மூன்று பின்புற கேமராக்களுடன், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என்ற அளவில் மற்ற இரண்டு கேமராக்களை கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  3500mAh பேட்டரி, 18W சார்ஜர் பொன்றவற்றை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் என அவர் தகவல் வெளியிட்டிருந்தார். Mi CC9 போலவே இந்த ஸ்மார்ட்போனும் இன்-டிஸ்ப்லே ஃபிங்கர் பிரின்ட் சென்சார், டை-C சார்ஜிங் போர்டுடன் வெளியாகலாம்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஜான் டெர்னஸ் தலைமையில் ஆப்பிளின் ஃபோல்டபிள் ஐபேட், AI சாதனங்கள் மற்றும் டச்ஸ்கிரீன் மேக்புக் அறிமுகத் திட்டம்
  2. விவோ X500 ப்ரோ மேக்ஸ்: 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ மற்றும் 50MP LOFIC கேமராவுடன் அறிமுகமாக வாய்ப்பு
  3. அறிமுகத்திற்கு முன் கீக்பெஞ்சில் ஷாவோமி 17T: டைமென்சிட்டி 8500 சிப் மற்றும் 12GB RAM விவரங்கள் கசிந்தன
  4. விவோ X போல்ட் 6-ல் 200MP கேமரா மற்றும் பெரிய பேட்டரி; ஷாவோமி மிக்ஸ் போல்ட் 6 வெளியீட்டுத் தகவல் கசிந்தது
  5. போக்கோ C81x 4G vs லாவா போல்ட் N2 ப்ரோ vs ஐடெல் ஜீனோ 100: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  6. உங்கள் ஆண்ட்ராய்டு போனில் அட்வான்ஸ்டு ப்ரொடெக்ஷனை எவ்வாறு இயக்குவது: ஒரு படிப்படியான வழிகாட்டி
  7. ரெட்மி A7 ப்ரோ 4G vs விவோ Y05 4G vs ரியல்மி P4 லைட் 4G: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் முழு ஒப்பீடு
  8. உங்கள் சாம்சங் போன் சீராக இயங்க அதனைத் தானாகவே மறுதொடக்கம் (Restart) செய்வது எப்படி?
  9. ஆண்ட்ராய்டின் நோட்டிஃபிகேஷன் பபிள்ஸ் அம்சத்திற்கான ஆதரவை வழங்கும் பணியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது
  10. ஜியோ யூத் அண்ட் கேமிங் பிளான்: ஸ்னாப்சாட்+, ஃபேன்-கோடு மற்றும் ஜெமினி ப்ரோ அறிமுகம்: விலை, நன்மைகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.