குவாட் ரியர் கேமராக்களுடன் Mi 10 Youth Edition 5G அறிமுகம்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 27 ஏப்ரல் 2020 16:31 IST
ஹைலைட்ஸ்
  • போனின் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் பிரதான கேமராவை கொண்டுள்ளது
  • இந்த போனில் 22.5W சார்ஜிங் உடன் 4,160 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது
  • இந்த போன், 50 எக்ஸ் டிஜிட்டல் ஜூம், 120 டிகிரி FOV-ஐ வழங்குகிறது

Mi 10 Youth Edition 5G நான்கு கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும்

Xiaomi Mi 10 Youth Edition 5G சீனாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த போனின் முன்புறத்தில் வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச் உடன் வருகிறது. போனின் முக்கிய அம்சங்களில் ஸ்னாப்டிராகன் 765G SoC, இரட்டை முறை சஸ்பென்ஷன் திரவ குளிரூட்டல் மற்றும் பின்புறத்தில் ஒரு குவாட் கேமரா அமைப்பு மற்றும் 4,160 எம்ஏஎச் பேட்டரி ஆகியவை அடங்கும். இந்த போன் ஏப்ரல் 30-ஆம் தேதி சீனாவில் விற்பனைக்கு வரும்.


போனின் விலை: 

Mi 10 Youth Edition 5G-யின் 6 ஜிபி + 64 ஜிபி மாடலின் விலை சிஎன்ஒய் 2,099 (இந்திய மதிப்பில்ன் சுமார் ரூ.22,500), 
6 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை சிஎன்ஒய் 2,299 (இந்திய மதிப்பில்ன் சுமார் ரூ.24,700), 
8 ஜிபி + 128 ஜிபி ஆப்ஷனின் விலை சிஎன்ஒய் 2,499 (இந்திய மதிப்பில்ன் சுமார் ரூ.26,900) 
டாப்-எண்ட் 8 ஜிபி + 256 ஜிபி ஆப்ஷனின் விலை சிஎன்ஒய் 2,799 (இந்திய மதிப்பில்ன் சுமார் ரூ.30,100) ஆகும். 

இந்த போன் Black Skill Storm, Blueberry Mint, Four Seasons Spring Milk Green, Peach Grapefruit மற்றும் White Peach Oolong கலர் ஆப்ஷன்களில் சீனாவில் ஏப்ரல் 30 முதல் விற்பனைக்கு வருகிறது.

Xiaomi Mi 10, Mi 10 Pro With 108-Megapixel Quad Camera Setup, Snapdragon 865 Launched


போனின் விவரங்கள்:

இந்த போன் டூயல்-சிம் ஸ்லாட்டைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 உடன் MIUI 11 ஓஎஸ்-ல் இயங்குகிறது. இந்த போன் 6.57 அங்குல முழு எச்டி + (1080x2400 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது அட்ரினோ 620 ஜி.பீ.யு மற்றும் 8 ஜிபி ரேம் வரை இணைக்கப்பட்டு, ஸ்னாப்டிராகன் 765G 5G ஆக்டா கோர் செயலி (1x2.4GHz, 1x2.2GHz, 6x1.80GHz) மூலம் இயக்கப்படுகிறது. 

போனின் குவாட் கேமரா அமைப்பில் 48 மெகாபிக்சல் அல்ட்ரா-க்ளியர் பிரதான கேமராவும், 8 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸும் அடங்கும். மூன்றாவது 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் மற்றொரு சுயாதீன மேக்ரோ லென்ஸ் உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.

இந்த போன், 256 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜை வழங்குகிறது. போனில் 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,160 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இதில் ஆப்டிகல் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. இந்த போன் 164.02x74.77x7 மிமீ அளவு மற்றும் 192 கிராம் எடை கொண்டதாகும். 

 
KEY SPECS
Display 6.57-inch
Processor Qualcomm Snapdragon 765G
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4160mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஐபோன் 18 சீரிஸ் விலை உயர்வு முந்தைய கணிப்புகளை விடக் குறைவாக இருக்கும்!
  2. சாம்சங் கேலக்ஸி A27 5G அறிமுகம்: ஸ்னாப்டிராகன் சிப், 6.7-இன்ச் திரை மற்றும் சலுகைகள்!
  3. ஆப்பிள் விலை உயர்வு: மேக், ஐபேட் விலை அதிகரிப்பு, ஐபோன்களுக்கு விலக்கு
  4. Oppo Reno 16 முதல் பார்வைகள் (First Impressions)
  5. ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 4 இந்தியாவில் அறிமுகம்: 52dB ANC மற்றும் 54 மணிநேர பேட்டரி லைஃப்
  6. லாவா ஸ்மார்ட் 4 பிளஸ் 5,000mAh பேட்டரி, 6.75-இன்ச் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  7. வாட்ஸ்அப் நிறுவனம் தெரியாத எண்களிலிருந்து வரும் அரட்டைகள் (Chats) குறித்து பயனர்களை எச்சரிக்கத் தொடங்கியுள்ளது
  8. அமேசான் இந்தியாவின் விரைவு வர்த்தகம் 300 நகரங்களுக்கு விரிவாக்கம்; பணியாளர்களுக்கு புதிய நலத்திட்டம் அறிமுகம்!
  9. அசுஸ் ROG கேமிங், ப்ரோஆர்ட் லேப்டாப்கள் ரூ.1.99 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தன!
  10. ஜூன் 29 இந்திய அறிமுகத்தை உறுதி செய்தது சாம்சங் கேலக்ஸி M47 5G; முக்கிய அம்சங்கள் கசிவு!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.