விவோ ஒய் 70 எஸ் அறிமுகம்! விலை மற்றும் விவரங்கள்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 26 மே 2020 15:03 IST
ஹைலைட்ஸ்
  • விவோ ஒய் 70 எஸ்-ன் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன
  • போனில் 4,500 எம்ஏஎச் பேட்டரி இருக்கும்
  • இது 6.53 இன்ச் முழு எச்டி + டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது

விவோ ஒய் 70 எஸ் 6.53 இன்ச் முழு எச்டி + ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது

விவோ ஒய் 70 எஸ் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய சாம்சங் எக்ஸினோஸ் 880 செயலியுடன் வரும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். விவோ பிராண்டின் 5 ஜி போனில் 6.53 இன்ச் டிஸ்ப்ளே, 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் மூன்று பின்புற கேமராக்கள் உள்ளன. 
 

போனின் விலை:

 
6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Vivo Y70s விலை சிஎன்ஒய் 1,998 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21,200)-யில் தொடங்குகிறது. போனின் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் சிஎன்ஒய் 2,198 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.23,300)-க்கு விற்கப்படும் . இந்த ஸ்மார்ட்போன் ஃபாக் அலுஷன், ஸ்டார்லைட் ப்ளூ மற்றும் மூன் ஷேடோ பிளாக் வண்ணங்களில் விற்பனை செய்யப்படும்.


போனின் விவரங்கள்:

டூயல்-சிம் (நானோ) விவோ ஒய் 70 எஸ் 6.53 அங்குல முழு எச்டி + (1,080x2,340 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. போனின் உள்ளே ஆக்டா கோர் எக்ஸினோஸ் 880 செயலியைப் பயன்படுத்துகிறது. மாலி-ஜி 76 எம்பி 5 கிராபிக்ஸ் பிராசசர் மற்றும் 6 ஜிபி அல்லது 8 ஜிபி ரேம் உள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 10 உடன் ஃபன்டூச் ஓஎஸ் 10-ல் இயங்குகிறது.

போனின் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. அதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை உள்ளன. செல்ஃபி எடுக்க 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது

இணைப்பிற்காக, இந்த போனில் 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை உள்ளன. போனின் உள்ளே 4,500 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது 18W இரட்டை இயந்திரம் ஃபிளாஷ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. Vivo ஒய் 70 எஸ் எடை 190 கிராம் ஆகும்.

 
KEY SPECS
Display 6.53-inch
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo Y70s, Vivo, Vivo Y70s price, Vivo Y70 specifications
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Vivo X300 FE லான்ச் ரெடி! 90W சார்ஜிங் கூடவே 6500mAh பேட்டரியா? விவோ-வின் இந்த பட்ஜெட் பிளாக்ஷிப் போன் பத்தி தெரிஞ்சிக்கோங்க
  2. சாம்சங் ஃபோல்டபிள் போன்ல இனிமே அந்த பிரச்சனை இருக்காது! புதிய "Wide" டிசைன் ரெடியாகுது! இதோ லீக் ஆன தகவல்கள்
  3. Apple-ல இருந்து மலிவு விலையில ஒரு MacBook-ஆ? அதுவும் செம்ம கலர்ஸ்ல வருதா? ஆப்பிள் பிரியர்களுக்கு இதோ ஒரு செம்ம குட் நியூஸ்
  4. AI உலகமே டெல்லிக்கு வருது! இந்தியாவின் முதல் AI Impact Summit 2026 - எப்படி Register செய்வது? Full Schedule இதோ
  5. பட்ஜெட் விலையில ஒரு தரமான சம்பவம்! Lava Yuva Star 3 லான்ச் ஆகிடுச்சு! 5000mAh பேட்டரியோட ஒரு 'ஸ்டார்' போன்
  6. மியூசிக் லவ்வர்ஸ்க்கு ஒரு குட் நியூஸ்! Sony WF-1000XM6 லான்ச் ஆகிடுச்சு! நாய்ஸ் கேன்சலேஷன்ல இதுதான் இப்போ ராஜா
  7. சும்மா சில்லுன்னு ஒரு நியூஸ்! Panasonic 2026 AC Range இப்போ இந்தியாவில லான்ச் ஆகிடுச்சு! தூசி படியாது, கரண்ட் மிச்சம்
  8. பட்ஜெட் விலையில ஒரு ஃபிளாக்ஷிப் கில்லர்! Infinix Note 60 Ultra கீக்பெஞ்ச்ல லீக் ஆகிடுச்சு! 200MP கேமரா, சாட்டிலைட் கனெக்டிவிட்டினு மிரட்டுது
  9. இனி பெரிய அடாப்டர் தேவையில்லை! சியோமியோட குட்டி 'மினி GaN' சார்ஜர் லான்ச் ஆகிடுச்சு! கேபிளும் உள்ளயே இருக்கு
  10. உங்க ஐபோன் ஸ்லோவா இருக்கா? இதோ வந்துருச்சு iOS 26.3! புது அம்சங்கள் முதல் பேட்டரி தீர்வு வரை.. முழு விவரம் உள்ளே
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.