விவோ எக்ஸ் 50 சீரிஸின் விவரங்கள் கசிந்தன!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 29 மே 2020 15:28 IST
ஹைலைட்ஸ்
  • விவோ எக்ஸ் 50 ஸ்னாப்டிராகன் 765 ஜி சோசி மூலம் இயக்கப்படுகிறது
  • எக்ஸ் 50 ப்ரோ ரெண்டர்கள் வளைந்த விளிம்புகளுடன் டிஸ்ப்ளேவைக் குறிக்கின்றன
  • விவோ எக்ஸ் 50 சீரிஸ் ஜூன் 1 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது

விவோ எக்ஸ் 50 ப்ரோ லிக்விட் ஆக்ஸிஜன் மற்றும் பிளாக் மிரர் கலர் ஆப்ஷன்களில் வரவுள்ளது

Photo Credit: JD.com

விவோ எக்ஸ் 50 மற்றும் விவோ எக்ஸ் 50 புரோ ஜூன் 1 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படும். இந்த இரண்டு போன்களின் விவரங்களும் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு ஈ-காமர்ஸ் இணையதளத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில், இந்த இரண்டு போன்களின் படங்களும் முன்னுக்கு வந்தன. விவோ எக்ஸ் 50 மற்றும் விவோ எக்ஸ் 50 ப்ரோ ஆகியவை ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளன. டிஸ்ப்ளேவுக்கு கீழே கைரேகை சென்சார் உள்ளது. 

Photo Credit: Weibo

விவோ எக்ஸ் 50, விவோ எக்ஸ் 50 ப்ரோ விவரங்கள்:

இந்த இரண்டு போன்களும் ஆண்ட்ராய்டு 10-ல் இயங்கும். விவோ எக்ஸ் 50 குவால்காம் ஸ்னாப்டிராகன் ஆக்டா கோர் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் செயலியைக் கொண்டிருக்கும். கீக்பெஞ்ச் இணையதளத்தில், இந்த செயலி கோரில் 615 மற்றும் மல்டிகோரில் 1909 மதிப்பெண்களைப் பெற்றது.

விவோ எக்ஸ் 50, 6.56 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கலாம். இந்த போனில் சீன நிறுவனத்திடமிருந்து 90 ஹெர்ட்ஸ் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே உள்ளது. போனின் உள்ளே ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட் இருக்கும். போனின் பின்புறம் குவாட் கேமராவில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் இருக்கும். செல்பி எடுக்க 32 மெகாபிக்சல் சென்சார் உள்ளது.

விவோ எக்ஸ் 50, 4,315 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது. இந்த போனில் 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் ஹை-ஃபை ஆடியோ சிப் ஆதரவு உள்ளது.


Which is the bestselling Vivo smartphone in India? Why has Vivo not been making premium phones? We interviewed Vivo's director of brand strategy Nipun Marya to find out, and to talk about the company's strategy in India going forward. We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.