Vivo X300 FE லான்ச் ரெடி! 90W சார்ஜிங் கூடவே 6500mAh பேட்டரியா? விவோ-வின் இந்த பட்ஜெட் பிளாக்ஷிப் போன் பத்தி தெரிஞ்சிக்கோங்க

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 16 பிப்ரவரி 2026 18:11 IST
ஹைலைட்ஸ்
  • TUV மற்றும் IMDA தளங்களில் Vivo X300 FE (Model: V2537) ஸ்பாட் செய்யப்பட்ட
  • இந்த போனில் 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பது உறுதியாகியுள்ளது.
  • இது 6.31 இன்ச் காம்பாக்ட் டிசைன் மற்றும் 6500mAh பேட்டரியுடன் வர வாய்ப்பு

Vivo X300 FE, Vivo S50 Pro Mini-யின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (படம்)

Photo Credit: Vivo

விவோ (Vivo) ரசிகர்கள் எல்லாருக்கும் ஒரு செம்ம குட் நியூஸ் வந்துருக்கு. விவோ தன்னோட 'X' சீரிஸ்ல ஏற்கனவே X300 மற்றும் X300 Pro மாடல்களை லான்ச் பண்ணி கலக்கிட்டு இருக்காங்க. ஆனா, இப்போ அந்த சீரிஸ்ல ஒரு பட்ஜெட் பிரைஸ்ல, ஆனா பிளாக்ஷிப் வசதிகளோட ஒரு புது போன் வரப்போகுது. அதுதான் Vivo X300 FE. சமீபத்துல இந்த போன் (Model Number: V2537) TUV Rheinland அப்படிங்கிற முக்கியமான சர்டிபிகேஷன் தளத்துல சிக்கியிருக்கு. அதுல கிடைச்ச தகவல்படி, இந்த போன்ல 90W FlashCharge வசதி இருக்கப்போகுது. இதுமட்டும் இல்லாம சிங்கப்பூரோட IMDA தளத்துலயும் இந்த போன் லிஸ்ட் ஆகியிருக்கு. இதுல இருந்து ஒரு விஷயம் தெளிவா தெரியுது, இந்த போனோட குளோபல் லான்ச் ரொம்ப சீக்கிரமே நடக்கப்போகுது.

காம்பாக்ட் ஆனா பவர்ஃபுல்

இப்போ வர்ற போன்கள் எல்லாம் ரொம்ப பெருசா இருக்குன்னு கவலைப்படுறவங்களுக்கு இந்த Vivo X300 FE ஒரு சரியான சாய்ஸா இருக்கும்.
டிஸ்ப்ளே: இதுல 6.31 இன்ச் 1.5K AMOLED பிளாட் டிஸ்ப்ளே இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. 120Hz ரிஃப்ரெஷ் ரேட் இருக்கறதுனால யூஸ் பண்றதுக்கு ரொம்ப ஸ்மூத்தா இருக்கும்.

பேட்டரி: சின்ன போனா இருந்தாலும், இதுல 6500mAh அளவுக்கு ஒரு பெரிய பேட்டரியை விவோ கொடுக்கப்போறதா செய்திகள் சொல்லுது. 90W வயர்டு சார்ஜிங் கூடவே 40W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இதுல இருக்கலாம்.

கேமரா மற்றும் பெர்ஃபாமன்ஸ்:

விவோ போன்னாலே கேமரா தான ஸ்பெஷல்?
● பின்பக்க கேமரா: 50MP மெயின் கேமரா (Sony IMX921), 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ்னு ஒரு சூப்பர் செட்டப் இதுல இருக்கு.
● செல்பி: முன்னாடி 50MP செல்பி கேமரா இருக்கப்போகுது, சோ வீடியோ கால் மற்றும் செல்பிக்களுக்கு பஞ்சம் இருக்காது.
● சிப்செட்: பெர்ஃபாமன்ஸை பொறுத்தவரை இதுல Snapdragon 8 Gen 5 சிப்செட் வர வாய்ப்பு அதிகமா இருக்கு. இது கேமிங் மற்றும் மல்டிடாஸ்கிங்கிற்கு வேற லெவல்ல சப்போர்ட் பண்ணும்.

இந்தியாவில் எப்போது?

விவோவோட முந்தைய மாடலான X200 FE இந்தியாவில நல்ல வரவேற்பை பெற்றுச்சு. அதேபோல இந்த X300 FE-யும் இந்தியாவோட BIS தளத்துல ஏற்கனவே சிக்கியிருக்கு. இதனால மார்ச் அல்லது ஏப்ரல் மாசத்துல இந்த போன் இந்திய சந்தைக்கு வரும்னு எதிர்பார்க்கலாம். இதோட விலை சுமார் ₹50,000-லிருந்து ₹55,000-க்குள்ள இருக்க வாய்ப்பிருக்கு.

நீங்க ஒரு காம்பாக்ட் சைஸ்ல, சூப்பர் கேமரா மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் இருக்குற போன் தேடிட்டு இருந்தா, கண்டிப்பா இந்த Vivo X300 FE-க்காக வெயிட் பண்ணலாம். இந்த போன் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? 90W சார்ஜிங் போதுமா இல்ல இன்னும் அதிகமா வேணுமா? கமெண்ட்ல சொல்லுங்க.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo X300 FE India Launch, Vivo X300 FE

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியால 10 கோடி பேர் ChatGPT யூஸ் பண்றாங்களா? வாராந்திர பயனர்களில் இந்தியா 2-வது இடம்! மாணவர்கள் தான் டாப்
  2. Vivo X300 FE லான்ச் ரெடி! 90W சார்ஜிங் கூடவே 6500mAh பேட்டரியா? விவோ-வின் இந்த பட்ஜெட் பிளாக்ஷிப் போன் பத்தி தெரிஞ்சிக்கோங்க
  3. சாம்சங் ஃபோல்டபிள் போன்ல இனிமே அந்த பிரச்சனை இருக்காது! புதிய "Wide" டிசைன் ரெடியாகுது! இதோ லீக் ஆன தகவல்கள்
  4. Apple-ல இருந்து மலிவு விலையில ஒரு MacBook-ஆ? அதுவும் செம்ம கலர்ஸ்ல வருதா? ஆப்பிள் பிரியர்களுக்கு இதோ ஒரு செம்ம குட் நியூஸ்
  5. AI உலகமே டெல்லிக்கு வருது! இந்தியாவின் முதல் AI Impact Summit 2026 - எப்படி Register செய்வது? Full Schedule இதோ
  6. பட்ஜெட் விலையில ஒரு தரமான சம்பவம்! Lava Yuva Star 3 லான்ச் ஆகிடுச்சு! 5000mAh பேட்டரியோட ஒரு 'ஸ்டார்' போன்
  7. மியூசிக் லவ்வர்ஸ்க்கு ஒரு குட் நியூஸ்! Sony WF-1000XM6 லான்ச் ஆகிடுச்சு! நாய்ஸ் கேன்சலேஷன்ல இதுதான் இப்போ ராஜா
  8. சும்மா சில்லுன்னு ஒரு நியூஸ்! Panasonic 2026 AC Range இப்போ இந்தியாவில லான்ச் ஆகிடுச்சு! தூசி படியாது, கரண்ட் மிச்சம்
  9. பட்ஜெட் விலையில ஒரு ஃபிளாக்ஷிப் கில்லர்! Infinix Note 60 Ultra கீக்பெஞ்ச்ல லீக் ஆகிடுச்சு! 200MP கேமரா, சாட்டிலைட் கனெக்டிவிட்டினு மிரட்டுது
  10. இனி பெரிய அடாப்டர் தேவையில்லை! சியோமியோட குட்டி 'மினி GaN' சார்ஜர் லான்ச் ஆகிடுச்சு! கேபிளும் உள்ளயே இருக்கு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.