எப்படி இருக்கு விவோ X21… ஓர் அலசல்!

விளம்பரம்
Written by Aditya Shenoy மேம்படுத்தப்பட்டது: 1 ஜூன் 2018 15:05 IST
ஹைலைட்ஸ்
  • இதன் விரல் ரேகை சென்ஸார் தான் ஹைலைட்
  • கேமரா திறனும் நன்றாக உள்ளது
  • ஆண்ட்ராய்டு 8.1 மென்பொருளில் X21 இயங்குகிறது

கடந்த சில வாரங்களில் தொடர்ந்து பல ஸ்மார்ட் போன்கள் ரிலீஸ் ஆகிக் கொண்டே இருக்கின்றன. இந்தியாவில் ஸ்மார்ட் போன்களுக்கு இருக்கும் மார்கெட்டை பிடிக்க உள்ளூர் நிறுவனங்களிலில் இருந்து சர்வதேச கம்பெனிகள் வரை போட்டா போட்டி கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், விவோ அதன் அடுத்த ஸ்மார்ட் போனான X21-ஐ வெளியிட்டு உள்ளது. சமீபத்தில் தான் விவோ, V9 போனை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஒன்ப்ளஸ் 6 மற்றும் ஹானர் 10 ஆகிய போன்களும் ரிலீஸாகி மார்க்கெட்டை அதகளப்படுத்தி வருகின்றன. 

 

இந்நிலையில், X21 எங்கள் கையில் கிடைத்தது. சற்று அலசிப் பார்த்தோம்…

X21-ன் மிக முக்கிய ஹைலைட்டாக பார்க்கப்பட்டது அதன் விரல் ரேகை சென்ஸார் தான். டிஸ்ப்ளேவுக்குக் கீழேயே இது பிரத்யேக டிசைனில் கொடுக்கப்பட்டு உள்ளது பலரை திரும்பிப் பார்க்க வைத்தது. இதுவரை V தொடர் போன்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த விவோ, தற்போது X தொடர் போன்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து உள்ளதை அதன் பெயரே உணர்த்துகிறது. 

X21 போன் பேக்கிலேயே ஒரு விஷயத்தைப் பார்க்க முடிகிறது. ஃபிபா-வின் லோகோ மிகப் பெரியதாக இந்த போன் இருக்கும் அட்டையில் கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்குக் காரணம், இந்த ஆண்டு ரஷ்யாவில் நடக்கப் போகும் ஃபிபா உலக கோப்பை போட்டியின் ஸ்பான்சர்களில் விவோ நிறுவனமும் ஒன்று என்பதால் தான். 

 

ஒரு இயர்-போன், சார்ஜர் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி கேபிள் ஆகியவை போனுடன் கொடுக்கப்பட்டு உள்ளது.

Advertisement

6.28 இன்ச் அளவும கொண்ட் AMOLED டிஸ்ப்ளே, நம்மை எடுத்த எடுப்பில் கவர்கிறது. Snapdragon 660 SoC, octa-core ப்ராசஸரில் தான் இந்த போன் இயங்குகிறது. 6 ஜிபி ரேம் உடனும் 128 ஜிபி சேமிப்பு வசதியுடனும் அமைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அபரேடிங் மென்பொருளில் X21 இயங்குவதால், சீக்கிரமே ஒரு அப்டேட்டை எதிர்பார்க்கலாம். 

Advertisement

 

மொத்தம் மூன்று கேமராக்கள். ஒரு செல்ஃபி கேமரா. 12 மெகா பிக்சல் திறன் கொண்டது. இரண்டு பின்புற கேமரா. முறையே 12 மற்றும் 5 மெகா பிக்சல் திறன் கொண்டவையாக இருக்கின்றன. 3200mAh ஆற்றல் கொண்ட பேட்டரி, வெகு நேரம் போன் பயன்படுத்து ஏதுவாக இருக்கும். மேலும் இந்த போனை பற்றி தெரிந்து கொள்ள, இப்போதைக்கு எங்களைப் போல நீங்களும் காத்திருங்கள். 

Advertisement

 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo, Vivo X21
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.