சுதந்திர தின ஃப்ளாஷ் சேல்: சிறப்புச் சலுகையில் 1947ரூபாய்க்கு விவோ V9 , விவோ நெக்ஸ் போன்கள்

விளம்பரம்
Written by Sumit Chakraborty மேம்படுத்தப்பட்டது: 3 ஆகஸ்ட் 2018 17:59 IST
ஹைலைட்ஸ்
  • விவோ V9 விவோ நெக்ஸ் கைப்பேசிகள் ஃப்ளாஷ் சேலில் கிடைக்கும்.
  • அனைத்து ஸ்மார்ட் ஃபோன்களும் வட்டியில்லா மாதத் தவணை முறையில் கிடைக்கும்.
  • ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 9 வரை இந்த விற்பனை நடக்கும்.

இந்த மாதம் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சீன கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான விவோ, 'விவோ ஃபிரீடம் கார்னிவல்ஆன்லைன் சேல்ஸ்' என்னும் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இந்த சுதந்திர தின விற்பனை ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 9 வரை விவோவின் பிரத்யேக ஈ-காமெர்ஸ் தளத்தில் நடக்கும். இதில் வாடிக்கையாளர்கள் சிறப்புத் தள்ளுபடி, கூப்பன் டீல்கள், கேஷ்பேக் சலுகைகள் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கப்பட்ட விவோ திறன்பேசிகள், பிற துணைக் கருவிகள் மீது பெறலாம். இவற்றுள் புதிதாக வெளிவந்துள்ள விவோ நெக்ஸ் விவோ V9 கைப்பேசிகளும் அடங்கும். இதைத் தவிரவும் பல்வேறு சலுகைகள் இந்த நாட்களில் தரப்படவுள்ளன.

இந்த விற்பனையின் சிறப்பு அம்சம் விவோ நெக்ஸ் மற்றும் விவோ V9 கைப்பேசிகள் ரூ.1947க்கும், USB கேபிள்கள், இயர் ஃபோன்கள் ரூ. 72ற்கும் விற்கப்படவுள்ளன. இந்த ஃப்ளாஷ் சேல் மூன்று நாட்களும் இரவு பன்னிரண்டு மணிக்குத் தொடங்கி ஸ்டாக் கையிருப்பு உள்ளவரைத் தொடரும். இந்த மூன்று நாட்களிலும் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட மாடல்களில் ரூ.4000 வரை கேஷ்பேக் பெறலாம். இதைத்தவிர்த்து, எல்லா விவோ திறன்பேசிகளுக்கும் பன்னிரண்டு மாதங்களுக்கான வட்டியில்லாத் தவணை முறையும் கொண்டுவரப்படவுள்ளது. ஒவ்வொரு விவோ நெக்ஸ், விவோ V9 மற்றும் விவோ X21 கைப்பேசிகளுடனும் ரூ.1200 மதிப்புள்ள ப்ளூடூத் இயர் ஃபோன்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

இந்த சிறப்பு விற்பனையின்போது பல கூப்பன்களையும் வழங்கப்படவுள்ளன. USB கேபிள்கள் மற்றும் இயர் ஃபோன்கள் வாங்குபவர்களுக்கு ரூ. 50 மதிப்புள்ள கூப்பன்களும் உயர் ரக இயர் ஃபோன்களுடன் ரூ.200 மதிப்புள்ள கூப்பன்களும், விவோ V7 மற்றும் V7+ ஃபோன்களுடன் முறையே ரூ.2000 மற்றும் ரூ.3000த்திற்கான கூப்பன்களும் வழங்கப்படவுள்ளன. இக்கூப்பன்களைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட திறன்பேசிகள் மற்றும் உபரி பாகங்களை வாங்கலாம். இந்த விற்பனை ஆகஸ்ட் 6 நண்பகல் பன்னிரண்டு மணிக்கு தொடங்குகிறது.

இதைக்குறித்து விவோ இந்தியாவின் CMO ஜெரோமி சென், "விவோ அனைத்து இந்தியர்களுக்கும் அவர்களுடைய எழுபத்து இரண்டாவது சுதந்திர தினத்தை சிறப்பானதாக்க எண்ணியது. இந்த ஃபிரீடம் கார்னிவல் புத்தம் புதிய திறன்பேசிகளுக்கு பல சலுகைகள் மூலம் அனைத்து இந்தியர்களும் விவோ பொருட்களின் வழியாகத் தங்களை சுதந்திரமாக வெளிப்படுத்திக்கொள்ளவும் கொண்டாடவும் முடியும்" என்றார்.


 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo, Vivo Carnival, Vivo Freedom Carnival, Vivo Sale
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.