Tecno Spark Go 1 செல்போன் டிசைன் பார்த்தாலே வாங்கிடுவோம்

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 23 ஆகஸ்ட் 2024 12:04 IST
ஹைலைட்ஸ்
  • Unisoc T615 சிப்செட்டில் இயங்குகிறது
  • 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது
  • Android 14 Go பதிப்பில் இயங்குகிறது

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது  Tecno Spark Go 1 செல்போன் பற்றி தான். 

ரியல்மி, மோட்டோரோலா அளவுக்கு இல்லை என்றாலும் TECNO நிறுவனமானது தொடர்ச்சியான முறையில் சில தரமான பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. சும்மா சொல்லக்கூடாது ரியல்மி, மோட்டோ நிறுவனங்களிடம் எப்படி நார்சோ மற்றும் ஜி சீரீஸ் போன்ற பட்ஜெட் விலை செல்போன் மாடல் உள்ளதோ, அதேபோல டெக்னோ நிறுவனத்திடம் Spark Series செல்போன்கள் உள்ளது. இந்த சீரிஸின் கீழ் அறிமுகமாகும் எல்லா மாடல்களுமே பட்ஜெட் விலை மாடல்களாகவே இருக்கும். Spark 20 Pro, Spark 20C, Spark 20 மற்றும் Spark Go 2024 ஆகிய மாடல்கள் இந்த சீரிஸின் கீழ் அறிமுகமான லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள் ஆகும். இதில் மிகவும் மலிவான மாடல் Spark Go 2024. இது 7 ஆயிரத்துக்கும் குறைவான பட்ஜெட்டில் கிடைக்கிறது. 

இப்போது 10 ஆயிரம் பட்ஜெட் கீழ் செல்போன் தேடுகிறீர்கள் என்றால் இந்த செல்போன் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். Spark Go செல்போன்கள் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. காரணம் இதன் ஐபோன் போன்ற டிசைன் மற்றும் விலையை மீறிய அம்சங்கள். இந்த ஸ்மார்ட்போனின் வெற்றியை தொடர்ந்து இப்போது Tecno Spark Go 1 ஸ்மார்ட்போன் கூடிய இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இது Unisoc T615 SoC சிப்செட் உடன் 8GB வரை ரேம் வசதியுடன் வந்துள்ளது. 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.67-இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது IP54-மதிப்பிடப்பட்ட நீர் மற்றும் தூசி எதிர்ப்பு கட்டமைப்பைக் கொண்டுள்ளது 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 15W சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. அதிகாரப்பூர்வ விலை பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை. 

Glittery White மற்றும் Startrail Black நிறங்களில் வந்துள்ளது. 6GB ரேம்  + 64GB மெமரி, 8GB ரேம் + 64GB மெமரி, 6GBரேம்  + 128GB மெமரி மற்றும் 8GB ரேம்  + 128GB மெமரி என நான்கு விதமாக அம்சங்களில் கிடைக்கிறது. Tecno Spark Go 1 ஆனது Android 14 Go பதிப்பில் இயங்குகிறது. 6.67-inch HD+ (720x1,600 பிக்சல்கள்) 120Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. டிஸ்ப்ளே செல்ஃபி ஷூட்டருக்கான துளையிடப்பட்ட பஞ்ச் கட்அவுட் உள்ளது.  முன்பக்க கேமரா கட்அவுட்டைச் சுற்றி அறிவிப்புகளைக் காட்டும் டைனமிக் போர்ட் அம்சம் உள்ளது. Unisoc T615 சிப்செட் உடன் இணைந்து 8GB வரை ரேம் மற்றும் 128GB வரை மெமரி ஆப்ஷன் உடன் வருகிறது.  8ஜிபி ரேம் வசதியை கூடுதலாக சேர்த்து 16ஜிபி வரை விரிவாக்க முடியும்.

கேமராவை பொறுத்தவரை, டெக்னோ ஸ்பார்க் கோ 1 ஆனது இரட்டை ஃபிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அரட்டைக்கு, முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா மற்றும் இரட்டை ஃபிளாஷ் உள்ளது.

பாடல் கேட்க டிடிஎஸ் ஒலியுடன் கூடிய இரட்டை ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. ஐஆர் கட்டுப்பாட்டு வசதியை  கொண்டுள்ளது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. இது 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. பேட்டரி யூனிட் ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 நாட்கள் வரை இயங்கும். 31 மணிநேர அழைப்புகளை மேற்கொள்ளும் அளவுக்கு சார்ஜ் தாங்கும். நான்கு ஆண்டுகளுக்கு எந்த பின்னடைவும் இல்லாமல் தடையற்ற செயல்திறனை வழங்கும் என கூறப்படுகிறது.


 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Tecno Spark Go 1, Tecno Spark Go 1 Specifications, Tecno
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டிசைனிங் கத்துக்கணுமா? அடோப் டூல்ஸ் இப்போ ஃப்ரீ! இந்திய மாணவர்களுக்கு 'அடோப்' தந்த செம்ம கிப்ட்
  2. WhatsApp குரூப்ல இப்போதான் சேர்ந்தீங்களா? கவலைப்படாதீங்க! பழைய 100 மெசேஜ்களை இனி நீங்க படிக்கலாம்
  3. ஜியோ ஹாட்ஸ்டார் சாட்ஜிபிடி வேற லெவல் என்டர்டைன்மென்ட்! இனி நம்ம ஊர் மொழியிலேயே பேசி படங்களைத் தேடலாம்
  4. சாட்ஜிபிடி இப்போ நம்ம காலேஜுக்குள்ளயே வந்துடுச்சு! 1 லட்சம் மாணவர்களுக்கு ஸ்பெஷல் கோர்ஸ்.. ஓபன் ஏஐ-யின் அதிரடி பிளான்
  5. டெல்லியில் 1,100-க்கும் மேற்பட்ட போலி நதிங், CMF பொருட்கள் பறிமுதல்! கூகுள் போல நதிங் நிறுவனமும் எச்சரிக்கை - முழு விவரம்
  6. இனி இன்டர்நெட் வேகம் வேற லெவல்ல இருக்கும்! கடலுக்கு அடியில் கூகுள் போடும் புதிய கேபிள் ரூட்கள்
  7. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜியோவின் மெகா கிப்ட்! ரூ.1457 பெனிபிட்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே
  8. Pixel 10a வந்தாச்சு மக்களே! தரமான கேமரா, வேற லெவல் பேட்டரி.. ஐபோனுக்கு செம்ம டஃப் கொடுக்கும் போலயே
  9. இனி டேட்டா கேபிள் தேவையில்லை! Pixel 9 போன் வச்சிருக்கீங்களா? ஐபோனுக்கு அசால்ட்டா ஃபைல் அனுப்பலாம்
  10. மே 19-ல் கூகுள் போடப்போகும் மெகா பிளான்! Android 17 முதல் Gemini AI வரை - முழு விபரம் இதோ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.