டூயல் நாட்ச் டிஸ்பிளேயுடன் அறிமுகமாகிறது ஷார்ப் அக்குவாஸ் ஆர்2 காம்பேக்ட்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 16 நவம்பர் 2018 20:38 IST
ஹைலைட்ஸ்
  • ஷார்ப் அக்குவாஸ் ஆர்2 காம்பேக்ட் ஜனவரி மாதத்தில் கிடைக்கும்.
  • இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு டிஸ்பிளே நாட்ச்கள் உள்ளன.
  • ஸ்நாப்டிராகன் 845 SoCல் இயங்கும்.

ஷார்ப் அக்குவாஸ் ஆர்2 காம்பேக்ட் ஸ்நாப்டிராகன் 845 SoCல் இயங்குகிறது.

ஷார்ப் அக்குவாஸ் ஆர்2 காம்பேக்ட் ஸ்மார்ட்போன் ஜப்பானில் அறிமுகமாகியுள்ளது. தற்போது பிரபலமாகி வரும் டிஸ்பிளே நாட்சை, அதை இந்த ஸ்மார்ட்போன் டூயல் நாட்ச் மூலம் ஒரு படி முன்னோக்கி கொண்டு சென்றுள்ளது. அக்குவாஸ் ஆர்2 ஸ்நாப்டிராகன் 845 SoC, 5.2 இன்ச் டிஸ்பிளே, 64ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ், வாட்டர் ப்ரூஃப் மற்றும் டஸ்ட் ப்ரூஃப்-க் கொண்டுள்ளது.

ஷார்ப் அக்குவாஸ் ஆர்2 காம்பேக்ட்-ன் விலை, டிசைன்

ஷார்ப் அக்குவாஸ் ஆர்2 காம்பேக்ட்டின் விலை என்னவாக இருக்குமென்று இது வரை அறிவிக்கப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போன் ஜப்பானில் ஜனவரி மாதம் முதல் சாஃப்ட் பேங்க் வழியாக கிடைக்கும். முன் குறிப்பிட்டது போல இந்த போனில் இரு நாட்ச்கள் உள்ளன. ஷார்ப் அக்குவாஸ் ஆர்2 காம்பேக்டில் அலுமினியம் ஃப்ரேம், வலது மூலையில் ஒலியை கூட்ட குறைக்க பட்டன்கள் மற்றும் போனின் முன்புறம் ஒரு கேமிராவும், பின்புறம் ஒரு கேமிராவும் உள்ளது.

ஷார்ப் அக்குவாஸ் ஆர்2 காம்பேக்ட்டின் முக்கியம்சங்கள்,

ஷார்ப் அக்குவாஸ் ஆர்2 காம்பேக்ட்டில் 5.2 இன்ச் ஃபுல் ஹெச்.டி + டிஸ்பிளேயுடன் கொரில்லா கிளாஸ் 3 மற்றும் டெம்பர் கிளாஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்நாப்டிராகன் 845 SoCயுடன் 4 ஜிபி ரேமினைக் கொண்டுள்ளது. 64ஜிபி உள்கட்ட சேமிப்பு மற்றும் 512 ஜிபி மைக்ரோSD பயன்படுத்துவதற்கான வசதியும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 2500 2mAh பேட்டரி உள்ளது. இதன் எடை 135கிராமாகும். பேஸ் அன்லாக் மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரைக் கொண்டுள்ளது.


 

 
KEY SPECS
Display 5.20-inch
Front Camera 8-megapixel
Rear Camera 22.6-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 2500mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2280 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. OnePlus 16 மற்றும் Oppo Find X10 அல்ட்ரா போன்கள் இந்திய அறிமுகத்தைத் தவிர்க்கலாம்: கசிவு சுட்டிக்காட்டுகிறது
  2. இந்த சாம்சங் ஸ்மார்ட்போனுக்கு பிரம்மாண்ட தள்ளுபடி; இப்போது ₹22,000 குறைவான விலையில்: ஆஃபர் விவரங்கள் இதோ!
  3. Poco M8 Power இந்திய அறிமுகம் டீஸ் செய்யப்பட்டது; பிளிப்கார்ட் விற்பனை உறுதி: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
  4. இந்தியாவில் Oppo K14, K14x மற்றும் A6s போன்களின் விலை உயர்வு: புதிய விலைப் பட்டியல்
  5. Oppo A7 Pro Max-ல் 10,000mAh பேட்டரி, Snapdragon 4 Gen 5 SoC மற்றும் பல அம்சங்கள் இடம்பெற வாய்ப்பு
  6. Vivo X300 E அறிமுக தேதி உறுதி செய்யப்பட்டது; முன்-பதிவு சலுகைகள் மற்றும் முக்கிய அம்சங்கள் வெளிவந்தன
  7. 2026-இல் உங்கள் ஜியோ (Jio) eSIM-ஐ எவ்வாறு ஆக்டிவேட் செய்வது: ஒரு ஸ்டெப்-பை-ஸ்டெப் வழிகாட்டி
  8. இந்தியாவில் Apple Music, Apple One சந்தா கட்டணங்கள் உயர்வு; தனிநபர் திட்டம் இப்போது ரூ. 139-ல் தொடங்குகிறது
  9. சிறந்த AI கேமரா அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள்: Samsung Galaxy S26 Ultra, Pixel 10 மற்றும் பல
  10. இந்தியாவில் ரூ. 40,000-க்குள் கிடைக்கும் சிறந்த மொபைல்கள்: Redmi Turbo 5 முதல் OnePlus Nord CE 6 வரை
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.