Samsung Galaxy S10 Lite லேட்டஸ்ட் அப்டேட்டில் என்ன ஸ்பெஷல்...? 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 4 மார்ச் 2020 16:10 IST
ஹைலைட்ஸ்
  • Samsung Galaxy S10 Lite புதிய மென்பொருள் அப்டேட்டைப் பெறுகிறது
  • இது 60fps-ல் 4K & 4K தெளிவுத்திறனில் சூப்பர் ஸ்டெடி மோடை சேர்க்கிறது
  • இந்த அப்டேட், பிப்ரவரி 2020 பாதுகாப்பு இணைப்பைக் கொண்டுவருகிறது

Samsung Galaxy S10 Lite புதிய அப்டேட்டில் மேம்பட்ட கேமரா அம்சங்களைப் பெறுகிறது

சாம்சங் இந்தியாவில் Galaxy S10 Lite-க்கான புதிய அப்டேட்டை வெளியிடத் தொடங்கியுள்ளது, இது ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்சை மேம்படுத்துகிறது மற்றும் 60fps-ல் 4K வீடியோ ரெக்கார்டிங், 4K ரெசல்யூஷனில் சூப்பர் ஸ்டெடி மோட், படத்தின் தரம் மற்றும் பிற பொது நிலைத்தன்மை, பிழை திருத்தங்கள் மற்றும் புதிய கேமரா அம்சங்களை சேர்க்கிறது. இந்த அப்டேட் சுமார் 416.22MB அளவு கொண்டதாகும்.

டைசென்ஹெல்ப் (Tizenhelp) அறிவித்தபடி, மென்பொருள் அப்டேட், தற்போதுள்ள ஜனவரி 2020 பாதுகாப்பு இணைப்பை பிப்ரவரி வரை புதுப்பிக்கிறது. புதிய கேமரா அம்சங்கள் முக்கியமாக பின்புற, முதன்மை கேமராவை இலக்காகக் கொண்டுள்ளன. அப்டேட்டுக்கு பிறகு, நீங்கள் இப்போது 4K (3,840x2,160 பிக்சல்கள்) தெளிவிதிறன் மற்றும் 60fps-ல் பதிவு செய்ய முடியும். தற்போதைய சூப்பர் ஸ்டெடி ஷூட்டிங் மோட் 1080p ரெசல்யூஷனில் வைட்-ஆங்கிள் கேமரா மூலம் படப்பிடிப்புக்கு வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்டேட்டுக்கு பிறகு, நீங்கள் 4K தெளிவுதிறன் வரை பதிவு செய்ய முடியும். இது படங்களின் தரத்தையும் கேமரா செயலியின் ஸ்திரத்தன்மையையும் மேம்படுத்தியுள்ளதாக சாம்சங் கூறுகிறது.

புதிய அப்டேட் கேமராவில் பல மேம்பாடுகளைக் கொண்டுவருகிறது

கேமரா தவிர, புதிய அப்டேட் கைரேகை அங்கீகாரத்தில் மேம்பாடுகளைச் சேர்க்கும் மற்றும் பிற செயல்பாடுகளின் ஒட்டுமொத்த ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் என்று கூறப்படுகிறது.

Samsung Galaxy S10 Lite, Galaxy Note 10 Lite உடன், நிறுவனத்தின் இடைப்பட்ட சலுகைகள் மற்றும் OnePlus சாதனங்களின் சந்தைப் பங்கைக் கைப்பற்றும் முயற்சியாகும். Galaxy S10 Lite குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 SoC-ஐ கொண்டுள்ளது, மேலும் இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒரு வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது, இதன் விலை ரூ.39.990 ஆகும். Samsung Galaxy S10 Lite குறித்த எங்கள் முழு மதிப்பாய்வையும் இங்கே (right here) படிக்கலாம்.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sturdy body
  • Display is bright and vivid
  • Good overall performance
  • Solid battery life
  • Capable cameras
  • Bad
  • Low-light video isn’t great
  • No IP rating or wireless charging
  • Back scuffs easily
 
KEY SPECS
Display 6.70-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 12-megapixel + 5-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4,500mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.