சாம்சங் கேலக்ஸி M51 குறித்த விவரங்கள் லீக்! என்ன சிறப்பம்சங்கள்?

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 21 ஆகஸ்ட் 2020 19:48 IST
ஹைலைட்ஸ்
  • Samsung Galaxy M51 may be launched soon
  • It is said to be powered by the Snapdragon 730 SoC
  • Latest Samsung Galaxy M51 leaks contradict older rumours

இந்த ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை

Photo Credit: OnLeaks/ Pigtou

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி M51 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ள நிலையில், அதன் சிறப்பம்சங்கள் கசிந்துள்ளன.

சாம்சங் நிறுவனம் புத்தம் புதிய கேலக்ஸி M51 என்ற ஸ்மார்ட்போனை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில், இதில் 6.67 அளவுள்ள அமோலேட் டிஸ்பிளே இருக்கலாம் என்றும், ஸ்நாப்டிராகன் 730 SoC பிராசசர் இருக்கலாம் என்றும் தகவல்கள் வந்துள்ளன. 

இது தொடர்பாக தொழில்நுட்ப பிரியர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சில விவரங்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, சாம்சங் M51 ஸ்மார்ட்போன் மார்ச் மாதமே அறிமுகம் செய்வதற்கு திட்டமிடப்பட்டதாகவும், ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக சரியான நேரத்தில் உற்பத்தி பணிகளை செய்ய முடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது. 
 

சாம்சங் கேலக்ஸி M51 ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் திரை, அமோலேட் டிஸ்பிளே, ஸ்நாப்டிராகன் 730 SoC உள்ளது. இந்த தகவல் மட்டும் தான் வெளிவந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், வழக்கமாக எம் சீரிஸில் எக்ஸினோஸ் பிராசசர் தான் இருக்கும். இம்முறை எக்ஸினோஸ்க்குப் பதிலாக ஸ்னாப்டிராகன் பிராசசர் இருப்பதாக கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி M51 இல் எதிர்பார்க்கப்படும் பிற சிறப்பம்சங்கள்:

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
திரை அளவு: 6.67 இன்ச்
டிஸ்பிளே: அமோலேட்
பிராசசர்: ஸ்நாப்டிராகன் 730 SoC
ரேம்: 8ஜிபி 
கேமரா: பின்பக்கத்தில் ட்ரிப்பிள் கேமரா. 
பிரைமரி கேமார: 64MP, செகண்டரி கேமரா:  12MP அல்ட்ரா வைட் லென்ஸ், 
பேட்டரி சக்தி:  7,000 mAh 

இந்த ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.


Should the government explain why Chinese apps were banned? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Samsung, Samsung Galaxy M51, Samsung Galaxy M51 Specifications
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. பிளிப்கார்ட் விற்பனை 2026: சாம்சங், ஆசஸ், டெல் மற்றும் ஹெச்பி மடிக்கணினிகளுக்கான சிறந்த சலுகைகள்
  2. அமேசான் கிரேட் சம்மர் சேல் 2026: விற்பனைக்கு முன்னதாக வீட்டு உபயோகப் பொருட்களுக்கான சிறந்த சலுகைகள் அறிவிப்பு
  3. 2026 Q1: உலகின் அதிகம் விற்ற போன் ஐபோன் 17; சிறந்த ஆண்ட்ராய்டு போன் சாம்சங் கேலக்ஸி A07 4G
  4. பிளிப்கார்ட் சம்மர் சேல்: மோட்டோரோலா, ரியல்மி, ஓப்போ ஆண்ட்ராய்டு போன்களுக்கு அதிரடி சலுகைகள்
  5. ஒன்பிளஸ் சம்மர் சேல்: ஒன்பிளஸ் 15, 13 மற்றும் பேட் 4 மாடல்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு
  6. CMF Watch 3 Pro இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு: எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள், அம்சங்கள்
  7. கடந்த ஆண்டு எஃப்எஸ்யூ (FSU)-வில் நடந்த துப்பாக்கிச் சூடு திட்டமிட சாட்ஜிபிடி உதவியதாகக் குற்றச்சாட்டு: அறிக்கை
  8. பிளிப்கார்ட் சேல்: ஐபோன் 17 மிகக்குறைந்த விலையில்! ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ், 16 சலுகைகளும் வெளியீடு
  9. அமேசான் கிரேட் சம்மர் சேல் 2026: கேலக்ஸி S25 அல்ட்ரா, ஐகூ 15, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் டீஸர்கள் வெளியீடு
  10. அமேசான் சம்மர் சேல்: சாம்சங், TCL, சியோமி ஸ்மார்ட் டிவி சலுகைகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.