Samsung S20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!  

Samsung S20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!  

Galaxy S20 மூன்று போன்களும், சாம்சங்கிலிருந்து 2020-ஆம் ஆண்டிற்கான முதல் ஃபிளாக்ஷிப்கள் ஆகும்

ஹைலைட்ஸ்
  • Galaxy S20 சீரிஸ்கள் 120Hz AMOLED டிஸ்பிளேக்களைக் கொண்டுள்ளது
  • போன்களில் 100x ஜூம் வரை புதிய hybrid optical zoom system உள்ளது
  • Galaxy S20 Ultra, 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்டுள்ளது
விளம்பரம்

சாம்சங் 2020-ஆம் ஆண்டிற்கான அதன் S சீரிஸ் ஃபிளாக்ஷிப்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது - Galaxy S20, Galaxy S20+ மற்றும் Galaxy S20 Ultra. மூன்று போன்களும் புதிய 120Hz புதுப்பிப்பு வீதக் டிஸ்பிளேக்கள், 5G, 8K வீடியோ ரெக்கார்டிங் ஆதரவுடன் மேம்படுத்தப்பட்ட கேமராக்கள், பெரிய பேட்டரிகள் மற்றும் மெலிதான பெசல்களுடன் புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 


Samsung Galaxy S20, Galaxy S20 , Galaxy S20 Ultra விலை:

Samsung Galaxy S20 சீரிஸ் மார்ச் 6 முதல் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன்களின் விலை $999.99 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.71,300) முதல் $1,599.99 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,14,100) வரை என்று நிறுவனம் அறிவித்துள்ளது. Galaxy S20 5G-யின் விலை $999 முதல், Galaxy S20+ 5G-யின் விலை $1,199 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.85,500) மற்றும் Galaxy S20 Ultra 5G-யின் விலை $1,399 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.99,800)-யில் இருந்து தொடங்கும். இது உலகளாவிய அறிவிப்பாக இருப்பதால், இந்தியா விலை நிர்ணயம் அல்லது கிடைப்பது குறித்து எங்களிடம் எந்த விவரமும் இல்லை.

Galaxy Buds truly wireless இயர்போன்களையும் சாம்சங் அறிமுகப்படுத்தியது. இதில் இப்போது இருவழி ஸ்பீக்கர்கள், மேம்பட்ட ஒலி மற்றும் குரல் தெளிவுக்கான மூன்று மைக்ரோஃபோன்கள் மற்றும் ஒரே சார்ஜில் 11 மணிநேர பேட்டரி ஆயுள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இயர்போன்கள் 'Galaxy Buds' என்று அழைக்கப்படும் அவற்றின் சொந்த செயலியைக் கொண்டிருக்கும், இது இறுதியாக iOS சாதனங்களுடன் வேலை செய்ய அனுமதிக்கிறது. நிகழ்வில், Galaxy Z Flip-ஐயும் Samsung அறிமுகப்படுத்தியது.

 

Samsung Galaxy S20 விவரக்குறிப்புகள்:

Samsung Galaxy S20 மிகச் சிறியது. இது 151.7x69.1x7.9mm அளவீட்டையும் 163 கிராம் எடையையும் கொண்டுள்ளது. இது, QHD (1,440x3,200 pixels) தெளிவுதிறன் மற்றும் pixel count of 563ppi உடன் 6.2-inch Infinity-O Dynamic AMOLED 2X டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது HDR10 சான்றிதழ் மற்றும் 120Hz-ன் உயர் புதுப்பிப்பு வீதத்தை ஆதரிக்கிறது. இந்த போன், உங்கள் பகுதி மற்றும் நீங்கள் எடுக்கும் மாதிரியைப் பொறுத்து, 7nm octa-core பிராசசர் அல்லது Qualcomm Snapdragon 865 SoC மூலம் இயக்கப்படுகிறது

Galaxy S20 LTE பதிப்பிற்காக 8GB அல்லது 12GB (5G variant மட்டும்) LPDDR5 RAM மற்றும் 128GB ஸ்டோரேஜுடன் வருகிறது. இதனை microSD card வழியாக (1TB வரை) விரிவாக்கம் செய்யலாம். Ultrasonic in-display fingerprint சென்சார் மற்றும்  பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான முக அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். Galaxy S20-க்கு தூசி மற்றும் நீர் எதிர்ப்புக்கு IP68 சான்றளிக்கப்பட்டுள்ளது. இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது (பெட்டியில் சார்ஜர் சேர்க்கப்பட்டுள்ளது), ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 மற்றும் 4,000mAh பேட்டரிக்கு ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றை ஆதரிக்கிறது.

கேமராக்கள் பெரிய மேம்படுத்தலைப் பெறுகின்றன. Galaxy S20 டிரிபிள் ரியர் கேமராக்களைக் கொண்டுள்ளது, இதில் f/1.8 aperture, Super Speed Dual Pixel AF மற்றும் OIS உடன் 12-மெகாபிக்சல் wide-angle சென்சார், f/2.2 aperture உடன் 12 மெகாபிக்சல் ultra-wide angle லென்ஸ் மற்றும் f/2.0 aperture, PDAF மற்றும் OIS உடன் 64 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை அடங்கும். சில புதிய கேமரா அம்சங்களில் 3x hybrid optical zoom, 30x வரை Super Resolution Zoom மற்றும் 'Single Take' என்ற புதிய ஷூட்டிங் பயன்முறை ஆகியவை அடங்கும். பல்வேறு கண்ணோட்டங்களுக்காக, அனைத்து சென்சார்களிடமிருந்தும் ஒரு புகைப்படத்துடன், ஒரு குறுகிய வீடியோவைப் பிடிக்கிறது. செல்ஃபி கேமரா f/2.2 aperture உடன் 10 மெகாபிக்சல் சென்சாரைக் கொண்டுள்ளது.

பிற விவரக்குறிப்புகளில், Android 10-ஐ அடிப்படையாக கொண்ட One UI 2.1, dual-band Wi-Fi 6, Bluetooth 5, NFC, Dolby Atmos sound உடன் stereo speakers ஆகியவை அடங்கும். இது பிராந்தியத்தைப் பொறுத்து ஒற்றை அல்லது இரட்டை சிம் (hybrid) மாடல்களிலும் கிடைக்கும்.


Samsung Galaxy S20+ விவரக்குறிப்புகள்:

இந்த Galaxy S20+, Galaxy S20 உடன் மிகவும் இணைந்திருக்கிறது. ஆனால், இது அளவு, பேட்டரி திறன் ஆகியவற்றில் வேறுபடுகிறது. மேலும், கூடுதல் பின்புற கேமராவையும் பெறுவீர்கள். Galaxy S20+, 161.9x73.7x7.8mm அளவீட்டையும் 186 கிராம் எடையையும் கொண்டுள்ளது (5G variant 188 கிராம் ஆகும்). இது சற்று பெரிய, 4,500mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. LTE பதிப்பில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கிறது, 5G வேரியண்ட்டில் 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜைப் பெறலாம். பின்புற depth கேமராவைச் சேர்ப்பதைத் தவிர, முன் மற்றும் பின்புற கேமரா உள்ளமைவுகளும் அப்படியே இருக்கின்றன.

pixel count of 525ppi மற்றும் Infinity-O hole-punch உடன் 6.7-inch QHD (1,440x3,200 pixels) Dynamic AMOLED 2X டிஸ்பிளேவை நீங்கள் பெறலாம். 

samsung galaxy s20 plus ultra back gadgets 360 samsung

Samsung Galaxy S20, Galaxy S20 , and Galaxy S20 Ultra ஆகியவை சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தப்பட்டன

Samsung Galaxy S20 Ultra விவரக்குறிப்புகள்:

இறுதியாக, இந்த சீரிஸின் மிகப்பெரிய போனான Galaxy S20 Ultra-வுக்கு வருகிறோம். இது pixel count of 511ppi உடன் 6.9 அங்குல QHD டைனமிக் AMOLED 2X டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. Galaxy S20 Ultra, 12GB அல்லது 16GB LPDDR5 RAM உடன் வருகிறது, அதே நேரத்தில் LTE மற்றும் 5G வேரியண்டுகளுக்கு 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி வரை ஸ்டோரேஜ் உள்ளது. பேட்டரி திறன் 5,000mAh வரை பம்ப் செய்யப்பட்டுள்ளது. Galaxy S20 Ultra ஆப்ஷ்னல் அடாப்டர் மூலம் 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.

Galaxy S20 Ultra, 166.9x76x8.8mm அளவீட்டையும் 220 கிராம் எடையையும் கொண்டுள்ளது (5G variant 222 கிராம் ஆகும்). சில கேமரா சென்சார்களும் மற்ற இரண்டு மாடல்களை விட மேம்படுத்தப்பட்டுள்ளன. wide-angle மற்றும் depth கேமராக்களைத் தவிர, f/1.8 aperture, OIS, PDAF உடன் 108-மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார் மற்றும் f/3.5 aperture, PDAF, OIS உடன் 48-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவை நீங்கள் பெறலாம். Galaxy S20 Ultra புதிய periscope-style telephoto லென்சையும் கொண்டுள்ளது. இது 10x hybrid optical zoom மற்றும் 100x வரை அதிகபட்ச ‘Super Resolution Zoom' ஆகியவற்றை அடைய அனுமதிக்கிறது. முன் கேமரா f/2.2 aperture உடன் 40-மெகாபிக்சல் சென்சாரைக் கொண்டுள்ளது.

Disclosure: Samsung sponsored the correspondent's flights and hotel for the trip to San Francisco.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium construction quality
  • Excellent display
  • Lean, feature-rich UI
  • Very good rear cameras
  • Great app and gaming performance
  • Day-long battery life
  • Bad
  • Heats up under load
  • Bland design
Display 6.70-inch
Processor Samsung Exynos 990
Front Camera 10-megapixel
Rear Camera 12-megapixel + 64-megapixel + 12-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1440x3200 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Top-notch build quality
  • Gorgeous display
  • Excellent cameras, zoom capability
  • Good battery life
  • Clean UI
  • Bad
  • Big and unwieldy
  • Extremely expensive
Display 6.90-inch
Processor Samsung Exynos 990
Front Camera 40-megapixel
Rear Camera 108-megapixel + 48-megapixel + 12-megapixel + Depth
RAM 12GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 1440x3200 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »