இந்தியாவில் இன்று அறிமுகாமான சாம்சங் கேலக்ஸி A9-ன் ஹைலைட்ஸ்!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 21 நவம்பர் 2018 16:25 IST
ஹைலைட்ஸ்
  • சாம்சங் கேலக்ஸ் ஏ9 பின்புறத்தில் 4 கேமிராக்கள் உள்ளன.
  • ஸ்நாப்டிராகன் 660 SoC கொண்டுள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போன் அறிமுக விழா இன்று மதியம் 12 மணிக்கு நடைபெற்றது.

சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) இந்தியாவில் இன்று அறிமுகமாகி உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) அறிமுக விழா இன்று மதியம் 12 மணிக்கு நடைபெற்றது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவலை அதன் நிறுவனம் மலேசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அக்டோபர் மாதம் வெளியிட்டது. சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) நான்கு கேமிராக்களை பெற்றிருப்பதே அதன் தனிச்சிறப்பாகும்.

நான்கு கேமிராக்களுக்கும் தனிப்பட்ட சென்சார் மற்றும் மாறுபட்ட நான்கு படங்களை ஒரே சமயத்தில் போட்டோ எடுக்க முடியும். இந்த 4 கேமிராக்களும் ஒன்றன் கீழ் ஒன்றாக அமைந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) டால்பி அட்மாஸ் ஆடியோவினை சப்போர்ட் செய்கிறது. பிளாக், புளூ மற்றும் பிங்க் நிறங்களில் கேலக்ஸிஏ9 (2018) கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018)ன் முக்கியம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ9(2018)னில் குவால்கம் ஸ்நாப்டிராகன் 660 SoC பெற்றுள்ளது. 128 ஜிபி உள்கட்ட கேமிப்பு திறனைக் கொண்டுள்ளது. எஸ்.டி கார்ட் மூலம் 512 ஜிபி வரை சேமிக்கலாம். 3800 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதில் 6ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ரேம் வேரியண்ட்கள் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி ஏ9(2018)னின் பின்புறம் 4 கேமிராக்கள் உள்ளன. பின்புறத்தில் பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது. கேலக்ஸி ஏ9 (2018)னில் 6.3 இன்ச் ஹெச்.டி + டிஸ்பிளே 18.5:9 என்ற வீதத்தில் உள்ளது. ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோவினைக் கொண்டுள்ளது. டூயல் நானோ சிம் ஸ்லாட்டுகளைக் கொண்டுள்ளது.


சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018)ன் விலை

சாம்சங் கேலக்ஸி ஏ9(2018)னை இன்று முதல் முன்பதிவு செய்யலாம். முன்பதிவினை சாம்சங்கின் ஆஃப்லைன் ஸ்டோர்கள், அமேசான் இந்தியா, ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோர்ஸ், பேடி எம் மால் மற்றும் பிளிப்கார்ட்டில் செய்யலாம். சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) 6ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 36,990. 8ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ. 39,990 ஆகும். ஹெச்.டி.எஃப்.சி-ன் கிரேடிட் கார்ட், டெபிட் கார்ட் பயன்பாட்டாளர்களுக்கு 3000 கேஷ் பேங் கொடுக்கப்படும் என்று சாம்சங் அறிவித்துள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) நவம்.28 ஆம் தேதி மூலம் இந்தியாவில் கிடைக்கும்.
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டைமன்சிட்டி 9500 சிப், 8,550mAh பேட்டரியுடன் ரெட்மி K90 மேக்ஸ் அறிமுகம்: விலை மற்றும் முழு விவரங்கள் இதோ
  2. 200MP கேமரா, 7025mAh பேட்டரியுடன் ஒப்போ ஃபைண்ட் X9s ப்ரோ அறிமுகம்: விலை மற்றும் முழு விவரங்கள்
  3. வாட்ஸ்அப் பிளஸ் சந்தா: இது என்ன, விலை, அம்சங்கள் மற்றும் நன்மைகள்
  4. விவோ X300 FE இந்திய அறிமுகத் தொகுப்பு: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  5. ஓப்போ என்கோ கிளிப் 2 மற்றும் வாட்ச் X3 மினி அறிமுகம்: 40 மணிநேர பேட்டரி மற்றும் ஓப்பன்-இயர் வடிவமைப்பு
  6. ஒப்போ F33 ப்ரோ 5G விமர்சனம்: ரூ. 40,000-க்கு கீழ் உள்ள மிகச்சிறந்த வடிவமைப்பைக் கொண்ட ஸ்மார்ட்போன் இதுதானா?
  7. ரெட்மி பட்ஸ் 8 அறிமுகம்: 50dB ANC மற்றும் 44 மணிநேர பேட்டரி பேக்கப் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  8. இந்தியாவில் ரெட்மி A7 Pro 4G மற்றும் ரெட்மி A7 4G அறிமுகம்: Unisoc T7250 சிப்செட், விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  9. இந்தியாவில் விவோ போன்களின் விலை ரூ.4000 வரை உயர்வு: Vivo T5x, V70, Y31 5G ஆகியவற்றின் புதிய விலை விவரங்கள் இதோ
  10. மோட்டோரோலா ரேஸர் 2026, ரேஸர்+ 2026 அறிமுக தேதி, விலை மற்றும் சிறப்பம்சங்கள் கசிவு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.