5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ 21 எஸ் அறிமுகம்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 16 மே 2020 10:59 IST
ஹைலைட்ஸ்
  • சாம்சங் கேலக்ஸி ஏ 21 எஸ்-ல் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது
  • சாம்சங் கேலக்ஸி ஏ 21 எஸ் 3 ஜிபி ரேம் & 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது
  • சாம்சங் கேலக்ஸி ஏ 21 எஸ் 6.5 இன்ச் எச்டி + டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும்

சாம்சங் கேலக்ஸி ஏ 21 எஸ் 6.5 இன்ச் எச்டி + இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளேவுடன் வருகிறது

சாம்சங் கேலக்ஸி ஏ 21 எஸ் ஸ்மார்ட்போன் லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன் சாம்சங்கின் இன்ஃபினிட்டி ஓ டிஸ்ப்ளே, குவாட் கேமரா அமைப்பு மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இந்த சாம்சங் மிட்-ரேஞ் போனில் டால்பி அட்மஸ் ஆடியோ உள்ளது. 
 

போனின் விலை:

Samsung கேலக்ஸி ஏ 21 எஸ்-ன் ஆரம்ப விலை ஜிபிபி 179 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.16,500) ஆகும். இந்த போன் கருப்பு, வெள்ளை மற்றும் நீல வண்ணங்களில் காணப்படும். இந்தியாவில் இந்த போன் கிடைப்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

Advertisement

போனின் விவரங்கள்:

Samsung Galaxy A21s-ல் 6.5 இன்ச் எச்டி + (720 எக்ஸ் 1600 பிக்சல்கள்) இன்ஃபினிட்டி ஓ டிஸ்ப்ளே உள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 உடன் ஒன் UI-யில் இயங்குகிறது. போனில் ஆக்டா கோர் செயலிகள், 3 ஜிபி ரேம், 32 ஜிபி  ஸ்டோரேஜ் உள்ளது. 

இந்த போன் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவை உள்ளன. செல்ஃபி எடுக்க 13 மெகாபிக்சல் சென்சார் உள்ளது.

Advertisement

போனின் உள்ளே பேட்டரி 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது 15W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் மற்றும் முக அங்கீகார தொழில்நுட்பத்துடன் வருகிறது. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.