ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் Redmi Note 10 போனின் விவரங்கள் கசிந்தன..!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 22 ஜூலை 2020 20:49 IST
ஹைலைட்ஸ்
  • ரெட்மி 9 ஸ்மார்ட்போன் இன்னும் அறிமுகமாகவில்லை
  • ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனில் 8GB ரேம் இருக்கலாம்
  • ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனில் 5ஜி தொழில்நுட்பம் இருக்கலாம்

ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமென்சிட்டி 820 SoC பிராசசர் இருக்கலாம்

ஷாவ்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 பற்றிய விவரங்கள் பெஞ்ச்மார்க் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

குறைந்த விலை ஸ்மார்ட்போனில் அதிக சிறப்பம்சங்களை வழங்கி வருவதில் முன்னணி நிறுவனமாக ஷாவ்மி நிறுவனம் திகழ்கிறது. இந்நிறுவனம் ரெட்மி ஸ்மார்ட்போனில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு சீரிஸை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில், இந்தாண்டு 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களைக் கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தது. 

ரெட்மி நோட் 9 ப்ரோ, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், குறைந்த விலையிலான ரெட்மி 9 ஸ்மார்ட்போன் இன்னும் அறிமுகமாகவில்லை.

இப்படியான சூழலில், ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனைப் பற்றிய டீசர் பெஞ்ச்மார்க் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. சீனாவின் வெய்போ என்ற தளத்தில் இதுதொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன. அதன்படி, ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமென்சிட்டி 820 SoC பிராசசர் உள்ளதாக கூறப்படுகிறது. இது அதிவேக பிராசசர் ஆகும்.  மேலும், 5ஜி சிப்செட் மற்றும் அடுத்த தலைமுறைக்கான மோடம் இந்த ஸ்மார்ட்போனில் தயாராகி வருகிறது. 

இதிலுள்ள ஃபிளாக்ஷிப் என்பது ஏற்கனவே ஹூவாய் P4 ப்ரோ+5G, ரியல்மி X50 ப்ரா 5G மற்றும் ஒப்போ ஃபைண்ட் X2 ப்ரோ ஆகியவற்றில் உள்ளது. தற்போதுள்ள விவோ ஐக்யூ Z1 5G ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமென்சிட்டி 1000+ SoC பிராசசர் உள்ளது. 

பெஞ்ச்மார்க் தளத்தின்படி ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 10ஜிபி ரேம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், போனின் தோற்றம் வெளியாகவில்லை.இந்தியாவில் மொபைல் போன்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வுக்குப் பின், ரெட்மி உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Meanwhile, it is safe to consider the listed details with scepticism. Some reports leaking the new hardware may also emerge in the coming days.


Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Redmi Note 10 specifications, Redmi Note 10, Redmi, Xiaomi
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. கூகுள் நிகழ்நேர பன்மொழி உரையாடல்களுக்காக 'ஜெமினி 3.5 லைவ் டிரான்ஸ்லேட்' வசதியை அறிமுகப்படுத்தியது
  2. ரியல்மி P4R 5G: 8000mAh பேட்டரி, மீடியாடெக் 6300 சிப்செட்டுடன் இந்தியாவில் அறிமுகம்!
  3. லாவா போல்ட் என்2 5ஜி 6,000mAh பேட்டரி, 6.75-இன்ச் டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  4. புதிய அம்சத்தால் இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்களது புரொஃபைல் கிரிட்டை இனி விருப்பம்போல மறுவரிசைப்படுத்தலாம்
  5. ஐஓஎஸ் தளத்தில் வாட்ஸ்அப் பல-கணக்கு ஆதரவு (Multi-Account Support) கூடுதல் பயனர்களுக்கு வழங்கப்படுவதாகத் தகவல்
  6. WWDC 2026: iOS 27 வெளியீட்டுத் தேதி, அப்டேட் செய்யும் முறை மற்றும் ஆதரவுள்ள சாதனங்களின் பட்டியல்
  7. WWDC 2026: முக்கிய ஆப்பிள் இண்டெலிஜென்ஸ் மேம்பாடுகளுடன் கூடிய சிரி AI-ஐ ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது
  8. WWDC 2026: ஜெமினி AI மூலம் இயங்கும் புதிய சிரி அம்சங்களை அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம்
  9. அமேசான் மெகா டீல்ஸ்: விவோ X300 FE, ஒன்பிளஸ் நோர்ட் CE 6 மற்றும் முக்கிய கேஜெட்டுகளுக்கு அதிரடி தள்ளுபடி!
  10. ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேல்: ஒன்பிளஸ் 15, நோர்ட் 6, பேட் 4 மற்றும் பல தயாரிப்புகளுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.