டூயல் செல்ஃபி கேமராவுடன் Realme X50m 5G அறிமுகம்! 

விளம்பரம்
Kathiravan Gunasekaran, மேம்படுத்தப்பட்டது: 23 ஏப்ரல் 2020 12:30 IST
ஹைலைட்ஸ்
  • Realme X50m 5G, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் ஆப்ஷன்களைக் கொண்டுள்ளது
  • இந்த போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765G SoC-யால் இயக்கப்படுகிறது
  • Realme X50m 5G, 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது

Realme X50m 5G ரியல்மே எக்ஸ் 50 எம் 5 ஜி முழு எச்டி + ஐபிஎஸ் டிஸ்ப்ளே பேனலுடன் வருகிறது

Realme, எக்ஸ் 50 சீரிஸின் மூன்றாவது ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. - Realme X50m 5G. இந்த போன் டூயக் ஹோல்-பஞ்ச் செல்பி கேமரா மற்றும் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. போனின் மற்ற சிறப்பம்சங்களில் 120Hz டிஸ்ப்ளே, 30 டபிள்யூ ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 8 ஜிபி ரேம் ஆகியவை அடங்கும்.

Realme X50m 5G விலை:

போனின் 6 ஜிபி ரேம் வேரியண்ட் சீனாவில் சிஎன்ஒய் 1,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21,500)-யாகவும், 
அதன் 8 ஜிபி ரேம் ஆப்ஷனின் விலை சிஎன்ஒய் 2,299 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.25,000)-யாகவும் உள்ளது. 
இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி வைட் மற்றும் ஸ்டாரி ப்ளூ கலர் ஆப்ஷன்களில் ஏப்ரல் 29 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும்.

 
Realme X50m 5G விவரங்கள்:

இந்த போன் டூயல்-சிம் (நானோ) ஸ்லாட்டைக் கொண்டுள்ளது. இது Realme UI உடன் Android 10-ல் இயங்குகிறது. இது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.57 இன்ச் ஃபுல்-எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் 8 ஜிபி வரை இணைக்கப்பட்டு, ஆக்டா கோர் Qualcomm Snapdragon 765G SoC-யால் இயக்கப்படுகிறது. 

போனின் குவாட் ரியர் கேமரா அமைப்பில், 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளது. இதில் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் லென்ஸ் ஆகியவை அடங்கும். 

செல்பிகளுக்காக, முன்புறத்தில் 16 மெகாபிக்சல் முதன்மை சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் ஆகிய டூயல் செல்ஃபி கேமரா அமைப்பு உள்ளது.

இந்த போன் 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜுடன் வருகிறது. இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்டுள்ளது. இது தவிர, போனில் ஹை-ரெஸ் ஆடியோ ஆதரவு மற்றும் டால்பி ஆடியோ ஒருங்கிணைப்பு உள்ளது. மேலும், இது 30W டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,200 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 163.8x75.8x8.9 மிமீ அளவு மற்றும் 194 கிராம் எடையைக் கொண்டதாகும். 

 
KEY SPECS
Display 6.57-inch
Processor Qualcomm Snapdragon 765G
Front Camera 16-megapixel + 2-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4200mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  2. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
  3. S25 Ultra: கேமரா, பேட்டரி, AI அம்சங்களுடன் மலிவான விலையில்! மிஸ் பண்ணிடாதீங்க!
  4. Dimensity 7060 சிப்செட்டுடன் Lava Storm Play 5G: கேமர்கள், பட்ஜெட் 5G-க்கு ரெடியா?
  5. கலக்கும் Realme C71: 50MP கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி - வேற லெவல் போன்
  6. Nothing-ன் புது அவதாரம்! Phone 3, Headphone 1: மாஸ் லான்ச்சுக்கு ரெடியாகுங்க
  7. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  8. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  9. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  10. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.