ரியல்மி X7, ரியல்மி X7 ப்ரோ விரைவில் அறிமுகம்! சிறப்பம்சங்களின் விவரம் கசிந்தது!!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 20 ஆகஸ்ட் 2020 11:38 IST
ஹைலைட்ஸ்
  • Realme X7 and Realme X7 Pro will come with 5G support
  • The new Realme phones are teased to have a hole-punch display
  • Realme X7 series will come with a curved display design

Realme X7 சிறப்பம்சங்கள் என்னவாக இருக்கும் என்பதைக் குறித்து வெய்போ என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Photo Credit: Weibo

ரியல்மி தரப்பில் புதிதாக X7, X7 ப்ரோ என இரண்டு ஸ்மார்ட்போன்கள்
வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்த
நிலையில், அறிமுகமாவதற்கு முன்பே அதன் சிறப்பம்சங்கள் குறித்த
விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

ரியல்மி நிறுவனம் ஊரடங்கு தளர்வு செய்த பிறகு தொடர்ந்து
ஸ்மார்ட்போன்களையும், கேட்ஜெட்ஸ்களையும் அறிமுகம் செய்து
கொண்டே இருக்கிறது. பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் முதல் ஃபிளாக்ஷிப்
ஸ்மார்ட்போன்கள் வரையில் டீஸ் செய்து கொண்டிருக்கிறது. 

அந்த வகையில், தற்போது புதிதாக ரியல்மி X7 மற்றும் ரியல்மி X7 ப்ரோ என
இரண்டு ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி
அறிமுகம் செய்யப்படுகின்றன. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரியல்மி
தளங்களில் வெளியாகியுள்ளது. இதனிடையே இந்த இரு
ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்னவாக இருக்கும்
என்பதைக் குறித்து வெய்போ என்ற இணையதளம் செய்தி
வெளியிட்டுள்ளது. 

ரியல்மி X7 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும்
Photo Credit: Weibo

அதன்படி, ரியல்மி X7 சீரிஸானது 5ஜி ஸ்மார்ட்போன் என்றும் இதில் 120Hz
ரெவ்ரெஷ் ரேட்டுடன் கூடிய அமோலேட் டிஸ்பிளே இருப்பதாகக்
கூறப்படுகிறது. மேலும் ஹோல் பஞ்ச் டிசைனுடன், அழகிய கர்வ் வளைவுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

ரியல்மி X7 சீரிஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் செப்டம்பர் 1 ஆம் தேதி
அறிமுகமாகிறது. ஆனால், உலகளாவிய அறிமுகமா என்பது குறித்த
விவரங்கள் இல்லை. 

Advertisement

இந்த ஸ்மாரட்போனில் 4,500mAh சக்தி கொண்ட பேட்டரி இருக்கலாம்
என்றும் அதற்கு ஆதரவாக 65W ஃபாஸ்ட் சார்ஜர் வரும் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது.


Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme X7, Realme X7 Pro, Realme
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டிசைனிங் கத்துக்கணுமா? அடோப் டூல்ஸ் இப்போ ஃப்ரீ! இந்திய மாணவர்களுக்கு 'அடோப்' தந்த செம்ம கிப்ட்
  2. WhatsApp குரூப்ல இப்போதான் சேர்ந்தீங்களா? கவலைப்படாதீங்க! பழைய 100 மெசேஜ்களை இனி நீங்க படிக்கலாம்
  3. ஜியோ ஹாட்ஸ்டார் சாட்ஜிபிடி வேற லெவல் என்டர்டைன்மென்ட்! இனி நம்ம ஊர் மொழியிலேயே பேசி படங்களைத் தேடலாம்
  4. சாட்ஜிபிடி இப்போ நம்ம காலேஜுக்குள்ளயே வந்துடுச்சு! 1 லட்சம் மாணவர்களுக்கு ஸ்பெஷல் கோர்ஸ்.. ஓபன் ஏஐ-யின் அதிரடி பிளான்
  5. டெல்லியில் 1,100-க்கும் மேற்பட்ட போலி நதிங், CMF பொருட்கள் பறிமுதல்! கூகுள் போல நதிங் நிறுவனமும் எச்சரிக்கை - முழு விவரம்
  6. இனி இன்டர்நெட் வேகம் வேற லெவல்ல இருக்கும்! கடலுக்கு அடியில் கூகுள் போடும் புதிய கேபிள் ரூட்கள்
  7. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜியோவின் மெகா கிப்ட்! ரூ.1457 பெனிபிட்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே
  8. Pixel 10a வந்தாச்சு மக்களே! தரமான கேமரா, வேற லெவல் பேட்டரி.. ஐபோனுக்கு செம்ம டஃப் கொடுக்கும் போலயே
  9. இனி டேட்டா கேபிள் தேவையில்லை! Pixel 9 போன் வச்சிருக்கீங்களா? ஐபோனுக்கு அசால்ட்டா ஃபைல் அனுப்பலாம்
  10. மே 19-ல் கூகுள் போடப்போகும் மெகா பிளான்! Android 17 முதல் Gemini AI வரை - முழு விபரம் இதோ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.