Poco X3 ஸ்மார்ட்போனில் 64MP கேமரா.. முக்கிய விவரங்கள் வெளியாகின!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 29 ஆகஸ்ட் 2020 15:04 IST
ஹைலைட்ஸ்
  • Poco X3 was up until now rumoured to have a 64-megapixel camera
  • The smartphone is touted to fully charge in 65 minutes
  • Poco X3 is rumoured to launch on September 8

Poco X3 ஸ்மார்ட்போனில் உள்ள 64 மெகா பிக்சல் கேமரா தரம்

Photo Credit: Twitter/ Angus Kai Ho Ng

போகோவின் புத்தம் புதிய X3 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக உள்ள நிலையில், அதன் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியாகின.

இதற்கு முன்பு இந்தாண்டு தொடக்கத்தில் வெளியான போகோ X2 ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது போகோ X3 ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது.  இதுதொடர்பாக போகோவின் டுவிட்டர் பக்கத்தில் போகோ X3 டீஸ் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, போகோ X3 ஸ்மார்ட்போனில் 64 மெகா பிக்சலுடன் கூடிய பிரைம் கேமரா உள்ளது. 

மேலும், இந்த கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையதளத்தில் வெளிவந்துள்ளன. நல்ல ISO உணர்திறன், வயிட் பேலன்ஸ், அப்பாச்சர், எக்ஸ்போசர் மதிப்பு ஆகியவை நல்ல திறன் வாய்ந்ததாக தெரிகிறது.

முன்னதாக போகோ X3 ஸ்மார்ட்போனில் கேமரா செட்அப் எப்படி இருக்கும் என்று டுவிட்டரில் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு விடையளிக்கும் வகையில், போகோ X3 ஸ்மார்ட்போனின் கேமரா படங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது..

மேலும், ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சமும் சிறப்பானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 சதவீதம் சார்ஜ் ஏறுவதற்கு 65 நிமிடங்கள் வரையில் ஆகும். இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் 33W சார்ஜிங் ஆதரவு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி போகோ X3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம். இருப்பினும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.


Poco M2 Pro: Did we really need a Redmi Note 9 Pro clone? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Poco X3, Poco
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டைமன்சிட்டி 9500 சிப், 8,550mAh பேட்டரியுடன் ரெட்மி K90 மேக்ஸ் அறிமுகம்: விலை மற்றும் முழு விவரங்கள் இதோ
  2. 200MP கேமரா, 7025mAh பேட்டரியுடன் ஒப்போ ஃபைண்ட் X9s ப்ரோ அறிமுகம்: விலை மற்றும் முழு விவரங்கள்
  3. வாட்ஸ்அப் பிளஸ் சந்தா: இது என்ன, விலை, அம்சங்கள் மற்றும் நன்மைகள்
  4. விவோ X300 FE இந்திய அறிமுகத் தொகுப்பு: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  5. ஓப்போ என்கோ கிளிப் 2 மற்றும் வாட்ச் X3 மினி அறிமுகம்: 40 மணிநேர பேட்டரி மற்றும் ஓப்பன்-இயர் வடிவமைப்பு
  6. ஒப்போ F33 ப்ரோ 5G விமர்சனம்: ரூ. 40,000-க்கு கீழ் உள்ள மிகச்சிறந்த வடிவமைப்பைக் கொண்ட ஸ்மார்ட்போன் இதுதானா?
  7. ரெட்மி பட்ஸ் 8 அறிமுகம்: 50dB ANC மற்றும் 44 மணிநேர பேட்டரி பேக்கப் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  8. இந்தியாவில் ரெட்மி A7 Pro 4G மற்றும் ரெட்மி A7 4G அறிமுகம்: Unisoc T7250 சிப்செட், விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  9. இந்தியாவில் விவோ போன்களின் விலை ரூ.4000 வரை உயர்வு: Vivo T5x, V70, Y31 5G ஆகியவற்றின் புதிய விலை விவரங்கள் இதோ
  10. மோட்டோரோலா ரேஸர் 2026, ரேஸர்+ 2026 அறிமுக தேதி, விலை மற்றும் சிறப்பம்சங்கள் கசிவு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.