போகோ எக்ஸ் 2-வின் அடுத்த விற்பனை மார்ச் 17-ல் நடைபெறும்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 13 மார்ச் 2020 10:30 IST
ஹைலைட்ஸ்
  • போக்கோ எக்ஸ் 2-வின் விலை ரூ.15,999-ல் தொடங்குகிறது
  • 120Hz டிஸ்பிளே வழங்கும் சந்தையில் மலிவான போன் இதுவாகும்
  • பிளிப்கார்ட்டில் மதியம் 12 மணிக்கு விற்பனை தொடங்கும்

போகோ எக்ஸ் 2, பிப்ரவரி 4-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

போகோ எக்ஸ் 2 பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் மலிவான போனாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் பல ஃபிளாஷ் விற்பனை மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இப்போது, ​​போகோ எக்ஸ் 2 மீண்டும் மார்ச் 17 செவ்வாய்க்கிழமை பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வர உள்ளது என்று நிறுவனம் தனது ட்விட்டரில் அறிவித்துள்ளது. 
 

இந்தியாவில் போக்கோ எக்ஸ் 2-வின் விலை, விற்பனை நேரம், மற்றும் சலுகைகள்:

Poco X2-வின் அடிப்படை 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ.15,999-யாகவும், 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.16,999-யாகவும், அதன் டாப்-எண்ட் 8 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.19,999-யாகவும் உள்ளது. 

Poco எக்ஸ் 2-வின் விற்பனை மார்ச் 17-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கும். இந்த போன் Flipkart-ல் வாங்க மட்டுமே கிடைக்கும், மேலும், Pheonix Red, Atlantis Blue மற்றும் Matrix Purple ஆகிய மூன்று வண்ணங்களும் விற்பனையில் கிடைக்கும். பிளிப்கார்ட்டில், ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ரூ.1,000 தள்ளுபடியைப் பெறலாம்.

போக்கோ எக்ஸ் 2-வின் விவரக்குறிப்புகள்:

போகோ எக்ஸ் 2 ஒரு சூப்பர் ஹை 120Hz புதுப்பிப்பு வீதத்தை வழங்கும் சந்தையில் மலிவான போனாகும். இதன் டிஸ்பிளே 1,080x2,400 பிக்சல்கள் தெளிவுதிறன் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி எஃப்எச்.டி + பேனல் ஆகும். போகோ எக்ஸ் 2 Qualcomm's ஸ்னாப்டிராகன் 730G SoC-யால் இயக்கப்படுகிறது, இது 6 ஜிபி அல்லது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.

போகோ எக்ஸ் 2, Android 10-ஐ அடிப்படையாகக் கொண்ட போகோவிற்காக வடிவமைக்கப்பட்ட MIUI 11-ல் இயங்குகிறது. இந்த போன், 27W ஃபாஸ்ட் சார்ஜருடன் 4,500 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது.

இந்த போன், 64 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர், 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றுடன் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது ஹோல்-பஞ்ச் டிஸ்பிளேவுக்குள் இரட்டை முன் கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது - 20 மெகாபிக்சல் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் ஷூட்டர்.


Is Realme 6 the Redmi Note 8 Pro killer India has been waiting for? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

                                                            

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Strong specifications at attractive prices
  • Good overall performance and battery life
  • Still photos in the daytime look very good
  • Bad
  • Large and bulky
  • Ads and bloatware in the UI
  • Poor low-light video quality
 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 730G
Front Camera 20-megapixel + 2-megapixel
Rear Camera 64-megapixel + 2-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Poco, Poco X2, Poco X2 Price in India, Poco X2 Specifications
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. உங்க ஐபோன் ஸ்லோவா இருக்கா? இதோ வந்துருச்சு iOS 26.3! புது அம்சங்கள் முதல் பேட்டரி தீர்வு வரை.. முழு விவரம் உள்ளே
  2. சாம்சங் வெறியர்களே ரெடியா? S26 Ultra-வோட 360 டிகிரி லுக் வெளியாகிடுச்சு! அந்த கேமரா ஐலேண்ட் வேற லெவல்.. முழு விவரம் உள்ளே
  3. Pixel 9a விலையில 11,000 ரூபாய் அதிரடி குறைப்பு! கூகுள் கேமரா வேணுமா? அப்போ உடனே இதை பாருங்க
  4. வெயிட்டிங் லிஸ்ட் ஓபன்! Samsung Galaxy S26 சீரிஸ் இப்போவே ப்ரீ-ரிசர்வ் பண்ணலாம்! அமேசான், பிளிப்கார்ட்ல அதிரடி விற்பனை
  5. பட்ஜெட் பத்தி கவலையே இல்ல! Samsung Galaxy S24 Ultra விலையில ₹25,000 தள்ளுபடி! அமேசான்ல ஆஃபர் மழை.. சீக்கிரம் பாருங்க
  6. சார்ஜ் போட மறந்தாலும் கவலை இல்ல! Oppo K14x 5G-ல அசுரத்தனமான 6500mAh பேட்டரி! விலை என்ன தெரியுமா?
  7. ஒன்பிளஸ் வெறியர்களுக்கு ஜாக்பாட்! OnePlus 13 விலையில 12,000 ரூபாய் அதிரடி குறைப்பு! இந்த சான்ஸ விட்றாதீங்க மக்களே
  8. iPhone-க்கு டஃப் கொடுக்க Samsung S26 ரெடி! எப்போ லான்ச்? என்னென்ன ஸ்பெஷல்? முழு விவரம் உள்ளே
  9. OnePlus-ல இவ்வளவு கம்மி விலையா? Pad 3 முதல் Buds Pro 3 வரை வாரி வழங்கும் சலுகைகள்
  10. பட்ஜெட் விலையில ஒரு தரமான 5G போன்! Lava Bold N2 இந்தியாவிற்கு வராரு.. மத்த பிராண்ட்லாம் கொஞ்சம் ஓரமா நில்லுங்க
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.