Poco X2-வின் அடுத்த விற்பனை மார்ச் 3-ல் நடைபெறும்! 

விளம்பரம்
Kathiravan Gunasekaran, மேம்படுத்தப்பட்டது: 2 மார்ச் 2020 15:39 IST
ஹைலைட்ஸ்
  • Poco X2 பிப்ரவரி 11 அன்று, முதலில் விற்பனைக்கு வந்தது
  • இந்த போன் ரூ.15,999 விலையில் தொடங்கி ரூ.19,999 வரை செல்கிறது
  • ஃபீனிக்ஸ் ரெட் கலர் வேரியண்ட் மட்டுமே மார்ச் 3-ல் விற்பனை செய்யப்படும்

Poco X2, 120Hz உயர் புதுப்பிப்பு வீதக் டிஸ்பிளேவைக் கொண்ட முதல் பட்ஜெட் போனாகும்.

Photo Credit: Twitter/ Poco India

Poco X2 பிப்ரவரி தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் முறையாக விற்பனைக்கு வந்தது. இதுவரை, மொத்தம் மூன்று முறை விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் நிறுவனம் இப்போது நான்காவது விற்பனை மார்ச் 3-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது. முந்தைய விற்பனையுடன் ஒப்பிடும்போது நாளை விற்பனையானது "ஒப்பீட்டளவில் பெரிய பங்கு"-ஐக் கொண்டிருக்கும், இது அதன் "மிகப்பெரிய விற்பனையாக" மாறும். மார்ச் 3 விற்பனை, 'ஹெட் ஃபார் ரெட்' விற்பனை என அழைக்கப்படுகிறது. Poco X2-வின் பீனிக்ஸ் ரெட் வேரியண்டை மட்டுமே விற்பனை செய்யும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. 


இந்தியாவில் Poco X2 விலை, விற்பனை தேதி, சலுகைகள்: 

Poco X2-வின் அடிப்படை 6 ஜிபி ரேம் / 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.15,999-ல் இருந்து தொடங்குகிறது மற்றும் அதன் 6 ஜிபி ரேம் / 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.16,999 ரூபாயும், இறுதியாக அதன் டாப்-ஸ்பெக் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.19,999-யாகவும் உள்ளது.

மார்ச் 3, செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணிக்கு Poco X2 ஃபிளாஷ் விற்பனையை அறிவிக்கும் போது, ​​இந்த விற்பனையில் இன்னும் மிகப்பெரிய இருப்புகள் இருக்கும் என்றும் நிறுவனம் கூறியதுடன், ஐசிஐசிஐ கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.1,000 மதிப்புள்ள தள்ளுபடியை அறிவித்துள்ளது. இது பிளிப்கார்ட் வழியாக (via Flipkart) வாங்குவதற்கு கிடைக்கும்.

> Save the date! The biggest #POCOX2 sale is on its way.
>
> RT if you're ready to #HeadForRed. #SmoothAF
>
> Wishlist now: https://t.co/X56aa4wnQZ pic.twitter.com/M9pzLroNVu > > — POCO India (@IndiaPOCO) February 29, 2020

Poco X2 விவரக்குறிப்புகள்:

PocoX2, 120Hz IPS LCD டிஸ்பிளே (வகுப்பில் முதல்), டூயல் பஞ்ச்-ஹோல் முன் கேமரா மற்றும் ஹூட்டின் கீழ் ஒரு ஸ்னாப்டிராகன் 730G சிப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது, 27W ஃபாஸ்ட் சார்ஜருடன் 4,500 எம்ஏஎச் பேட்டரி வருகிறது.

இது பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்புடன், 64 மெகாபிக்சல் முதன்மை ஷூட்டர், 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சாரைக் கொண்டுள்ளது. Poco X2 Android 10-ஐ அடிப்படையாகக் கொண்டு போகோவிற்காக வடிவமைக்கப்பட்ட MIUI 11-ல் இயங்குகிறது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Strong specifications at attractive prices
  • Good overall performance and battery life
  • Still photos in the daytime look very good
  • Bad
  • Large and bulky
  • Ads and bloatware in the UI
  • Poor low-light video quality
 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 730G
Front Camera 20-megapixel + 2-megapixel
Rear Camera 64-megapixel + 2-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  2. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
  3. S25 Ultra: கேமரா, பேட்டரி, AI அம்சங்களுடன் மலிவான விலையில்! மிஸ் பண்ணிடாதீங்க!
  4. Dimensity 7060 சிப்செட்டுடன் Lava Storm Play 5G: கேமர்கள், பட்ஜெட் 5G-க்கு ரெடியா?
  5. கலக்கும் Realme C71: 50MP கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி - வேற லெவல் போன்
  6. Nothing-ன் புது அவதாரம்! Phone 3, Headphone 1: மாஸ் லான்ச்சுக்கு ரெடியாகுங்க
  7. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  8. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  9. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  10. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.