ஆப்பிள் மினிக்கு போட்டியாக 'ஒப்போ மினி'! 4 மாடல்களில் மிரட்ட வரும் Reno 15 சீரிஸ்! 7000mAh பேட்டரியா?

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 22 டிசம்பர் 2025 14:28 IST
ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் Reno 15, Reno 15 Pro, Reno 15 Pro Mini மற்றும் Reno 15C என 4
  • சீரிஸில் முதல் முறையாக ஒரு காம்பாக்ட் 'ப்ரோ மினி' மாடல் களமிறங்குகிறது.
  • 200MP மெயின் கேமரா மற்றும் 7000mAh வரை மெகா பேட்டரி வசதி.

Oppo X-இல் Reno 15 Series 5G மாடல்களில் ஒன்றின் நீலம் மற்றும் வெள்ளை வண்ணங்களை டீஸர் செய்துள்ளது.

ஒப்போ (OPPO) ரசிகர்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருந்த அந்த அறிவிப்பு ஒருவழியா வந்தாச்சு. ஒப்போ இந்தியா தனது எக்ஸ் (X) தளத்துல "எங்களுக்குப் பிடித்த சீரிஸின் புதிய சீசன்" அப்படின்னு சொல்லி Reno 15 Series 5G வருகையை அதிகாரப்பூர்வமா உறுதிப்படுத்தியிருக்காங்க. இந்த முறை வெறும் ரெண்டு போன் மட்டும் இல்லைங்க, மொத்தம் நாலு மாடல்கள் இந்தியாவுல லான்ச் ஆகப்போகுதுன்னு தகவல்கள் வெளியாகி அதிர வச்சிருக்கு.

இந்த சீரிஸ்ல Reno 15, Reno 15 Pro, அப்புறம் பட்ஜெட் வாசிகளுக்காக Reno 15C-னு மூணு மாடல்கள் இருக்கு. ஆனா, இதுல ஹைலைட்டே இந்த Reno 15 Pro Mini தான். இதுவரைக்கும் ஆப்பிள்ல தான் மினி மாடல்கள் பார்த்திருப்போம், இப்போ ஒப்போவும் ஒரு குட்டி சைஸ் பவர்ஃபுல் போனை கொண்டு வர்றாங்க. இதுல 6.32-இன்ச் AMOLED டிஸ்ப்ளே இருக்குமாம், கையில வச்சுக்க ரொம்ப வசதியா இருக்கும்.

சிறப்பம்சங்கள்னு பார்த்தா, இந்த சீரிஸ்ல கேமராவுக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. மெயின் கேமரா 200MP வரைக்கும் இருக்கும்னு சொல்லப்படுது. அதுவும் 3.5x ஆப்டிகல் ஜூம் மற்றும் 120x டிஜிட்டல் ஜூம் வசதியோட வரப்போகுது. இதனால தூரத்துல இருக்குற பொருளை கூட துல்லியமா போட்டோ எடுக்கலாம். வீடியோவுல 4K 60fps வசதியும் இருக்கும்.

பெரிய ஆச்சரியத்தை வச்சிருக்காங்க

பெர்பார்மன்ஸை பொறுத்தவரை, MediaTek Dimensity 8450 சிப்செட் அல்லது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. பேட்டரி விஷயத்துல ஒப்போ இந்த தடவை ஒரு பெரிய ஆச்சரியத்தை வச்சிருக்காங்க. என்ட்ரி லெவல் மாடலான Reno 15C-ல 7000mAh பேட்டரி வர வாய்ப்பு இருக்கு. மத்த மாடல்கள்ல 6200mAh பேட்டரியோட 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் இருக்கும்.

டிசைனை பொறுத்தவரை வழக்கமான ஒப்போ ஸ்டைல்ல 'கிளோயிங் டெக்ஸ்சர்' (Glowing Texture) மற்றும் மெட்டல் பிரேம்ல ரொம்ப பிரீமியமா இருக்கும். இந்தியாவுல இந்த போன்கள் ஜனவரி 2026-ன் முதல் வாரத்துல லான்ச் ஆக அதிக வாய்ப்பு இருக்கு.
இதோட ஆரம்ப விலை சுமார் ₹30,000-லிருந்து ஆரம்பிக்கலாம்னு கணிக்கப்படுது. அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட்ல இதோட மைக்ரோ-சைட் இப்போவே லைவ் ஆகிடுச்சு. ஒரு நல்ல கேமரா, நீண்ட நேர பேட்டரி பேக்கப், அப்புறம் ஸ்டைலிஷான லுக் வேணும்னு நினைக்கிறவங்க கண்டிப்பா இந்த Reno 15 சீரிஸை மிஸ் பண்ணாதீங்க!

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.