இந்தியாவில் விலை குறைந்தது ஓப்போவின் ஆர்17 ப்ரோ!

விளம்பரம்
Edited by Kavya Neelakandan, மேம்படுத்தப்பட்டது: 1 மார்ச் 2019 19:13 IST
ஹைலைட்ஸ்
  • கடந்த டிசம்பர் மாதம் ரூ.45,990க்கு ஓப்போ ஆர்17 அறிமுகமானது!
  • அமேசான் தளத்தில் உடனடியாக அமலாக்கப்பட்டுள்ளது!
  • ஓப்போ ஆர்17 போனுக்கு அமேசான் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் தந்துள்ளது!

6,000 ரூபாய் விலை குறைந்து தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் ஓப்போ ஆர்17 ஸ்மார்ட்போன் தனது முந்தைய விலையான 45,990 ரூபாயிலிருந்து 6000 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் வெளியீட்டை தொடர்ந்து இந்த திடீர் விலைகுறைப்பு அமலாக்கப்பட்டுள்ளது. 

6.4 இஞ்ச் ஹெச்டி திரை, 25 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா மற்றும் மூன்று பின்புற கேமராக்களுடன் இந்த போன் வெளியானது.

 இந்த புதிய விலை தள்ளுபடியுடன் ஓப்போ ஆர் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் அமேசானில் (ரூ.39,990)க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும் எக்ஸ்சேஞ்ஜ் முறையில் போன் வாங்குபவர்களுக்கு ரூ.13,400 வரை தள்ளுபடி அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 எமரால்டு பச்சை மற்றும் ரேடியன்ட் மிஸ்ட் நிறங்களில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓப்போ ஆர்17 ப்ரோ அமைப்புகள்:

ஆண்டுராய்டு 8.1 ஓரியோவில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம் வசதியை கொண்டுள்ளது. மேலே குறிப்பிட்டது போல் 6.4 இஞ்ச் திரைகொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் குவால்கம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸ்சரால் இயங்குகிறது. 

மேலும் அமோலெட் திரை மற்றும் 8ஜிபி ரேம் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 12/20 மெகா பிக்சல் சென்சாரும், 1.4 மைக்ரான் பிக்சல் சென்சாரும் கொண்டுள்ளது. முன்புற செல்ஃபி கேமராவை பொருத்தவரை இந்த ஆர் 17 ப்ரோ தயாரிப்பு ஸ்மார்ட்போன் 25 மெகா பிக்சலை கொண்டுள்ளது.

128ஜிபி சேமிப்பு வசதி, 3,700mAh பேட்டரி வசதி மற்றும் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜர் போன்ற பல முன்னனி அமைப்புகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Solid build quality
  • Good battery life
  • Insane charging speeds
  • Good cameras
  • Bad
  • Slow fingerprint scanner
  • 3D camera feature doesn’t work yet
 
KEY SPECS
Display 6.40-inch
Processor Qualcomm Snapdragon 710
Front Camera 25-megapixel
Rear Camera 12-megapixel + 20-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 3700mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2340 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Oppo R17 Pro price in India, Oppo R17 Pro specifications, Oppo
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  2. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
  3. S25 Ultra: கேமரா, பேட்டரி, AI அம்சங்களுடன் மலிவான விலையில்! மிஸ் பண்ணிடாதீங்க!
  4. Dimensity 7060 சிப்செட்டுடன் Lava Storm Play 5G: கேமர்கள், பட்ஜெட் 5G-க்கு ரெடியா?
  5. கலக்கும் Realme C71: 50MP கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி - வேற லெவல் போன்
  6. Nothing-ன் புது அவதாரம்! Phone 3, Headphone 1: மாஸ் லான்ச்சுக்கு ரெடியாகுங்க
  7. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  8. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  9. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  10. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.