இந்தியாவில் விரைவில் வெளியாகும் Oppo F15! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 31 டிசம்பர் 2019 10:39 IST
ஹைலைட்ஸ்
  • Oppo F15 அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்
  • வரவிருக்கும் ஓப்போ போனில் நேர்த்தியான கட்டமைப்பைக் கொண்டிருக்கும்
  • Oppo F15 அதிகாரப்பூர்வ டீஸர் படம் ஒரு பெரிய கேமரா தொகுதியைக் குறிக்கிறத

Oppo F15 ஒரு நேர்த்தியான மற்றும் ஸ்டைலான வடிவமைப்பை வெளிப்படுத்தும் என்று Oppo கூறுகிறது

அடுத்த ஆண்டு புதிய F-சீரிஸ் போனை இந்தியாவுக்குக் கொண்டுவர ஓப்போ தயாராக உள்ளது. Oppo F15 போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்போவதாக நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. Oppo F15 ஒரு நேர்த்தியான மற்றும் இலகுரக வடிவமைப்பைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், போனின் விவரக்குறிப்புகள் அல்லது அம்சங்கள் குறித்து எந்த விவரங்களையும் நிறுவனம் பகிர்ந்து கொள்ளவில்லை. இருப்பினும், டீஸர் படம் போனின் வடிவமைப்பை ஒரு பக்கத்திலிருந்து காட்டுகிறது.

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் இந்தியாவில் Oppo F15 போனின் ஒரு குறிப்பிட்ட வெளியீட்டு காலக்கெடுவை வெளியிடவில்லை. ஆனால், “2020-ல் ஒரு புதிய நேர்த்தியான F சீரிஸ் ஸ்மார்ட்போனுடன்” அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த போன் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்பதை தெளிவுபடுத்துகிறது. 

Oppo F15 ஒரு நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று ஓப்போ கூறுகிறது. மேலும் Oppo F-சீரிஸ் போன்களின் செல்ஃபிக்களில் கவனம் செலுத்துவதால், Oppo F15-ல் சக்திவாய்ந்த முன் கேமரா வன்பொருளையும் எதிர்பார்க்கலாம். ஓப்போ பகிர்ந்த டீஸர் படம் போனை ஒரு பக்கத்திலிருந்து காட்டுகிறது. பளபளப்பான ஃபினிஷுடன் போனைச் சுற்றி இயங்கும் curved metallic frame  தோன்றுவதை வெளிப்படுத்துகிறது. colour tone உடன் கூடிய பவர்-பொத்தானும் தெரியும்.

குறிப்பிடத்தக்க வகையில், போனில் ஒரு நீளமான கேமரா தொகுதி இருப்பதாகத் தெரிகிறது. இது செங்குத்தாக சீரமைக்கப்பட்ட லென்ஸ் வரிசையைக் கொண்டிருக்கும். Oppo F11 மற்றும் F11 Pro ஆகியவை இரட்டை பின்புற கேமராக்களுடன் பொருத்தப்பட்டிருக்கின்றன. எனவே Oppo F15 குறைந்தது இரண்டு பின்புற கேமராக்களைக் கொண்டிருக்கும் என்று கருதுவது பாதுகாப்பானது. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Oppo, Oppo F15
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO 15 Apex வண்ண விருப்பம் வெளியிடப்பட்டது, ஏப்ரல் 1 அன்று இந்தியாவில் அறிமுகம்
  2. ரியல்மி C100 5G: ஏப்ரல் அறிமுகம்!7000mAh பேட்டரி, 50MP கேமரா மற்றும் அதிரடி அம்சங்களுடன் கசிந்த விலை விவரங்கள்
  3. மெட்டா - ரே-பான் ஆப்டிக்ஸ் ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  4. அமெரிக்காவில் உள்ள கூகுள் AI அல்ட்ரா சந்தாதாரர்களுக்கு ஜிமெயிலின் 'AI இன்லாக்ஸ்' அம்சம் அறிமுகம்
  5. பிக்சல்10 ப்ரோவை விட மெல்லிய பெசல்களைக்(Bezels) கூகுள் பிக்சல்11 ப்ரோ கொண்டிருக்கலாம்: கசிந்த ரெண்டர்கள் தகவல்
  6. ரெட்மி 15A 5G vs ரியல்மி P4 ​​லைட் 5G vs சாம்சங் கேலக்ஸி M17e 5G: இந்தியாவில் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகள்
  7. iOS 26.5 பீட்டா 1 வெளியீடு: ஆப்பிள் மேப்ஸ்-ல் விளம்பரங்கள் மற்றும் RCS மெசேஜ் என்க்ரிப்ஷன் வசதி அறிமுகம்
  8. லாவா போல்ட் N2 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்: 5,000mAh பேட்டரி மற்றும் 50MP கேமராவுடன் பட்ஜெட் விலையில் வெளியீடு
  9. கூகுள் பிக்சல் 11 கசிவு: சிறிய வடிவமைப்பு மாற்றங்களுடன் வெளியாகிறது - சிஏடி (CAD) ரெண்டர்கள் மூலம் தகவல்
  10. ஐபோன் 18 ப்ரோ: சிறிய அளவிலான 'டைனமிக் ஐலேண்ட்' வசதியுடன் வெளியாகலாம் - தகவல்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.