ஒன்பிளஸ் போன்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி...! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 1 பிப்ரவரி 2020 12:48 IST
ஹைலைட்ஸ்
  • ஒன்பிளஸ் அதன் எந்த போனிலும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவை சேர்க்கவில்லை
  • ஒன்பிளஸ் எப்போதும் அதன் வயர்டு சார்ஜிங் சிறந்தது என்று கூறியுள்ளது
  • நிறுவனம் இப்போது தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டதாகத் தெரிகிறது

ஒன்பிளஸ் இந்த மாத தொடக்கத்தில் Wireless Power Consortium-ல் இணைந்ததாக தெரிகிறது

ஒன்பிளஸ் அதன் வரவிருக்கும் OnePlus 8-சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் வயர்லெஸ் சார்ஜிங்கைச் சேர்க்கலாம். OnePlus 8 Pro சமீபத்தில் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவைச் சேர்ப்பதாக வதந்தி பரவியது மற்றும் சமீபத்திய வளர்ச்சி அந்த நம்பிக்கையை மேம்படுத்துகிறது. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் வயர்லெஸ் பவர் கன்சோர்டியம் (WPC)-ல் இணைந்துள்ளார். இது வயர்லெஸ் சார்ஜிங் தரங்களின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு பொறுப்பான ஒரு குழுவாகும். ஒன்பிளஸ் அதன் ஸ்மார்ட்போன்களில் வயர்லெஸ் சார்ஜிங்கைச் சேர்க்கத் திட்டமிட்டால் கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. OnePlus 8-சீரிஸ் கிடைக்குமா, அல்லது OnePlus 8T வரிசை வரும் வரை நாம் காத்திருக்க வேண்டுமா என்பதுதான் கேள்விக்குறியாகவே உள்ளது.

குழுவின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்ட WPC உறுப்பினர்கள், ஒன்பிளஸ் இப்போது தரநிலைக் குழுவின் முழு உறுப்பினராக இருப்பதை வெளிப்படுத்தியது. இது, Apple, Samsung, LG, Oppo, HMD Global, Huawei, Asus மற்றும் பிற ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுடன் இணைகிறது. இந்த பட்டியலை முதலில் MobileScout.com கண்டறிந்தது.

OnePlus, பாரம்பரியமாக அதன் ஸ்மார்ட்போன்களில் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவைச் சேர்ப்பதில் இருந்து விலகி உள்ளது. அதன் போன்களை ஆக்ரோஷமாக விலை நிர்ணயம் செய்வதற்கு நிறுவனம் செலவினங்களைக் குறைக்க உதவும் ஒரு வழி இது என்று நம்பப்படுகிறது. ஆனால், வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்டவற்றைத் தவிர்ப்பதற்காக, நிறுவனம் அதன் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தின் வலிமையைக் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு MWC-ல் லாவ் (Lau) கூறியதாகக் கூறப்படுகிறது: “ஒன்பிளஸ் சார்ஞிங் மிகச் சிறந்த ஒன்றாகும். வயர்லெஸ் சார்ஜிங் மிகவும் குறைவானது".

OnePlus 8-சீரிஸ் போன்கள், வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவைப் பெறுகின்றனவா என்பதை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால், WPC-ல் சேர நிறுவனத்தின் முடிவு நிச்சயமாக அதன் ரசிகர்கள் மற்றும் நுகர்வோரால் வரவேற்கப்படும்.

OnePlus 8-சீரிஸைப் பற்றி வதந்திகள் மற்றும் கசிவுகள் சுட்டிக்காட்டியுள்ளதிலிருந்து, OnePlus 8 Pro நிறுவனம் ஏற்கனவே காட்டிய 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்பிளே வர வாய்ப்புள்ளது. கூடுதலாக, 5G ஆதரவு மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC-யின் இருப்பு எதிர்பார்க்கப்படுகிறது. 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent build quality, IP68 rating
  • Bright, fluid display
  • Very good rear cameras
  • Solid overall performance
  • Great battery life
  • Fast wireless charging
  • Bad
  • Selfie camera could be better
  • Excessive rear camera bulge
 
KEY SPECS
Display 6.78-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 48-megapixel + 5-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4510mAh
OS Android 10
Resolution 1440x3168 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Very good build quality
  • Vivid display
  • Excellent performance and software
  • Solid battery life
  • Decent camera performance
  • Bad
  • No IP rating or wireless charging
  • Low-light video could be better
  • 12GB variant isn’t great value
 
KEY SPECS
Display 6.55-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 16-megapixel + 2-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 4300mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: OnePlus, OnePlus 8 Pro, Wireless Power Consortium, WPC, Wireless Charging
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. அவசரம்! Realme GT 7, GT 7T போன்கள் ₹28,999-ல இருந்து ஆரம்பம் – இந்த பெஸ்ட் டீலை மிஸ் பண்ணாதீங்க!
  2. அறிமுகமானது Motorola Edge 60: 50MP கேமரா, 5500mAh பேட்டரி, MIL STD-810H - முழு விபரம் இதோ!
  3. Oppo K13x 5G: ₹15,999-க்குள்ளே லான்ச்! பிளாட் டிஸ்ப்ளே, 6000mAh பேட்டரி - கசிந்த முழு விபரம்!
  4. அறிமுகமாகிறது Vivo X Fold 5: -20°C குளிர்லையும் அசால்ட்டா இயங்கும்! அசத்தலான டிசைன் வெளியானது!
  5. அறிமுகமானது Huawei Band 10: 100 வொர்க்அவுட் மோட்ஸ், ஸ்போ2 கண்காணிப்பு - முழு விபரம் இதோ!
  6. அறிமுகமாகிறது Tecno Pova 7 Neo 4G: MediaTek Helio G100, 120Hz டிஸ்ப்ளே - முழு விபரம் இதோ!
  7. அறிமுகமானது OnePlus Pad 3: விலை, அம்சங்கள், பவர்ஃபுல் ப்ராசஸர் – முழு விபரம் இதோ!
  8. அறிமுகமானது OnePlus 13s: கலர் ஆப்ஷன்கள், அம்சங்கள், விலை - முழு விபரம் இதோ!
  9. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  10. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.